![]() |
|
அறிமுகம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: அறிமுகம் (/showthread.php?tid=7941) |
அறிமுகம் - E.Thevaguru - 10-23-2003 வணக்கம். நான் இக்களத்திற்கு புதியவன். உங்கள் எல்லோரிலும் வயது கூடியவனாக இருப்பேன் என எண்ணுகின்றேன் ஓரு நாளைக்கு பல மணித்தியாலங்களை இணையத்தில் செல்வழிப்பேன். தமிழில் அதிகம் ரைப்பண்ண வராது. முடிந்த வரை முயற்சிக்கின்றேன் கணிணி பற்றி நிறைய ரிப்ஸ் தரவேண்டும் என ஆவல். பிள்ளைகள் அழைத்த்தின்பேரில் இரு வருடங்களின் முன் ஸ்பொன்சரில் வந்து அவர்களுக்கு உதவி செய்துகொண்டு ஒரு பல்கலாச்சார நாட்டில் இருக்கின்றேன் நன்றி - tamilchellam - 10-23-2003 இக்களம் சார்பில் இனிதே தங்களை வரவேற்றுக் கொள்கிறோம். களத்தில் பல சிறந்த கருத்துக்களை முன் வைத்து... மேலும் சிறப்படைய செய்வீர்கள் என நம்புகிறேன். நட்புடன், தமிழ்செல்லம். - P.S.Seelan - 10-24-2003 வணக்கம தேவ குரு அவர்களே. வயது ஒரு வரம்பே யில்லை. உங்கள் ஆக்கங்களையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம். வயதின் முதிர்ச்சியால் பலது அறிந்திருப்பீர்கள். எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன் சீலன் - ganesh - 10-24-2003 வணக்கம் தேவகுரு அவர்களே தங்களை வருக வருக என வரவேற்கிறேன் மேலும் தங்களின் தகவல்மூலம் வயதில் மூத்தவர் என நினைக்கிறேன் இந்த கருத்துக்களத்தில் புலம் என்ற தலைப்பின் கீழ் புலம்பெயர் முதியவர்கள் என்ற கருத்தை வைத்துள்ளேன் இதில் தாங்கள் தங்கள்கருத்துக்களையும் முன்வைப்பீர்கள் என எண்ணுகிறேன நன்றி கணேஸ் நெதர்லாந்து |