![]() |
|
சிவாந்தி வானொலியில் ஒரு வரலாறு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: சிவாந்தி வானொலியில் ஒரு வரலாறு (/showthread.php?tid=7920) |
சிவாந்தி வானொலியில் ஒ - AJeevan - 10-26-2003 [b]<span style='font-size:25pt;line-height:100%'>சிவாந்தி வானொலியில் ஒரு வரலாறு</span> <img src='http://geethavani.homestead.com/files/siva2.jpg' border='0' alt='user posted image'> <span style='color:red'>அலுவலக இலக்கம் 00442087950045 வாழ்த்துவதற்குரிய இலக்கம் 00442087950040. ஓவ்வொருவருக்கும் வரலாற்றில் ஒரு இடம் உண்டு. ஆனால் வரலாறு ஒரு சிலரை மட்டுமே பதிவு செய்கிறது. இன்று சிவாந்தியின் பெயரையும் வரலாறு பதிவு செய்துள்ளது. வானலையில் மரதன் நிகழ்த்துகிறார் சிவாந்தி ஐரோப்பியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (ETBC) உலக சாதனை ஒன்றை நிகழ்த்த தயாராகி உள்ளார் சிவாந்தி சிவசுப்பிரமணியம். தொடர்ந்து 122 மணித்தியாலங்கள் நேரடி ஒலிபரப்பில் உரையாடி உலக சாதனையை நிலைநாட்ட இவர் திட்டமிட்டு உள்ளார். ஒக்ரோபர் நடுப் பகுதிவரை அதற்கான பயிற்சியை மேற்கொண்ட சிவாந்தி தொடர்ந்து 5 நாட்கள் நித்திரையின்றி உரையாடல் செய்துள்ளார். ஒக்ரோபர் மாதம் 25 காலை 10 மணிக்கு சாதனைக்கான போட்டியில் சிவாந்தி குதித்துள்ளார். அவரது 122 மணிநேர மரதன் உரையாடல் நேரடி ஒலிபரப்பு ஒக்ரோபர் 30ம் திகதி மதியம் 12 மணிக்கு முடிவடையும். போட்டி விதிகளின் படி அவர் ஒவ்வொரு 8 மணிநேரத்திற்கும் 15 நிமிடங்களே ஓய்வெடுக்க அனுமதிக்கப்படுவார். 5 நாட்கள் தொடர்ச்சியாக நித்திரையின்றி தனது சாதனையை நிலைநாட்ட அவரது தயார் உணர்ச்சிகரமாக ஆசி வழங்கினார். இந்தத் தமிழிச்சியின் சாதனை தமிழர்களுக்கு எல்லாம் பெருமை பெற்றுத் தருவதாக டொக்டர் சத்தியமூர்த்தி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து வாழ்த்தினார். உலகில் சிலர் சாதனை செய்கிறார்கள் பலர் அந்த சாதனைக் காலத்தில் வாழ்ந்ததில் பெருமைப்படுகிறார்கள் என்று குறிப்பிட்ட சக அறிவிப்பாளர் கண்ணன் தான் சிவாந்தியின் காலத்தில் வாழ்ந்ததற்காகப் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார். தமிழ்த் தொலைக்காட்சி கொட்பேட் இணைப்பை வைத்திருப்பவர்கள் ETBC வானொலி நேரடி நிகழ்ச்சியில் தொலைபேசி மூலம் இணைந்து சிவாந்தியை உற்சாகப்படுத்தி அவரது சாதனைக்கு உதவ முடியும். குறிப்பாக போட்டியின் இறுதி நாட்களில் இரவு வேளையில் அவர் சோர்வடையாமல் இருக்க உங்கள் அழைப்பு மிகவும் உதவி செய்யும். சிவாந்தியின் முயற்சிக்கு உங்கள் சாபாஷ் பயனுள்ளதாக இருக்கும். இந்த சாதனை நிகழ்ச்சி மூலம் சேர்ககப்படும் நிதியை ஈழத்தில் உள்ள ஊணமுற்றவர்களுக்கு செயற்கை உறுப்புகள் பொருத்துவதற்காக வழங்க உள்ளதாக சிவாந்தி அறிவித்து உள்ளார். அவரின் முயற்சிக்கு உலகெங்கும் இருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளது. சிவாந்திக்கு தேசம் சஞ்சிகையின்; மனமார்ந்த வாழ்த்துக்கள். [size=15]யாழ் களத்தின் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.</span> செய்தியை அனுப்பிய லண்டன் தேசம் சஞ்சிகைக்கும் ஆசிரியர் தேசம் த ஜெயபாலனுக்கும் நன்றி. Quote:யாழ் இணையத்தில் சிவாந்தியின் சாதனை பற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்தேன்.மகிழ்ச்சி.நேயர்கள் பங்கு பற்றுவதற்கு உதவியாக தொலைபேசி இலக்கங்களையும் கொடுத்தால் நல்லது தானே. அவற்றை இங்கு தருகின்றேன். அலுவலக இலக்கம் 00442087950045 வாழ்த்துவதற்குரிய இலக்கம் 00442087950040. இவற்றையும் இணையத் தளத்தில் சேர்த்து விடுங்கள். நன்றி கிருபானந்தன் அவர்களே.......... அஜீவன் - sOliyAn - 10-26-2003 சிவாந்தி சாதனை புரிய வாழ்த்துக்கள்! - AJeevan - 10-26-2003 யாழ் இணையத்தில் சிவாந்தியின் சாதனை பற்றி நீங்கள் எழுதியதைப் பார்த்தேன்.மகிழ்ச்சி.நேயர்கள் பங்கு பற்றுவதற்கு உதவியாக தொலைபேசி இலக்கங்களையும் கொடுத்தால் நல்லது தானே. அவற்றை இங்கு தருகின்றேன். அலுவலக இலக்கம் 00442087950045 வாழ்த்துவதற்குரிய இலக்கம் 00442087950040. இவற்றையும் இணையத் தளத்தில் சேர்த்து விடுங்கள். என்றென்றும் அன்புடன் வை.சி.கிருபானந்தன் vai_cee_ki@freesurf.ch - shanthy - 10-26-2003 சிவாந்தி சாதனை புரிய வாழ்த்துக்கள். - nalayiny - 10-26-2003 சிவாந்திக்கு எனது வாழ்த்துக்கள்.. வெற்றியோ Nதூல்வியோ அது பிரச்சனை இல்லை. ஆனா இத்தகைய தொரு செயலில் இறங்குவதற்கு இத்தகைய துணிவும் மனவைராக்கியமும் செய்து முடிப்பேன் ஒன்ற ஓர்மமும் வந்திருக்கே. அந்த மன உறுதி நிச்சயமாக வெற்றியை ஈட்டித்தரும். - kuruvikal - 10-26-2003 முன்னரும் எங்கோ இப்படி இரு சாதனை நிகழ்ந்ததாமே....கனடாவோ...அவுஸ்திரேலியாவோ...அதை முறையடிக்கும் சாதனையோ....எதுவோ முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள்...! - Kanani - 10-27-2003 முயற்சி திருவினையாக வாழ்த்துக்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- AJeevan - 10-27-2003 <span style='font-size:23pt;line-height:100%'>சிவாந்தியின் சாதனை வெற்றி பெற அனைவரும் வேண்டுவோம். சிவாந்தி,........... உங்களுக்கு எமது பலமும் சேர்ந்து உங்கள் உடலுக்கும் , உள்ளத்துக்கும் பலமும் , சக்தியும் கிடைக்க வேண்டுகிறோம். உங்கள் பக்கத்தில் நாங்கள் இல்லாவிடினும், உள்ளத்தால் உங்கள் பக்கத்தில் நிற்கிறோம். உங்கள் வெற்றிக்காக அனைவருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறோம்.</span> <span style='font-size:26pt;line-height:100%'> முயற்சி திருவினையாகும்.</span> புதிய தகவல்:- இன்று 27.10.03, பி.ப.12.00 மணிக்கு சிவாந்தி 50 மணித்தியாலங்கள் தொடர்ந்து காற்றலைகளில் பேசி சாதனைகயை தொடர்ந்து கொண்டிருக்கிறார். சிவாந்தியின் சாதனை படங்கள் கீழே:- http://www.etbclondon.com/anbu.html அன்புடன் அஜீவன் - Paranee - 10-27-2003 முகமறியா குரலறியா அன்புச்சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் வென்றுவருவாய் நீ ! அன்பு உள்ளங்கள் வாழ்த்துக்கள் உன் வெற்றிக்கு உரமாகும் வெல்க வெல்க தமிழ்புகழ்மணம் பரப்பி வெல்க தகவல்தந்த அஜீவன் அண்ணாவிற்கும் நன்றிகள் |