![]() |
|
வீரம் வெல்லும் வேளையிது - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வீரம் வெல்லும் வேளையிது (/showthread.php?tid=789) |
வீரம் வெல்லும் வேளையிது - Thaya Jibbrahn - 02-19-2006 வீரம் வெல்லும் வேளையிது ஈழம் பெறும் காலமிது சுற்றப் பகை நாமழித்து முடிசூடும் நேரமிது (வீரம்) வெற்றிதரப் பிறந்து வரும் புத்தாண்டடா வெல்லும் வழி சொல்லுகின்ற தமிழ் ஆண்டடா (வேறு) அண்ணன் ஆணைக்கே தாள் பணிந்தோம் வெல்லும் நாளுக்கே வாழ்த்துரைப்போம் வாழ்வென்றால் இது வாழ்வுமில்லை போரென்றால் இது போருமில்லை வாழ்வும் சாவும் எமக்கொன்றே மானம் தானெங்கள் வரலாறே வெல்வோம் நாமெங்கள் தாய்மண்ணே ஆள்வோம் தமிழர்கள் எங்கள் மண்ணே போரென்றால் புலிவீரம் பேசும் பேச்சென்றால் தமிழ் மானம் பேசும் ஏய்த்து மாய்த்த காலம் போச்சே எங்கள் தலைவரின் காலம் ஆச்சே அண்ணன் இடுவான் ஆணையொன்றே ஆணை முடிப்போம் பகையை வென்றே <span style='font-size:14pt;line-height:100%'>சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்விற்காக எழுதப்பட்டது.</span> - RaMa - 02-20-2006 போரென்றால் புலிவீரம் பேசும் பேச்சென்றால் தமிழ் மானம் பேசும் ஏய்த்து மாய்த்த காலம் போச்சே எங்கள் தலைவரின் காலம் ஆச்சே அண்ணன் இடுவான் ஆணையொன்றே ஆணை முடிப்போம் பகையை வென்றே ******* வீரார் வீரம் பேசும் உங்கள் கவிதை நன்றாய் இருக்கின்றது. நன்றிகள் இங்கு இணைத்தமைக்கு. - இளைஞன் - 02-21-2006 Quote:வாழ்வென்றால் இது வாழ்வுமில்லை நல்லா இருக்கு தயா. உணர்வுபொங்க வாசிக்கக்கூடிய வரிகள். தொடர்ந்தும் எழுதுங்கள். - iniyaval - 02-21-2006 நன்றாக உள்ளது. நன்றிகள் இங்கு இணைத்தமைக்கு. - அனிதா - 02-21-2006 Quote:வெல்வோம் நாமெங்கள் தாய்மண்ணே அனைத்து வரிகளும், அருமையா இருக்கு தயா, தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- DV THAMILAN - 02-22-2006 கவிதை நல்லாக இருக்கிறது.... - கறுப்பன் - 02-22-2006 உணர்வுபொங்க வாசிக்கக்கூடிய வரிகள். தொடர்ந்தும் எழுதுங்கள். - சந்தியா - 02-22-2006 அருமை வாழ்த்துக்கள் இன்றைய காலத்திற்கேற்ப கவி |