Yarl Forum
பங்களாதேஷ் போயிருக்கும் இலங்கையணி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: விளையாட்டு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=41)
+--- Thread: பங்களாதேஷ் போயிருக்கும் இலங்கையணி (/showthread.php?tid=787)



பங்களாதேஷ் போயிருக்கும் இலங்கையணி - MUGATHTHAR - 02-20-2006

<b>பங்களாதேஷ் போயிருக்கும் இலங்கையணி</b>

அடுத்தடுத்து பல தோல்விகளை பெற்று கிரிக்கெட் ரசிகர் மத்தியில் ஒரு இளக்காரமான அணியாக மாறியிருக்கும் இலங்கையணி புதிய உற்சாகத்தை பெறும் விதத்தில் பங்களாதேஷ் போயிருக்கிறது என இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எண்ணுகிறார்கள் ஆனால் இப்போ பங்களாதேஷ் அணிக்கு பயிச்சியாளராக இருப்பவர் முன்னர் இலங்கையணி உலகக் கோப்பையை எடுப்பதுக்கு காரணமாக இருந்த இலங்கையின் பழைய பயிற்சியாளர் வோட் மூர். இலங்கையின் முன்னணி ஆட்டக்காரரின் நெளிவு சுழிவுகள் அவருக்கு தெரிந்திருக்கும் அந்த வகையில் இலங்கைக்கு இந்த போட்டிகளும் பெரும் சோதனைக்குரியதுதான்
அதற்காக அவரால் பயிற்றிவிக்கபட்ட <b>சமிந்தா வாஸ் அதபத்து முரளி</b>(ஒருநாள் போட்டியில் மாத்திரம்) இந்த போட்டிகளில் பங்குபற்றாமல் புதியவர்களை விட்டிருக்கிறது இலங்கையணி இது எந்த அளவில் சாத்தியம் எண்டு இருந்து பாப்போம்
3 ஒருநாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பங்குகொள்ள இருக்கும் இலங்கையணிக்கு தலைவராக <b>மகில ஜெயவர்தனாவும் </b>உபதலைவராக <b>சங்கக்காராவும்</b> நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் முதலாவது ஒருநாள் போட்டி இன்று Bogra பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது
<b>One-Day</b>

<i><b>*Mahela Jayawardene +Kumar Sangakkara Upul Tharanga
Sanath Jayasuriya Jehan Mubarak Tillakaratne Dilshan
Chamara Kapugedera Farveez Maharoof Hasantha Fernando Dammika
Prasad Dilhara Fernando Ruchira Perera Akalanka
Ganegama Malinga Bandara Kaushal Lokuarachchi</b></i>


- samsan - 02-20-2006

இங்க இருக்கிறதால இந்த கிரிக்கட்டை பார்க்கமுடியவில்லை. அதனால் தயவுசெய்து அப்படியே அந்த போட்டி வர்ணனையும் முகத்தார் செய்தால் புண்ணியமாக போகும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 02-21-2006

<b>பங்களாதேஷ் Vs சிறீலங்கா 1வது ஒருநாள் போட்டி </b>

<b>சிறீலங்கா 5 விக்கட்டுகளால் <span style='font-size:25pt;line-height:100%'>வெற்றி </b></span>

பங்களாதேஷ் சிறீலங்கா அணிகளுக்கிடையிலான 1வது ஓருநாள் போட்டி நேற்று <b>Bogra District Stadium </b>. ல் .பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது முதலில்துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மிகவும் பரிதாபமாக 35.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து <b>118</b>ஒட்டங்களை மாத்திரமே பெற்றது இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர்களான <b>பெரோரா(23/3) மற்றும் மாரூவ் (30/3) </b>திறமையாக பந்து வீசினார்கள் பங்களாதேஷ் அணி சார்பாக
<b>Khaled Mahmud - 36runs</b>

இதுக்கு பதிலளித்தாடிய சிறீலங்கா அணி 24.1ஓவர்களில் 5விக்கட்டுகளை மாத்திரமே இழந்து <b>119</b>ஓட்டங்களை பெற்று மிகவும் இலகுவான வெற்றி ஒன்றை தமதாக்கிக் கொண்டனர் சிறீலங்கா அணியில்
<b>KC Sangakkara -50runs
*DPMD Jayawardene -37runs*</b>

<i><b>ஸ்கோர்</b></i>

<b>பங்களாதேஷ் -118 ஓட்டங்கள்(35.5ஓவர்)
சிறீலங்கா -119/5

http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._20FEB2006.html
ஆட்ட நாயகன் - [b]PDRL Perera (7-1-23-3)</b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59400/59450.jpg' border='0' alt='user posted image'>
<b>Ruchira Perera runs into bowl</b>


- MUGATHTHAR - 02-22-2006

<b>பங்களாதேஷ் - சிறீலங்கா 2வது ஒருநாள் போட்டி </b>


<span style='font-size:25pt;line-height:100%'>பங்களாதேஷ் 4 விக்கட்டுகளால் அபார வெற்றி </span>


<i><b>சிறீலங்கா நாட்டுக்கு பிடிச்ச சனியன் அரசியலிலை மாத்திரமல்ல விளையாட்டிலும் தன்ரை வேலையை காட்டுது. . .நல்ல விசயம் </b></i>

இன்று <b>Shaheed Chandu Stadium, Bograல் </b>நடந்து முடிந்த பங்களாதேஷ் சிறீலங்கா அணிகளுக்கிடையிலான 2வதும் ஒருநாள் போட்டியில் <b>பங்களா தேஷ் 4 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது</b>

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடு மாறு சிறீலங்காவை பணித்தது 49ஓவர்களாக நிர்ணைக்கப்பட்ட போட்டியில் சிறீலங்கா அணி பெரிதாக ஓட்டங்களை எடுக்கவில்லை முழுமையாக 49ஓவர்களும் முடிந்த நிலையில் சகல விக்கட்டுகளையும் இழந்து வெறும் <b>212</b>ஓட்டங்களையே பெற்றது அணி சார்பாக

<b>S.Jeyasuriya - 96runs </b>மாத்திரம் அதி கூடிய ஓட்டங்களை எடுத்தார்

இதற்கு பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி மிகவும் நிதானமாக விளையாடி 47ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து <b>213</b>ஒட்டங்களை பெற்று கிரிக்கெட் வரலாற்றில் தங்களுக்கு ஒரு இடமிருக்கு என்பதை நிரூபித்துள்ளார்கள் பங்களாதேஷ் அணி சார்பாக

<b>Mohammad Ashraful -51runs
Javed Omar -40runs
Aftab Ahmed -32runs*</b>

<i><b>ஸ்கோர் விபரம்</b></i>

<b>சிறீலங்கா - 212 ஓட்டங்கள் (49 ஓவர்கள்)
பங்களாதேஷ் - 213/6

http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._22FEB2006.html

ஆட்ட நாயகன் : [b]Aftab Ahmed-32runs* &24/1</b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59500/59510.jpg' border='0' alt='user posted image'>
<b>Aftab Ahmed -06 - 0 - 24 - 01</b>
<i>3 ஒருநாள் போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் சிறீலங்கா அணியும் 2வது போட்டியில் பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்றதால் 25ம் திகதி நடைபெற இருக்கும் 3வது போட்டி மிகவும் முக்கியமாதொன்றாகும் </i>


- MUGATHTHAR - 02-25-2006

<b>பங்களாதேஷ் - சிறீலங்கா 3வது ஒருநாள் போட்டி </b>

<b>சிறீலங்கா 78 ஓட்டங்களால் <span style='font-size:25pt;line-height:100%'>வெற்றி </b></span>

<i>அப்பாடி ஒரு மாதிரியா சிறீலங்கா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று 2 : 1 என்ற அடிப்படையில் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டது </i>

இன்று <b>Chittagong Divisional Stadiumல் </b>நடந்து முடிந்த பங்களாதேஷ் இலங்கை அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 78ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது

இந்த முறையும் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி இலங்கை யணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கையணி அடுத்தடுத்து ஆரம்ப துடுப்பாட்டகாரரை இழந்தாலும் <b>சங்கக்காரா-(109) மகில-(51) லோக்குஆராச்சி-(69)</b> ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50ஓவர்கள் முடிவில் 7விக்கட்டுகளை இழந்து <b>309</b> என்ற ஒரு பெரிய ஓட்ட எண்ணிக்கையை பெற்றது அணி சார்பாக

<b>KC. Sangakkara - 109runs
MPMD. Jayawardene - 51runs
KS.Lokuarachchi - 69runs (57balls- 6x3 4x4)
MF.Maharoof - 27runs (09balls- 6x3 4x1)</b>

310ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய பங்களாதேஷ் அணி மிகவும் நிதானமாக விளையாடிய போதிலும் இலங்கை வீரர்களின் பந்து வீச்சில் ஓட்டங்களை எடுக்க முடியாமல் தடுமாறினார்கள் இறுதியாக 50ஓவர்களில் 9 விக்கட்டுகளையும் இழந்து <b>231</b>ஒட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது பங்களாதேஷ் அணி சார்பாக

<b>Mohammad Ashraful - 64runs </b>

<i><b>ஸ்கோர் விபரம்</b></i>

<b>சிறீலங்கா - 309/7 (50 ஓவர்கள்)
பங்களாதேஷ் - 231/9
http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames..._25FEB2006.html

[b]ஆட்ட நாயகன் : KC. Sangakkara - 109runs</b>
<b>தொடர் ஆட்ட நாயகன் : KC. Sangakkara </b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59600/59611.jpg' border='0' alt='user posted image'>

<b><i>நீண்ட நாட்களுக்கு பின் வெற்றிக் கிண்ணமொண்றை பெற்ற இலங்கையணிக்கு வாழ்த்துக்கள் </i></b>


- SUNDHAL - 02-25-2006

வாழ்த்துக்கள்.............இலங்கை அணிக்கு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 02-26-2006

செத்த பாம்புக்கு அடிச்சுட்டு வீராப்பு பேசுறாங்க இலங்கை அணி,, இருந்தாலும் பங்களாதேஸ் அணி நன்றாக விளையாடி இருக்கிறது, ஒரு போட்டியில் இலங்கை அணியை திணறடித்துவிட்டார்கள்,, 2003,2004 இல இருந்த இந்திய அணிமாதிரி இருந்த பங்களாதேஸ் அணி, நியுசிலாந்த் அணி மாதிரி வந்துகொண்டு இருக்கு,,, வாழ்த்துக்கள்,,,,

சங்கக்கார இல்லையெண்டால் இலங்கை அணி கென்யா அணிதான்,,, :oops: