![]() |
|
தமிழகராதி புதுச்சொற் புகுத்தல் - ஆர்வமுள்ளோர் முன்வரவும் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20) +--- Thread: தமிழகராதி புதுச்சொற் புகுத்தல் - ஆர்வமுள்ளோர் முன்வரவும் (/showthread.php?tid=7857) Pages:
1
2
|
தமிழகராதி புதுச்சொற - Sarangan - 11-06-2003 தமிழகராதி புதுச்சொற் புகுத்தல் - ஆர்வமுள்ளோர் முன்வரவும் - vasisutha - 11-06-2003 Smilies என்பதற்கு என்ன சரியான தமிழ் சொல் என யாராவது அறியத்தாருங்கள்? :?: - Ilango - 11-06-2003 - Paranee - 11-06-2003 எங்கே இளங்கோவின் கருத்தை காணவில்லை......... <img src='http://www.gifs.net/animate/d_016.gif' border='0' alt='user posted image'> - poorukki - 11-06-2003 மேசை என்ற சொல்லுக்கு தமிழ்சொல் தெரிந்தோர் அறியத்தாருங்கள் - kuruvikal - 11-06-2003 நிச்சயமா ரேபிள்(Table இல்லை)... :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 11-06-2003 poorukki Wrote:மேசை என்ற சொல்லுக்கு தமிழ்சொல் தெரிந்தோர் அறியத்தாருங்கள்புட்டுவம்? நாற்காலி?
- AJeevan - 11-06-2003 sOliyAn Wrote:poorukki Wrote:மேசை என்ற சொல்லுக்கு தமிழ்சொல் தெரிந்தோர் அறியத்தாருங்கள்புட்டுவம்? நாற்காலி? புட்டுவம் என்பது போர்த்துகேசீய மொழியிலிருந்து சிங்களத்துக்கு புட்டுவ என மருவி வந்த சொல். தமிழ் இனி மெல்லச் சாகாது............ - sOliyAn - 11-07-2003 அப்ப தொடங்கவேண்டியதுதான்.. அட்ரா அட்ரா அட்ரா.. மேசை தமிழ் இல்லை என்று யார் சொன்னது.. இழுத்து வாருங்கள் அவரை.. மின்கம்பம் காத்திருக்கிறது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Ilango - 11-07-2003 AJeevan Wrote:புட்டுவம் என்பது போர்த்துகேசீய மொழியிலிருந்து சிங்களத்துக்கு புட்டுவ என மருவி வந்த சொல். புட்டுவம்,? புட்டுவ? போர்த்துகேசு சொல்லா???? அப்படி இருக்காது என்று நினைக்கிறேன். போர்த்துக்கேசில் எப்படி எழுதுவார்கள் ? - yarl - 11-07-2003 இதிலிருந்து யோசிக்கவேண்டிய விடயம்.தமிழர்கள் காலனித்துவ ஆட்சி வரமுதல் கதிரை மேசை பாவித்தார்களா என.... அப்படி ஒன்று இல்லபாதபடியால்தான் அவர்கள் சொற்களை அப்படியே எடுத்துக்கொண்டார்கள்??? - yarl - 11-07-2003 இது போர்த்துக்கல் கதிரை a cadeira - AJeevan - 11-07-2003 யாழ்/yarl Wrote:இது போர்த்துக்கல் கதிரை யாழ் உங்கள் விளக்கம் சரி. ஆனால் புட்டுவ என்பது சிங்கள மொழியில் நாற்காலிக்கு பாவிக்கப்படும் சொல். சிலாபம் முதல் நீர் கொழும்பு வரை வாழும் கரையோர பரவர்(பரவியோர்) எனப்படும் தமிழர்கள் பெரும்பாலும் நாற்காலியை புட்டுவம் எனத்தான் அழைக்கிறார்கள். இது எந்த மொழியிலிருந்து வந்தது? - ganesh - 11-07-2003 கட்டுமரம் என்ற சொல் டச்சில் இருந்து தமிழுக்கு வந்ததா அல்லது தமிழில் இருந்து டச்சுக்கு வந்ததா - nalayiny - 11-07-2003 தனித்து எங்கள் மொழியில் மட்டும் வேற்று இனத்தவரின் மொழி ஆதிக்கம் உள்ளது என நினைப்பது தவறு. பிரெஞ்சு மொழியிலும் பல அப்படியான நிலையில் தான் உள்ளது. சில சொற்கள் பிரெஞ்சல்லாத சொற்கள் பாவனையில் உள்ளது. கிரேக் நாட்டு சொல்லின் ஆதிக்கம்தான் அதிகம் உள்ளது.(இவர்கள் இச்சொல் கிரேக் சொல் என அச்சொற்களை சொல்லி மிகவும் மதிப்பதைக் காணக் கூடியதாக உள்ளது) - sOliyAn - 11-07-2003 யாழ்/yarl Wrote:இதிலிருந்து யோசிக்கவேண்டிய விடயம்.தமிழர்கள் காலனித்துவ ஆட்சி வரமுதல் கதிரை மேசை பாவித்தார்களா என....மன்னர்கள் எல்லோரும் கதிரை மேசை இல்லாமலா ஆட்சி செய்தார்கள்.. சிம்மாசனத்தில் இருந்தல்லவா ஆண்டார்கள். சிம்மாசனம் = சிருங்கார ஆசனம். இங்கே ஆசனம் என்பதுதானே கதிரையைக் குறிக்கிறது. நாற்காலி பொதுவான சொல்தானே. அது எவ்வாறு கதிரையைமட்டும் குறிக்கும்.. மேசைக்கு ஏன் பொருந்தாது.. கோர்க்காலி என்றொரு தளபாடம் வீடுகளில் இருந்ததை ஞாபகப் படுத்தலாம். கோர்த்த கால்கள் கோர்க்காலி. கோக்காலி என்றும் சொல்லுவார்கள். மேசை வடிவில் பெரிதாக இருக்கும். நெல் மூட்டைகள்.. வேறு பல பொருட்களை வைக்கப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு மேசையையும் குறிக்க சொற்கள் இருக்கலாம். எமது தேடல்கள் போதவில்லை.. அல்லது ஆர்வம் போதவில்லை. தேடல்கள் போதாது என்பதற்கு ஒரு உதாரணம்.. lighthause என்பதை நேரடியாக மொழிபெயர்த்து 'வெளிச்சவீடு' என்கிறார்கள். ஆனால் கலத்துக்கு கரைகாட்டும் விளக்கு என்ற அர்த்தத்தில் 'கலங்கரைவிளக்கு' என்ற சொல் ஏற்கெனவே உள்ளதே. இவ்வாறு தேடல்கள் இல்லாவிட்டால் இரவல்கள்தான் உள்நுழையும். - AJeevan - 11-07-2003 sOliyAn Wrote:[quote=யாழ்/yarl]இதிலிருந்து யோசிக்கவேண்டிய விடயம்.தமிழர்கள் காலனித்துவ ஆட்சி வரமுதல் கதிரை மேசை பாவித்தார்களா என....மன்னர்கள் எல்லோரும் கதிரை மேசை இல்லாமலா ஆட்சி செய்தார்கள்.. சிம்மாசனத்தில் இருந்தல்லவா ஆண்டார்கள். சிம்மாசனம் = சிருங்கார ஆசனம். இங்கே ஆசனம் என்பதுதானே கதிரையைக் குறிக்கிறது. நாற்காலி பொதுவான சொல்தானே. அது எவ்வாறு கதிரையைமட்டும் குறிக்கும்.. மேசைக்கு ஏன் பொருந்தாது.. கோர்க்காலி என்றொரு தளபாடம் வீடுகளில் இருந்ததை ஞாபகப் படுத்தலாம். கோர்த்த கால்கள் கோர்க்காலி. கோக்காலி என்றும் சொல்லுவார்கள். மேசை வடிவில் பெரிதாக இருக்கும். நெல் மூட்டைகள்.. வேறு பல பொருட்களை வைக்கப் பயன்படுத்துவார்கள். இவ்வாறு மேசையையும் குறிக்க சொற்கள் இருக்கலாம். எமது தேடல்கள் போதவில்லை.. அல்லது ஆர்வம் போதவில்லை. தேடல்கள் போதாது என்பதற்கு ஒரு உதாரணம்.. lighthause என்பதை நேரடியாக மொழிபெயர்த்து 'வெளிச்சவீடு' என்கிறார்கள். ஆனால் கலத்துக்கு கரைகாட்டும் விளக்கு என்ற அர்த்தத்தில் 'கலங்கரைவிளக்கு' என்ற சொல் ஏற்கெனவே உள்ளதே. இவ்வாறு தேடல்கள் இல்லாவிட்டால் இரவல்கள்தான் உள்நுழையும். புதியவை சேரும் போது வியப்பாகவும்,மகிழ்சியாகவும் இருக்கிறது.தொடருங்கள் சோழியன்........... தூய தமிழ்ச் சொற்களை அற - Mayuran - 07-23-2004 தாயகம் சென்றபோது அங்கே சில தூய தமிழ்ச் சொற்களை அறிந்துகொண்டேன். அவற்றை இப்பகுதிக்கு எடுத்து வருகின்றேன். மோட்டார்ச்சைக்கிள் - உந்துருளி சைக்கிள் - மிதியுந்து கூல்பார் - குளிர்பருகை நிலையம் உணவுவிடுதி - சுவையகம் சுங்கம் - ஆயம் பாங்க் - வைப்பகம் நகைக்கடை - பொற்தொழிலகம் ஐஸ்கிறீம் - குளிர்களி றோள்ஸ் - சுருள் பாண் - வெதுப்பி பணிஸ் - மென்வெதுப்பி லொச் - தங்ககம் இன்னும் பல சொல்கள் நினைவுக்கு வரும் பொழுது இப்பகுதிக்கு எடுத்துவருகின்றேன். அலாரம் என்பதற்கான தூய தமிழ் துயிலெழுப்பி சரியா? அல்லது வேறேதாவது சொல் உள்ளதா? அறிந்தவர்கள் எழுதவும். - தமிழன் - 07-23-2004 வணக்கம் மயூரன். இன்று தான் மேலே உள்ள சொற்களுக்கான தூய தமிழ் சொற்கலை காண்கிறேன். நான் பிறந்ததற்கு இங்கிலாந்தில்தான் எனது கல்லூலி நூலகத்தில் முதன் முதலில் தமிழகராதியைப் பார்த்தேன் வியப்புடனும் ஆச்சிரியத்திலும் அதை முதன் முதலில் கையில் ஏந்தி விரித்த போது மிக மிக வியந்து விட்டேன் இந்ந வியப்பு வேறுஇ ஏனெனில் அதில் உள்ள சொற்கள் 100 ல் 80 கூட நான் கேள்விப்படாதவை எங்கும் படிக்காதவை. அந்த சம்பவம் எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. தமிழன். - Eelavan - 07-25-2004 சோழியன் அண்ணா நிச்சயமாக அரசர் காலத்தில் அன்றி காலனியாதிக்கக் காலத்துக்கு முன்னரே நாற்காலி பாவிக்கப்பட்டிருக்கிறது மேசையும் கூட இருக்கை என்ற சொல் அமர்வதற்குப் பயன்பட்ட நாற்காலி வகை தளபாடங்களைக் குறித்துச் சொல்லப்பட்டது. ஆனால் மேசை என்ன வழக்கில் இருந்தது என்பதற்கோ அல்லது மேசை பயன்படுத்தப்பட்டதற்கோ சான்று என்ன சொல்லலாம் எனத் தெரியவில்லை வலவன் ஏவா வான ஊர்தி வைத்திருந்தவர்கள் ஒரு மேசை செய்யத் தெரியாமலா இருந்திருப்பார்கள்? |