![]() |
|
மண்ணுக்கு மரியாதை! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: மண்ணுக்கு மரியாதை! (/showthread.php?tid=7536) |
மண்ணுக்கு மரியாதை! - Eezhaven - 01-31-2004 இக் கவிதை எனது கன்னிமுயற்சி உங்கள் கருத்துக்கணைகளை பயத்துடன் எதிர்பார்க்கிறேன்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <b>மண்ணுக்கு மரியாதை!</b> விடுமுறை கழிக்க விட்டு வந்த என் தாய்மண் நோக்கிச் சென்றேன். என்னைக் கண்டதும் "வா மகனே!.. வா" எனத் தாய் மண் வரவேற்றாள் "வருடங்கள் பல கடந்து வந்திருக்கிறாய், நன்றி! மறவாது இருந்தமைக்கு" யரோ சம்மட்டியால் அடித்தது போலிருந்தது... அவள் பேச்சு "அன்னையே.. விருந்தாளி போல உன்னை விட்டுச் சென்றதால் என் மீது கோபமா?" எனக் கொபஞ்சலாகக் கேட்டேன். அவள்... "மகன் மீது கோபம் கொண்டு அன்னை என் செய்வாள்? மார்மீது நீ கடித்த போதும் மடிமீது நீ சாய்ந்த போதும் அந்த சுகம் வேண்டிக்கிடந்தேன்.. மகனே! விட்டு ஓடினாலும் பெற்றவளுக்கு நீ மகன்தானே! அவள் தொடர்ந்தாள்... "காலம்.. நீண்ட இடைவெளியை நமக்கிடையே கொடுத்துவிட்டது மகனே!... பரவாயில்லை! சுகம் தொலைத்துப் போன உன் சுகம் சுகமா? சொந்தமாய் இருந்த என் சொந்தங்கள் சுகமா? தஞசம் தந்தவுடன் தாய் மண் மறந்த சொந்தங்களும் தமிழ்பேச மறந்த என் தமிழ்ச் செல்வங்களும் பண்பாடு மறந்த என் பண்டிதர்கள் எல்லோரும் சுகமா? உயிர் உள்ள உடல் என்பதால் ஓடிவிட்டீர்கள் உயிர் அற்ற ஜடம் நான் என்பதால் வாய்வரை வந்த விம்மலை வழி மறித்தேன்... "மண்ணுக்கும் மனம் உண்டு, மகனே! அந்த மனத்துக்கும் மானம் உண்டடா!" குண்டுகள் போட்டு கொன்று குவித்தனர் பிஞ்சுகள் நெஞ்சு பிரித்து என் மடியில் போட்டனர்.. பாவிகள் அவைகண்டு பயந்து நான் ஓடவில்லையடா! உயிர்ப்பயம் எனக்கு இல்லையடா!! அழுது அழுது அழிந்த காலம் ஒழிந்து போயிற்று பொழுது விடிந்தால் நமக்கென்று... காலம் சொல்லிப் போயிற்று விடிவு தேடிப் புறப்பட்ட என் மைந்தர்கள் இருக்கும் வரை முடிவு வராது இந்த அன்னைக்கு மகனே! விடுமுறைக்குச் சென்ற நான் விடுபடாத பல கேள்விகளுக்கு விடைகண்டு கண்டுவந்தேன். அவள் பேச்சு என் உணர்வுகளை மட்டுமல்ல உயிரையும் சுட்டது நான் தமிழன் என்பதால்... - Paranee - 01-31-2004 மண்ணுக்கு மரியாதை என் மனமெங்கும் வலிகளாய் ஆம் இது உங்களது கவிதை அல்ல நண்பரே புலம்பெயர்ந்த ஈழத்தாயின் புதல்வர்களின் கண்ணீர் வாழ்த்திக்கொள்ள வார்த்தைகள் ஈடாக இல்லை. - Mathan - 01-31-2004 உங்க தமிழ் நல்லாருக்கு ஈழவன். நம்மால் இது மதி பொயம் எல்லாம் எழுதமுடியாது பொஸ். - sOliyAn - 02-03-2004 ஈழவன்.. அருமையான கருத்து.. அருமையான தமிழ்நடை. தொடருங்கள். - shanmuhi - 02-03-2004 <b>அவள்... "மகன் மீது கோபம் கொண்டு அன்னை என் செய்வாள்? மார்மீது நீ கடித்த போதும் மடிமீது நீ சாய்ந்த போதும் அந்த சுகம் வேண்டிக்கிடந்தேன்.. மகனே! விட்டு ஓடினாலும் பெற்றவளுக்கு நீ மகன்தானே!</b> வரிகள் அருமை. கன்னிக் கவிதை.... நெஞ்சைத் தொட்டுச் சென்றது. வாழ்த்துக்கள் ஈழவன். - Eezhaven - 02-04-2004 கருத்துக்கள் சொன்ன நண்பர்/நண்பிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! |