![]() |
|
இக்காலம் போய் எங்குரைக்க....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இக்காலம் போய் எங்குரைக்க....! (/showthread.php?tid=7828) |
இக்காலம் போய் எங்குரை - shanthy - 11-11-2003 இக்காலம் போய் எங்குரைக்க....! கற்காலம் நோக்கிய இக்கால நகர்வு கண்டங்கள் கடந்து வந்தும் கைகளை விட்டிறங்காத , கன மனங்களை உலர்த்தாத , ஆதிக்கத் திமிர். குலப்பெருமை , பிரதேசவாதம் இன்னும் இதய அறைகளில் அதன் ஆணிவேர்.... எக்காலமாயினும் இப்படியே என்பதாய் எவர்க்கும் அஞ்சேனென்ற ஆணவம். சாதியென்ன , மதமென்ன இந்தச் சவமொன்றும் அறியாத இக்காலக் குருத்துகள் இந்த இளவு விழுவார் கதைகேட்டு ஆளுக்கொரு குழுவாய் சண்டை , பிரிவு , சாதியத்திமிர் கொண்டு ஐரோப்பியருக்குத் தமிழன் கற்காலத்தான் என விளம்பி.... கடவுளே இக்காலம் போய் எங்குரைக்க.... எம் நெஞ்சில் அன்று}ற்றிய விசம் இன்னும் அங்கங்கு மிஞ்சிக்கிடக்கிறது அதிலிருந்து மீள வழிதேடி நாம் பெற்ற மக்களுக்கு அவ்விசம் பரவாமல்த் தடுக்க எத்தனை பாடு.....! கோயில்கள் எனும் பெரில் ஊர்ப்பிரிவு , பாடசாலை என்ற திருத்தலத்துள் பலசாதிப் பிரிப்பு..... சத்தமின்றிச் சாதிசொல்லி வெட்டுப்புள்ளி இங்குமாம் வெந்தசில பிஞ்சுகளின் வேதனையின் ரணம் உணர்ந்து சொன்ன உரியவரின் இதய அழுகையிது. அந்த ஊரின் சண்டியன் மகன் இந்த ஊரின் கோடீஸ்வரன் மகள் அயலு}ரின் மருத்துவன் எல்லாரும் இங்கு ஒன்றே. செய்தொழிலில் எல்லோரும் கோட் , சூட்தான் செய்யும் தொழில் எல்லோர்க்கும் ஒன்றுதான். சாதி பிரித்ததும் , சட்டங்கள் வகுத்ததும் வேலிவைத்ததும் , வீண்சண்டை பிடித்ததும் ஊர் பிரிந்து போனபோது எல்லார்க்கும் ஒன்றுதான் அது அகதி. உலகில்கூட இன்று தமிழன் நாடில்லா மனிதன். வந்தேறுகுடிகள் , வாழவக்கற்ற பிச்சைகள் காற்றில்லா இடத்திலும் கையெழுத்திட்டு அகதிக் காசெடுக்கும் வல்லவன். எத்தனை பெயர் எங்களுக்கு.....! இந்த இளவுக்கை இதுவெல்லாம் தேவையா.....? எல்லாம் மறப்போம் இனியாவது வந்த தடம் மீளப்பார்ப்போம் எம் வழியதனைத் தெளிவாக்கி வாழும் தலைமுறையின் வாழ்வுக்காயெனும் நம் பகை மறப்போம். 11.11.03. - shanmuhi - 11-11-2003 <b>எல்லாம் மறப்போம் இனியாவது வந்த தடம் மீளப்பார்ப்போம் எம் வழியதனைத் தெளிவாக்கி வாழும் தலைமுறையின் வாழ்வுக்காயெனும் நம் பகை மறப்போம்</b> எல்லோரும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய விடயம். - sOliyAn - 11-12-2003 என்ன பகை? அரசியலிலும் ஆண் பெண் சமத்துவத்திலும்தானே பகை வளருகிறது? - aathipan - 11-12-2003 நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் என்ற பாரதியின் வார்தைகள் தான் நினைவில் வருகிறது. - kuruvikal - 11-12-2003 செல்லடிக்கு சொந்த ஊர் விட்டு ஓட கண்ட படலையிலும் தண்ணி வேண்டிக் குடிச்சவன்..... லண்டன் தொழிற்சாலையில நாயாய் ஏச்சுவாங்கி கால்கடுக்க வேலை செய்து நாலு காசு கண்டவுடனே ஆளுக்கொரு திமிர் வளர்க்கிறான்....! இப்படித்தான்... போக்கிடம் எல்லாம் செய்யுறான்...! அவன் யார்... தன் நிறம் போல மனம் மாறாத் தமிழன்....! இவன் எங்க திருந்த.... சும்மா ஏட்டில எழுதி வேலையில்ல ஏ கே 47 காட்டினால்தான் செயற்கயாயாவது அடங்குவான்...! ஆனால்- நிரந்தரமாய் மனங்கள் மாற.... வழி தேடிப் பிடிக்க முதல் அறுகம் புல்லாட்டம் எல்லாம் வளத்துப் போடுவான்.....! என் செய்வம் தன்னிலையறியாத் தமிழன் எண்ணி பாரதி போல் கூச்சல்தான் இடமுடியும்....! - இளைஞன் - 11-12-2003 Quote:சாதி பிரித்ததும் , சட்டங்கள் வகுத்ததும் இதே தான்! வாசிக்கும் பொழுது வார்த்தைகள் வேகமாய் வந்து குவிகின்றன. அருமை! எப்படித்தான் இப்படி அருமையாக வார்த்தைகளை அடுக்குகிறீர்களோ தெரியவில்லை. வாசிப்பவர்களுக்கு அந்த வரியை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றும். அப்படியொரு ஈர்ப்பு! உணர்ச்சி பொங்கக் கைதட்டுகிறேன்! - shanthy - 11-18-2003 நன்றிகள் சண்முகி , இளைஞன். |