Yarl Forum
செப்11 அமெரிக்கா மீதான தாக்குதல் சரியா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14)
+--- Thread: செப்11 அமெரிக்கா மீதான தாக்குதல் சரியா? (/showthread.php?tid=7507)

Pages: 1 2

செப்11 அமெரிக்கா மீதான - Mathan - 02-05-2004

செப்11 அமெரிக்கா மீதான தாக்குதல் சரியா?

செப்11 அமெரிக்கா மீதான தாக்குதல் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? இது சரியா தப்பா? இதனோட நோக்கம்(AIM) என்ன?

- Mathan - 02-06-2004

இத ஆதரிக்கிறிங்களா? எதிர்க்கிறீங்களா உங்க கருத்த தயங்காம சொல்லுங்க. சைலெண்டா இருக்காதீங்க

- vasisutha - 02-06-2004

எங்கட பிரச்சினையை தீர்க்க முடியேல்லை.
இது வேறா?
போங்கோ பிபிஸி புதுசா ஏதாவது சொல்லுங்கள்.
:mrgreen: :mrgreen:

- sOliyAn - 02-06-2004

http://www.yarl.com/articles.php?articleId=148
http://www.yarl.com/articles.php?articleId=148&page=2

- Mathan - 02-06-2004

vasisutha Wrote:எங்கட பிரச்சினையை தீர்க்க முடியேல்லை.
இது வேறா?
போங்கோ பிபிஸி புதுசா ஏதாவது சொல்லுங்கள்.
:mrgreen: :mrgreen:

இது நம்ம நாட்டு பிரச்சனையோட தொடர்புள்ள நிகழ்வு. நீங்க உங்க கருத்துக்களை சொல்லுங்க

- Mathan - 02-06-2004

sOliyAn Wrote:http://www.yarl.com/articles.php?articleId=148http://www.yarl.com/articles.php?articleId=148&page=2

உங்க கட்டுரைக்கு தாங்க்ஸ் சோழியான். ஆனா இங்க ஒரு இரண்டு வரி ஆதரித்தோ எதிர்த்தோ எழுதினா மத்தவங்களும் கருத்துக்களை குடுப்பாங்க

- sOliyAn - 02-06-2004

பாதிக்கப்பட்டவன் பயங்கரவாதியாகிறான். ஆகவே பாதிப்பைக் கொடுத்தவனும் பயங்கரவாதிதானே?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mathan - 02-06-2004

நீங்க சப்போட் பண்ணுறிங்களா இல்லையா பொஸ் அத சொல்லுங்க

- sOliyAn - 02-06-2004

ரஜனிக்கு சப்போர்ட்டா கமலுக்கு சப்போர்ட்டா என்று கேட்பது போல இருக்கிறது? எங்கு நல்லவைகளுணஇடோ.. அதற்கு ஆதரவளிக்கலாம்.. நல்லவை இல்லையேல் துார விலகவேண்டியதுதான்.

- Mathan - 02-06-2004

அது வேற இது வேற பொஸ். அப்ப இரண்டு பேரும் நல்லவ்ங்க இல்லன்னு சொல்றிங்களா?

- Mathan - 02-06-2004

யாரும் பதில் சொல்லாம நழுவுறாங்க???

- kuruvikal - 02-06-2004

அந்தத் தாக்குதலில் பென்ரகன் மீது நடத்தியதும் பொருளாதார மையங்கள் மீது நடத்தியவையும் அமெரிக்கப் பயங்கரவாதத்தைவிட அவ்வளவு மோசமில்லை...எனினும் பொதுமக்கள் பயணம் செய்யும் விமானங்களைக் கொண்டு பொதுமக்கள் கூடும் இலக்குகள் முன் எச்சரிக்கை இன்றி பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் திட்டமிட்டு தாக்கியது முழுக்க முழுக்க அமெரிக்க பயங்கரவாததை மிஞ்சிய பயங்கரவாதம்....!

எனினும் பெல்கிறேட்டில் சந்தை மீது கிளஸ்ரர் குண்டுகள் கொட்டிய அமெரிக்கப் பயங்கரவாதமே இதற்கு அடுத்த நிலைப் பயங்கரவாதச் செயல்...அங்கு இராணுவ விமானங்கள் பயன்படுத்தப்பட்டதுதான் ஒரே ஒரு வேறுபாடு.....!

இவை எதுவும் தவறுதலான விபத்துகள் அல்ல...திட்டமிட்ட தாக்குதல்கள்....!

- Mathan - 02-06-2004

அப்ப இஸ்லாமிய போராட்டத்தை பத்தி என்ன சொல்றீங்க? அது அர்த்தமுள்ளதா? வழிமுறைகள் சரியா? இல்லைன்னா அது பயங்கரவாதமா?

- kuruvikal - 02-06-2004

இஸ்லாமிய போராட்டம் பற்றி எமக்கு கிடைக்கும் அநேக செய்திகள் மேற்குலக செய்தி நிறுவனங்களினதே அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு போராட்டத்தின் அல்லது ஒரு அசம்பாவிதத்தின் பின்னணி பற்றி எப்படிக் கூறமுடியும்....அவர்களின் செய்திகள் எங்களின் கண்களில் படுவதேயில்லையே....! பிறகெப்படி பயங்கரவாதமா நியாயமான போராட்டமா என்று தீர்மானிப்பது.....!

ஆனால் எந்த மதசார்ப்பு அல்லது மத மேலாதிக்க கோட்பாடுகளையும் அவை தொடர்பில் எழும் வன்முறைகளையும் நாம் ஆதரிக்க முடியாது....! மதம் என்பது ஒவ்வொரு மனிதனினதும் சமாதான வாழ்விற்கான வழிகாட்டியே தவிர வன்முறைக்கான தோற்றுவாய் அல்ல....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

- Mathan - 02-06-2004

ஏன் அல் ஐஸீரா ( http://www.allied-media.com/aljazeera/ ) மற்றய பக்கத்து நியூச குடுக்கிறாங்களே?

ஒரு மொழியை வச்சு போராட்டம் நடக்கும்போது ஏன் மதத்தை வைச்சு பண்ண முடியாது?

- kuruvikal - 02-06-2004

அல்ஜஸீரா தருவது மட்டும் போதாது ஒரு மக்களின் இனத்தின் கருத்தை தெளிவுபடுத்துவதற்கு.....அந்த ஊடகத்தின் நோக்கம் தெரியாமல் அதன் செய்திகளை எப்படி நம்புவது...அது சொல்வதுதான் யதார்த்தம் என்பது எப்படி.....?????! உதாரணமாக இலங்கை இனப்பிரச்சனையை தமது தேவைகளுக்காக விளம்பரப்படுத்திய இந்திய ஊடகங்கள்...அதையே தமக்குத் தேவையில்லை எனும் வேளையில் எதிர்ப்பிரச்சாரம் செய்ததும்...ஆதரவுப் பிரச்சாரத்தின் போதும் கூட போராட்டத்தின் நியாயங்களை தெளிவாக சொல்லத் தயக்கியது..! அதே நிலைதான் அல்ஜஸீராவினதும் ஆக இருக்கலாம்....!

மொழி என்பது ஒரு இன மக்களின் தனித்துவ அடையாளங்களில் ஒன்று....பிரதேசம், பாரம்பரிய கலாசாரம், சமூகவியல் வரலாறு, மொழி வளம் அதன் பயன்பாடு...இவற்றுக்குள் அடங்கும் பிரதான கூறுகள்....மதம் அப்படியானதன்று.....அது ஒரு பொது நெறி....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

- Mathivathanan - 02-06-2004

அடடா.. மேற்கிலை சூரியன் உதிக்கத்தெடங்கீட்டுது.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 02-06-2004

முஸ்லீம்கள் அவங்களை இனம்னு தான் சொல்றாங்க. மத பிரிவுன்னு சொல்லலை. அவங்களும் நீங்க சொல்ற பிரதேசம், பாரம்பரிய கலாசாரம், சமூகவியல் வரலாறு, மொழி வளம் அதன் பயன்பாடு அதெல்லாம் இருக்குனு சொல்றாங்க.

நீங்க என்ன சொல்றீங்க?

- Mathivathanan - 02-06-2004

BBC Wrote:முஸ்லீம்கள் அவங்களை இனம்னு தான் சொல்றாங்க. மத பிரிவுன்னு சொல்லலை. அவங்களும் நீங்க சொல்ற பிரதேசம், பாரம்பரிய கலாசாரம், சமூகவியல் வரலாறு, மொழி வளம் அதன் பயன்பாடு அதெல்லாம் இருக்குனு சொல்றாங்க.

நீங்க என்ன சொல்றீங்க?
இந்த செப்ரெம்பர் தாக்குதலாலை இல்ஸாமியருக்கு நன்மையோ தீமையோ.. அதைப்பற்றி சரியாத் தெரியேல்லை.. ஆனால் தலைபான் அடக்குமுறை ஆட்சி கவிண்டிருக்கு.. சதாம் கொடுங்கோல் ஆட்சி கவிண்டிருக்கு.. இலங்கையிலை சமாதானம் வந்திருக்கு.. இதுகள் மூண்டும் நல்லதுதானே.. ஈரான் லிபியா அணுஆயுத ஏற்பாடு ஏதொ நடக்குது.. சவூதியிலையும் ஏதோ நடக்கப்போகுது.. இப்படிப் பார்க்கப்போனால் நல்லதுதான் நடக்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathan - 02-06-2004

Mathivathanan Wrote:

சதாம் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியா இல்லையா என்றது வேற பிரச்சனை. ஆனா அத அமெரிக்கா தூக்கினது அதுக்காக இல்ல. அது தன்ற பொருளாதார ஏண்ணை வள நன்மைகாக