Yarl Forum
நோட்டோவின் (NATO) செய்தித் தொடர்பாளராக தமிழர் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21)
+--- Thread: நோட்டோவின் (NATO) செய்தித் தொடர்பாளராக தமிழர் (/showthread.php?tid=7564)



நோட்டோவின் (NATO) செய்தித - kuruvikal - 01-24-2004

<img src='http://thatstamil.com/images18/cinema/james150.jpg' border='0' alt='user posted image'>
ஜேம்ஸ் அப்பாதுரை

நேடோ செய்தித் தொடர்பாளராக தமிழர் நியமனம்

ப்ரசல்ஸ் (பெல்ஜியம்):

அமெரிக்கா ஐரோப்பிய கூட்டு ராணுவப் பிரிவான நேடோவின் (NATO) செய்தித் தொடர்பாளராக இலங்கை வம்சாவளித் தமிழரான ஜேம்ஸ் அப்பாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடாவில் வசித்து வரும் 35 வயதான அப்பாதுரை, கடந்த 6 ஆண்டுகளாக நேடோவின் அரசியல் மற்றும் பாதுகாப்புக் கொள்கை வகுப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

முன்னதாக கனடா நாட்டு பாதுகாப்புத்துறையிலும் இவர் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார்.

செய்தித் தொடர்பாளராக அப்பாதுரை நியமிக்கப்பட்டுள்ளதை, நேடோவின் பொதுச் செயலாளராக உள்ள ஹாலந்து நாட்டு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேப் டி ஹூப் ஷெப்பர் தெரிவித்தார்.

சர்வதே பாதுகாப்பு குறித்து பல்வேறு ஆய்வறிக்கைகளையும் எழுதியுள்ளார் அத் துறையின் நிபுணரான அப்பாதுரை.


Thatstamil.com
----------