Yarl Forum
உயிர்ப் பூக்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: உயிர்ப் பூக்கள் (/showthread.php?tid=747)



உயிர்ப் பூக்கள் - தாரணி - 02-22-2006

<img src='http://img305.imageshack.us/img305/8889/tamil14oi.jpg' border='0' alt='user posted image'>


[size=18]<b>உயிர்ப் பூக்கள்</b>

தமிழீழம் மலர்ந்து
தன் மானத்துடன் வாழவே
தானத் தலைவன்
தரணியில் அமைத்தான் புலிப்படை
எம் இனத்தை வதை செய்த
பாதகரைத் திவசம் செய்ய
தலைவன் வழியினில் உதித்த
உயிர்ப் பூக்கள் நீங்கள்.

வானத்திலிருந்து விமானங்கள்
குண்டு மழை பொழிந்தாலும்
அந்நியப் படைகள்
ஆயிர மாயிரமாய் வந்தாலும்
சிரிக்கின்ற முகத்துடன்
சிட்டாகப் பறந்து சென்று
தேடிவந்த பகை விரட்டியடித்து
பூரித்து நிற்பதே
உங்களின் இலக்கு

பார் முழுவதும் வியக்கும்
படைப் பலத்தைப் பெற்றீர்கள்
களத்தினில் எதிரிகளைக் கொன்று
காலனை உம்மிடம் அழைத்தீர்கள்
உங்கள் குருதி
உறைந்த தமிழ்மண்ணை
உயிராய் நேசிப்போம்
தமிழ் உயிர்ப் பூக்கள் என்றும்
எம் இதயத்தில் பூத்துக்குலுங்கும்.

உயிர்ப்பூக்களின் பாதம்
படிந்த தேசம்
இன்று போர்மேகம்
அகன்று நின்றாலும்
அதிகார சிங்கள
ஆட்சியாளர்களே ! இனியும்
உமக்காய்ப் பனிவோமென
ஓரு போதும் நினைக்காதே
பல்லாயிரம் உயிர்ப் பூக்களின்
பாதம் தொழுது
வேங்கையாப் பாய்வோம்
தமிழ் மண்ணின் விடியலுக்காய்.

நன்றி


- Eelam Angel - 02-22-2006

<b>எழுச்சி மிக்க ஒரு கவிதை. உணர்ச்சி பொங்க எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் </b>


- Rasikai - 02-22-2006

உணர்ச்சிபூர்வமான கவிதைக்கு வாழ்த்துக்கள்


- தாரணி - 02-22-2006

நன்றி ஈழ தேவதை ரசிகை

என்னை வாழ்த்தியதுக்


- வர்ணன் - 02-22-2006

உணர்வுபூர்வமான வரிகள்- சிந்தனைகள் - தாரணி-
பாராட்டுக்கள்! 8)


வணக்கம் - தாரணி - 02-22-2006

என்னை வாழ்த்திய சகோதரங்கள் ( ஈழ தேவதை, ரசிகை, வர்ணன்) ஆகியோருக்கு நன்றி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- RaMa - 02-25-2006

உயிர்ப்பூக்களின் பாதம்
படிந்த தேசம்
இன்று போர்மேகம்
அகன்று நின்றாலும்
அதிகார சிங்கள
ஆட்சியாளர்களே ! இனியும்
உமக்காய்ப் பனிவோமென
ஓரு போதும் நினைக்காதே
பல்லாயிரம் உயிர்ப் பூக்களின்
பாதம் தொழுது
வேங்கையாப் பாய்வோம்
தமிழ் மண்ணின் விடியலுக்காய்.

அழகான வரிகள் தாரணி. வாழ்த்துக்கள்.