![]() |
|
யாழில் தடுப்பு மருந்து.விபரீதம் குழந்தைகள் பாதிப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: யாழில் தடுப்பு மருந்து.விபரீதம் குழந்தைகள் பாதிப்பு (/showthread.php?tid=7703) |
யாழில் தடுப்பு மருந்த - yarl - 12-05-2003 யாழில் தடுப்பு மருந்து.விபரீதம் குழந்தைகள் பாதிப்பு ;மூச்சுத் திணறல், காய்ச்சல் அறிகுறிகளுடன் 5 குழந்கைள் யாழ். ஆஸ்பத்திரியில் அனுமதி திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல், காய்ச்சல் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகளுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் 5 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இத்தகைய அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குழந்தை ஒன்று கடந்த வாரம் உயிரிழந்துள்ளது. ஜப்பான் மூளைக் காய்ச்சல் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை ஏற்றிய பின்னரே குழந்தைகளுக்கு இத்தகைய அறி குறிகள் ஏற்பட்டன என்று பெற்றோரால் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதை அடுத்து இது தொடர்பான ஆய்வுகளை யாழ். போதனா வைத்திய சாலை மேற்கொண்டுள்ளது. சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் ஜப்பான் மூளைக் காய்ச்சல் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட குழந்தைகளில் மானிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த குழந்தையொன்றே மருந்து ஏற்றிய 24 மணி நேரத்துக்குள் உயிரிழந்தது. முதலில் சங்கானை ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்ட குழந்தை அங்கிருந்து யாழ். ஆஸ்பத்திரிக்கு மாற்றப் பட்டது. 6 மணி நேரத்தின் பின்னர் சிகிச்சை பயனளிக்காமல் அது உயிரிழந்தது. சித்தன்கேணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் சஞ்சீவன் (வயது1) என்ற குழந்தையே கடந்த முதலாம் திகதியன்று இவ்வாறு உயிரிந்தது. இக்குழந்தை உயிரிழந்தமைக்கான காரணத்தை அறிய முடியாமையினால் நோய்க்கூற்று ஆய்வுப் பிரேத பரிசோதனைக்கு (Pயவாழடழபiஉயட pழளவஅழசவநஅ) வைத்தியசாலைப் பணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இது தெரியாமலேயே எனி னும் குழந்தையின் சடலம் ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர் களால் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அராலி, மட்டுவில் தெற்கு, யாழ். நகரம், ஆவரங்கால் மேற்கு, கோண்டாவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐந்து குழந்தை களே நோய் அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டுள்ளன. ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பு மருந்து ஏற்றிய பின்னரே தமது குழந்தைகளுக்கு இப்படி ஏற்பட்டதா கப் பெற்றோர் கூறுகின்றனர். ஜப்பானிய மூளைக் காய்ச்சல் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து, ஆபத்துப் பிரிவினர் (சுளைம பசழரி) எனக்கருதப்படும் ஒன்று முதல் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே வழங்கப்படுகின்றது. யுநனநள வகை நுளம்புகளால் காவப்படுகின்ற ஒரு வகை வைரஸால் பரம்பலடையம் இந்நோய், யாழ். குடாநாட்டில் ஒரு பிரசினையாக அறியப்படாத நிலையில் இம்மருந்து குழந்தைகளுக்கு ஏற்றப்பட்டு வருவதாகச் வைத்திய வட்டாரங் களால் சுட்டிக்காட்டப்படுகின்றது. குழந்தைகளின் ஒவ்வாமை நிலைமை குறித்த சரியான விசாரணைகள் மேற்கொள்ளப்படாது மருந்து ஏற்றப்பட்டமை அல்லது மருந்தைக் களஞ்சியப்படுத்தும் நிபந்தனைகளில் தவறு ஏற்பட்டமையோ குழந்தைகளின் இந்த நோய் மற்றும் உயிரிழப்புக்கான காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக் கப்படுகின்றது. uthayan.com |