Yarl Forum
காதல் என்ற கண்ணாமூஞ்சி செய்த வினை.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: காதல் என்ற கண்ணாமூஞ்சி செய்த வினை.... (/showthread.php?tid=7685)



காதல் என்ற கண்ணாமூஞ்ச - kuruvikal - 12-10-2003

காதலிக்க மறுத்த பெண்ணை வெட்டிக் கொன்ற வாலிபர்

நாங்குநேரி:

தன்னைக் காதலிக்க மறுத்த கல்லூரிப் பெண்ணை வெட்டிக் கொலை செய்தார் வாலிபர். திருநெல்வேலி அருகே நாங்குநேரியில் இந்த பதைபதைக்கும் சம்பவம் நடந்தது.

இங்குள்ள மூலக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் சுகாசினி (வயது 19). இவர் பாளையம்கோட்டை பெண்கள் கல்லூரியில் பி.எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது ஊரைச் சேர்ந்தவர் சுந்தர் (22). வேலையேதும் இல்லாத இந்த வாலிபர் சுகாசினியை ஒரு தலையாகக் காதலித்துள்ளார். இந்தக் காதலை கடந்த வாரம் சுந்தர் கூறியபோது அதை ஏற்க சுகாசினி மறுத்துள்ளார்.

இந் நிலையில் இன்று காலை சுகாசினியின் வீட்டுக்கே சென்ற சுந்தர், தன்னைக் காதலிக்குமாறு மிரட்டியுள்ளார். சுகாசினி மறுக்கவே, கையோடு கொண்டு வந்த அரிவாளால் சுகாசினியை கழுத்தில் வெட்டினார்.

இதில் அந்த இடத்திலேயே சுகாசினி துடிதுடித்து இறந்தார். இதையடுத்து தனது வீட்டுக்கு ஓடிய சுந்தர் வீட்டில் தயாராக வைத்துவிட்டு வந்த விஷத்தை எடுத்துக் குடித்து மயங்கி விழுந்தார். இப்போது ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீட்டில் வைத்து இளம்பெண் வெட்டிக் கொல்லப்பட்டது அப் பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

That'stamil.com

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:


- tamilini - 02-27-2004

வணக்கம் அன்பர்களே. யாவரும் நலம் தானா?
காதலி அல்லது காதலுக்காக செத்து மடி என்பது இதுதானா?
இறப்பிலாவது ஒன்று சேர்வோம் என்று எண்ணினாராக்கும்.

அது சரி அய்யா அரிவால் எடுத்து வெட்டும் வரை அம்மணி தூங்கிவிட்டார் பாவம். ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.


- Mathan - 02-27-2004

கட்டாயப்பத்தி காதலை வரவழைக்க முடியாது. கிட்டதட்ட இதுமாதி ஒரு சம்பவம் யாழ்ப்பாணத்துல நடந்ததா அறிஞ்சேன்.


- tamilini - 02-28-2004

BBC Wrote:கட்டாயப்பத்தி காதலை வரவழைக்க முடியாது. கிட்டதட்ட இதுமாதி ஒரு சம்பவம் யாழ்ப்பாணத்துல நடந்ததா அறிஞ்சேன்.

விபரமாக அறியத்தரக்கூடாதா ?


- Mathan - 02-29-2004

அது காதலை கேட்டது தான். முழு விபரமும் கிடைகாததாலை சொல்ல முடியலை. அது உதயன்ல வந்ததான்னு தெரியலை.