![]() |
|
தவளை தன் வாயால்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: தவளை தன் வாயால்... (/showthread.php?tid=7950) |
தவளை தன் வாயால்... - சாமி - 10-21-2003 தன் டிரைவரிடம் "ஏம்பா, எனக்கு ஒரு ஆசை. ஒரு கோடீஸ்வரன் என் டிரைவரா இருக்கணும். நீ ஒரு படம் பண்ணி கோடீஸ்வரனாகு' என்று மம்முட்டி சொல்ல, டிரைவரோ, "எசமான் ஜோக்கு காட்டுறாரு' என்று சிரித்து வைத்தாராம். மம்முட்டியோ, "சீரியஸா சொல்றேன். நீ படம் பண்ணு' என மீண்டும் வற்புறுத்தியுள்ளார். "படம் பண்ண பணத்துக்கு எங்க போவேன்? எனக்கு யாரு கால்ஷீட் தருவா' என்று பதில் தந்திருக்கிறார் டிரைவர். "பணம், என்னப்பா பணம்? நானே பைனான்ஸ் பண்றேன்! நீ பிச்சர ஸ்டார்ட் செய்யி' என்று மம்முட்டி வாக்குறுதி தர உற்சாகமான டிரைவர், "எசமான்... பைனான்ஸ் ரெடி. அப்படியே உங்க செல்வாக்கை பயன்படுத்தி மோகன்லால் அண்ணன்கிட்டே கால்ஷீட் வாங்கி குடுத்திட்டீங்கன்னா, நான் கோடீஸ்வரனாயிடுவேன். உங்க ஆசையும் நிறைவேறும்' என்று ஒரே போடாக போட, அதே இடத்தில் டிரைவரை இறக்கி விட்டு விட்டு காரில் சீறிப் பாய்ந்து விட்டாராம் மம்ஸ். —சி.பொ., நன்றி: தினமலர் |