Yarl Forum
மல்லிகை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: மல்லிகை (/showthread.php?tid=7658)



மல்லிகை - thamarai - 12-18-2003

<b>மல்லிகை</b>

<b>படைப்பு: தாமரை (பிரான்ஸ்)
----------------------------------</b>

<img src='http://www.yarl.com/forum/files/mallikai.gif' border='0' alt='user posted image'>

மனம் கவரும் மல்லிகையே
நம் வீட்டு முற்றத்தில்
அழகாய்ப் படர்ந்து பூத்து...

எமையாளும் இறைவனுக்கு
பாத பூஜை செய்கிறாய்!
நங்கையின் கூந்தலையும்
அழகு செய்கிறாய்!

என்றாலும்,
உனை பள்ளியறை பூவாகவே
ஓரினம் நினைக்கிறதே, ஏன்?


- sOliyAn - 12-19-2003

மல்லிகை எம் கண்கள் விரும்பும் பொன்னான மலரல்லவோ
என்னேரமும் எம்மோடுதான் மணம்வீசும் சுகமல்லவோ?!

வாழ்த்துக்கள் தாமரை.


- shanmuhi - 12-19-2003

தாமரை மல்லிகையாய் மணத்தது.


அருமை! - இளைஞன் - 12-19-2003

நட்புள்ள தாமரையே...

ஒருசிலர் நீ(ங்கள்) வரமாட்டாய் என்று கனவு
கண்டனர். ஒரு சிலர் சூரியனைக் காணாது தாமரை
பூக்கவில்லை என்று கருதினர். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->. இன்னும் சிலர்
பவர் கட், ஆதலால் நவீனத் தாமரை பூக்கவில்லை
என்று சிரித்தனர்.

ஒருசிலர் உன் வருகைக்காய்க் காத்திருந்தனர்,
வரவேண்டும் என்று பார்த்திருந்தனர். நான்கூடக்
கொஞ்சம் கவலைப்பட்டேன் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> .

ஆனால் அற்புதமாய்க் கவி படைத்து, மல்லிகையாய்
நறுமணந் வீசி, யாழில் மீண்டும் பூத்தாய் (பூத்தீர்கள்).
கண்டு மகிழ்ந்தோம்.

கவிதையில் இடம்பெற்ற இறுதி வரிகள், சமுதாயத்தின்
அசிங்கத்தைச் சுட்டிக்காட்டிய அழகு. <b>சில
பெண்கள்
</b> போல தனியே முற்றும் முழுதாக
ஆணினத்தைச் சுட்டிக் கோசம் போடாமல், ஓரினம்
என்று கூறி அசத்திவிட்டாய்.

ஓரினம்: பெண்ணைப் பள்ளியறைக்குரியவளாய்க்
கருதும் "பெண்கள் + ஆண்கள்". உங்கள் புதிய
சிந்தனைக்கு வாழ்த்துக்கள்.

Quote:என்றாலும்,
உனை பள்ளியறை பூவாகவே
<b>ஓரினம்</b> நினைக்கிறதே, ஏன்?



Re: மல்லிகை - kuruvikal - 12-19-2003

பாவம் அந்த மல்லிகை
கருங்கூந்தல் மேலேற
மங்கையும் கொண்டால்
கூந்தல் வாசம்...!
இறைவன் கூட
நக்கீரன் முன் மண்டியிட்டான்
மங்கைதனின்
மயக்கும் மொழி கேட்டுமே...!
இன்று பள்ளியறையல்ல
மங்கை மேனி முழுதும்
விசிறி அடிக்கும் நாத்த மருந்தாய்
கசக்கிப் பிழிந்தெடுத்தார்
பாவம் அந்த மல்லிகை...!

பள்ளியறைக்கு மல்லிகையேன்
பள்ளி கொள்வது
அன்பால் இணைந்த
மனங்கள் அல்லவா...!
பிறகேன் அங்கும்
'ஓர்' இனம் மீதே கணடனம்....!
ஆடவனிடத்தில் மனமிருக்கு
மங்கையிடத்தில் மனமே இல்லையோ...?
அதுசரி இதயமே கல்லாம்
மனமெங்க கனிந்திருக்க...!

புயல் தாக்க
காதலன் வருத்தம் கண்டு
தாமரை வரவில்லையோ
'நாசா' நேற்றுத்தான் தந்தது செய்தி
சூரியனில் புயலும்
செற்றே தனிந்ததென்று...!
சா... அப்படி இருக்காது
புயல் வீசும்
இவனெல்லாம் ஒரு காதலன்
என்று ஒதுங்கியிருந்ததோ தாமரை...!

ஊடல் கழிந்தால் கூடல் தானே
தாமரை இங்கு மல்லிகை கொண்டு
கூடி நிற்பது காணவில்லையோ
கண்கள் சில.....!
யாழ்களமே மல்லிகையால்
நீ தாமரை கண்டாய் மகிழ்ச்சிதானே...!

வாழ்க மல்லிகை
முல்லை.....????!


- vasisutha - 12-19-2003

இந்திய குறிப்பாக தமிழ்நாட்டுக்கு
ஏற்ற கவிதை இது.
பாராட்டுக்கள் தாமரை.


- kuruvikal - 12-19-2003

அது சொன்னியலே மெத்தச் சரி வசி...அதுவும் சினிமாதான் சாட்சி...!

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- nalayiny - 12-19-2003

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ...! (சினிமா.) தாமரை கவிதை நன்று.