![]() |
|
net உதவிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: net உதவிகள் (/showthread.php?tid=7463) |
net உதவிகள் - vasisutha - 02-17-2004 இன்டர்நெட் தொடர்பு வைத் திருப்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தேவையற்ற மெயில்கள் வரும். இதற்குக் காரணம் பல இணையத் தளங்களில் நாம் நம்மைப் பற்றிய தகவல்களைக் கட்டாயமாகத் தர வேண்டியுள்ளது. அப்போது மின்னஞ்சல் முகவரியினை நிரப்புகிறோம். இந்த தகவல்கள் எளிதாகப் பலராலும் எடுக் கப்பட்டு பயன்படுத்தப்படுகின் றன. இதனை நம்மால் கட்டுப் படுத்த முடியவில்லை. இதனை மொத்தமாக ஒழிக்க முடியாது என்றாலும் ஓரளவிற்கு இதனைக் கட்டுப்படுத்தலாம். இலவச மின்னஞ்சல் முகவரிகளைத் தரும் இணையத் தளங்களில் மேலும் ஒரு இலவச முகவரியை அமைத்து எடுத்துக் கொண்டு இது போன்ற படிவங்களில் அந்த முகவரியினை மட்டுமே தர வேண்டும். நம் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் நமக்கே சொந்தமான ஒரு முகவரியை மட்டும் தர வேண்டும். இதனால் நமக்கு வரும் தேவையற்ற மெயில்கள் இந்த தளத்தின் மெயில் சேர்வருக்கு செல்லும். இவற்றை நாம் மொத்தமாக படிக்காமலேயே அழித்து விடலாம். - Mathan - 02-17-2004 நல்ல தகவல். தாங்ஸ் வசி - TMR - 02-18-2004 நல்ல தகவல். தாங்ஸ் வசி <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 02-18-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- vasisutha - 02-18-2004 hock: :?
- yarl - 02-18-2004 வசி எதுக்கும் உங்கள் அந்த மெயிலை தாருங்கள் .எல்லாரும் பயன்படுத்தலாம்<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- shanmuhi - 02-18-2004 நல்ல யோசனை.... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- vasisutha - 02-18-2004 யாழ்/yarl Wrote:வசி எதுக்கும் உங்கள் அந்த மெயிலை தாருங்கள் .எல்லாரும் பயன்படுத்தலாம்<!--emo& hock: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :evil:
- vasisutha - 02-18-2004 உங்களது மெயில்களை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்ற நோக்கில்தானே மெயில்களை தயாரிக்கிறீர்கள்? அப்படியானால் நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. <span style='color:#ad00ff'> * மெயிலின் Subject வரியில் பொருத்தமாக டைப் செய்யுங்கள். Free, Great offer, Must Read போன்ற சொற்கள் மெயில்களின் பொருளடங்களாக இருந்தால் அப்படிப்பட்ட மெயில்களை பலர் படிப்பதில்லை. உடனடியாக அவற்றை அழித்து விடுவர். Subject வரியில் ஒன்றையுமே டைப் செய்யாமல் மெயிலை அனுப்பாதீர்கள். மெயிலை பெறுபவருக்கு இது எரிச்சலை கொடுக்கும்; வைரஸ் உள்ள மெயிலா என்ற சந்தேகத்தை கொடுக்கும். Subject வரியில் எதையாவது நிரப்ப வேண்டும் என்ற நோக்கில் Hi, Hello என மெயிலுக்கு பொருத்தமில்லாமல் டைப் செய்யாதீர்கள். மெயிலின் பெறுநருக்கு இது எச்சரிக்கை தரும். ரகசிய செய்திகளை மெயில்களில் எழுதுவதை தவிர்க்கவும். பொதுவாக பெறுநர்களை தவிர மற்றவர்கள் மெயில்களை பார்க்க முடியாது. எனினும் மெயில் செல்லும் வழியில் யாராவது இடைமறித்து பார்க்க முடியும். மெயில் செர்வரில் உள்ள மெயில் பொக்ஸில் வந்து சேருகிற மெயில்களை மெயில் செர்வரை நிர்வகிக்கிற ஊழியர்கள் பார்க்க முடியும். * நேரில் அல்லது தொலைபேசியில் கூறத் தயங்குகிற விஷயங்களை ஈமெயிலில் எழுதாதீர்கள். * வதந்திகளை பரப்பாதீர்கள். வதந்திகளை வாய் வழியாக கூறலாம். ரசிக்கலாம். ஆனால் எழுத்து மூலமாக மெயிலில் கூறும் பொழுது ஏதாவது சட்ட சிக்கல்கள் எழலாம். * எல்லோரும் நலம் பெறட்டும் என்ற நோக்கில் நகைச்சுவை துணுக்குகளை எல்லோருக்கும் அனுப்பி வைக்காதீர்கள். பலர் ரசிக்கலாம், சிலர் வெறுக்கலாம். உங்கள் துணுக்கை பெறுவர் மோசமான மனநிலையில் இருந்தால் உங்கள் மீது அவருக்கு வெறுப்புதான் ஏற்படும். * பொதுவாக மெயில்ன் உள்ளே உள்ள இலக்கணப் பிழைகளை எழுத்துப் பிழைகளை கண்டு கொள்ளக் கூடாது என்ற நடைமுறைப் பழக்கம் உள்ளது. அதற்காக மெயில் முழுவதும் பிழைகள் இருந்தால் அதை படிப்பவர் எரிச்சல் அடையலாம். * தேவையில்லாமல் To மற்றும் Cc வரிகளில் ஈமெயில் முகவரிகளை நிரப்பாதீர்கள். ஒரே மெயிலை பலக்கு அனுப்ப விரும்புகிறீர்கள்; ஆனால் மெயிலை பெறுபவர்களுக்கிடையே எந்த தொடர்பும் கிடையாது; முன்னே பின்னே யாரும் யாரையும் அறிந்ததில்லை என்றால் மெயில் முகவரிகளை BCc வரியில் நிரப்புங்கள்;To வரியில் உங்கள் முகவரியை இடுங்கள். * மெயிலின் அளவு சிறியதாய் இருக்கட்டும். இரண்டு அல்லது மூன்று பத்திகள், ஒவ்வொரு பத்தியிலும் சில வரிகள் கொண்டதாய் மெயில் இருந்தால் பெறுநர் மெயிலை படிப்பார். நீண்ட, வளவள மெயில்களை பலர் படிப்பதில்லை. ரத்தின சுருக்கமான மெயில்களை எல்லோரும் விரும்புவர். * மெயிலின் உள்ளே பத்திக்கு பத்தி இடைவெளி கொடுங்கள். இதனால் மெயிலை பார்க்க கவர்ச்சிகரமாக இருக்கும். * ஆங்கில பெரிய எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தி மெயில்களை தயாரிக்காதீர்கள். இப்படி செய்தால் நீங்கள் Shouting செய்வதாக கேலியாக குறிப்பிடுவார்கள். ஆங்கில பெரிய எழுத்து, சிறிய எழுத்து ஆகியவற்றை கலந்து வழக்கமாக எழுதுவது போல மெயிலை தயாரியுங்கள். * மெயில் எளிமையான ஆங்கிலத்தில் இருக்கட்டும். உங்கள் மெயிலை பெறுபவர் ஆங்கிலத்தில் விற்பன்னராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. * நமது பேச்சின் ஏற்ற இறக்கங்கள், முக பாவங்கள் ஆகியவற்றை வைத்து நாம் எந்த மனநிலையில் பேசிகிறோம் என்பதை எதிராளி கண்டுபிடித்து விட முடியும். ஆனால் எழுதும் எழுத்துக்களில் இருந்து நமது மனநிலையை கண்டு பிடிப்பது சற்று கடினம். எனவே ஸ்மைலிகளை (Smileys) பயன்படுத்த வேண்டும். * பல சொற்களை பயன்படுத்துவதற்கு பதில் அவற்றிற்கான சுருக்கு சொல்லை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக In My Humble Opinion என்பதை பதில் IMHO என்ற சுருக்கு சொல்லை பயன்படுத்துங்கள். * என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை மெயிலினுள் தெளிவாக, கோர்வையாக டைப் செய்யுங்கள். கோர்வையாக இல்லாத மெயிலை படித்து புரிந்து கொள்ளுவது கடினம். * உங்கள் மெயிலை பெறுபவர், மெயிலை படித்தவுடன் உங்கள் மீது நல்ல எண்ணம் ஏற்படும்படி, மெயிலின் உள்ளே பணிவுடன், மரியாதையுடன் எழுதுங்கள். * புதிதாக ஒருவருக்கு மெயில் அனுப்பும் பொழுது நீங்கள் யார் என்பதை தெளிவாக ஆனால் சுருக்கமாக குறிப்பிடுங்கள். * Signature வசதியை பயன்படுத்துங்கள். ஆனால் சிக்னேச்சரில் வருகிற வரிகள், மூன்று அல்லது நான்கிற்கு மிகாமல் இருக்கட்டும். * தேவையில்லாமல் இணைப்பு (Attachment) ஃபைல்களை அனுப்பாதீர்கள். இணைப்பு ஃபைல்களால் மெயிலின் கொள்ளவு கூடி விடுகிறது. அந்த மெயிலை டவுன்லோட் செய்து படிக்க நேரம் பிடிக்கும்.</span> - anpagam - 02-18-2004 8)..... :wink: :mrgreen: இவ்வளவு நாளும் தேவையில்லாமல் எங்கையோ போய் வளவள... என தேவை இல்லாமல் வளவள எண்டிற்றன் :x <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> அந்த வெறுப்பில் அங்கால கதைப்பதில்லை எண்டு முடிவெடுத்தாச்சு....:x :roll: அதன்காரணமாக இங்கால பார்க்க வேண்டி வந்தது வந்த ஆத்திரம் அப்படியே அடங்கி இப்போ சந்தோசம்....... :evil: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :mrgreen: நல்ல முயற்சி வசி பழைய செய்திகள் என்றாலும் விளங்கபடுத்தும் முறைகள் நன்று தொடருங்கள் (தெரிந்த விசயங்களை இங்கு பகிர்ந்து கொள்வதால் யாவருக்கும் நன்மைதானே நன்றி) 8)
- vasisutha - 02-19-2004 எல்லாம் ஒவ்வொரு புத்தகங்களில் இருந்து சுட்டவை தான். எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக வெளிவிடப்படும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Mathan - 02-19-2004 நல்ல மேட்டர் வசி. நீங்க எழுதுறதுல நமக்கு சந்தோசம். ஒன்னு இரண்டு பேர் மட்டும் எழுதி மத்தவங்க படிக்காம வாரவங்க எல்லா பேரும் அவங்கவங்க கருத்த/ தெரிஞ்ச மேட்டருகளை எழுதணும். அப்பதான் நிறைய கருத்துங்க/புது மேட்டர்கள் வெளிய வரும் - Paranee - 02-20-2004 சூட்டோடுதான் தந்திருக்கிங்க வசி நன்றி. அருமையாக இருக்கின்றது இன்னுமும் எதிர்பார்தது vasisutha Wrote:எல்லாம் ஒவ்வொரு புத்தகங்களில் இருந்து சுட்டவை தான். எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக வெளிவிடப்படும். <!--emo& - வழுதி - 02-28-2004 வசிசுதா நல்ல தகவல்கள்.. நன்றிகள். இவை மட்டுமன்றி நீங்கள் உண்மையில் அனுப்பாத மின்னஞ்சல்கள் நீங்கள் அனுப்பியது போலவும் அவை உரியவரிடம் செல்லாது திரும்பி வருவன போன்றும் சில வைரஸ் மின்னஞ்சல்கள் உலா வருகின்றன. சில பணிம மேலாளரிடமிருந்து (System Administrator) வருவன போல் அமைந்திருக்கும் இவை பின்வருமாறு அமைந்திருக்கும். Subject: System Failure Notice.. Subhect: Undeliverable இவை தான் மைடோம் (W32.MyDoom) என்ற வைரஸ் கிருமிகளாகும். இவ்வாறான அஞ்சல்களையும் திறக்காமல் அழித்து விடுவது சிறந்தது வழுதி/- குப்பை மெயில்களை தவிர - vasisutha - 03-04-2004 <span style='color:#a300ff'>இன்டர்நெற் தந்துள்ள வசதிகளையும், சேவைகளையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கிற நமக்கு, குப்பை ஈமெயில்களைப் பார்க்கும்போது இன்டர்நெற்டின் மேல் வெறுப்பு வருவது இயற்கையே. junk mail அல்லது spam என அழைக்கப்படுகிற குப்பை மெயில்களால் இன்டர்நெற் உலகமே திணறுகிறது. தினமும் கோடிக் கணக்கான குப்பை மெயில்கள் அனுப்பப்படுகின்றன. Aol என்ற இன்டர்நெட் சேவையை வழங்குகிற அமெரிக்க நிறுவனத்திற்கு தினமும் 1.8 மில்லியன் குப்பை மெயில்களை cyber promotions என்ற நிறுவனம் அனுப்பிக் கொண்டிருந்தது. Aol நிறுவனம் வழக்குத் தொடர்ந்து வெற்றி கண்டதால் குப்பை மெயில்களை அனுப்புவதை cyber promotions நிறுவனம் நிறுத்தியது. நமக்கு வருகிற குப்பை மெயில்களைப் பார்த்து நாம் வழக்கு தொடர்ந்து கொண்டிருக்க முடியுமா? அதற்கான நேரமும், பணமும் நம்மிடம் உள்ளதா? இல்லையே. <b>குப்பை மெயில் என்றால் என்ன?</b> ஒரே விஷயத்தைப் பற்றிய மெயிலின் பல காப்பிகளை உங்களுக்கு அனுப்பி உங்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்கிற அல்லது படிக்காமல் அழிக்கத் தூண்டுகிற மெயில்களை Spam என்கின்றனர். நாம் தமிழில் இவற்றை குப்பை மெயில்கள் என்கிறோம். பெரும்பாலும், பொருட்களுக்கான விளம்பரங்களே. \"\"அதிகம் சம்பாதிக்க வழி'', \"\"உங்களுக்கான வெகுமதி'', \"\"ஏராளமான செக்ஸ் படங்கள்'' போன்ற பொருளடக்கங்கள் கொண்ட மெயில்கள் குப்பை மெயில்களே. மத, இன, மொழி வெறிகளை தூண்டுகிற மெயில்களும் குப்பை மெயில்களே. வைரஸ்கள் பற்றி தவறான கருத்துக்களை பரப்புகிற மெயில்களும் குப்பை மெயில்களே. பொதுவாக முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வருகிற பெரும்பாலான மெயில்கள் குப்பை மெயில்களே. <b>குப்பை மெயில்களால் என்ன இழப்பு ஏற்படுகிறது?</b> குப்பை மெயில்களை அனுப்புபவருக்கு ஒன்றும் செலவாகப் போவதில்லை. ஆனால் இந்த மெயில்கள் இன்டர்நெற் வழியாகப் பயணம் செய்வதால் அங்கு நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் முக்கியமான நல்ல தகவல்கள் பயணம் செய்ய நேரம் பிடிக்கிறது. இந்த குப்பை மெயில்களை உங்கள் கணணிக்கு டவுன்லோட் செய்வதால் உங்கள் இன்டர்நெற் அக்கவுன்டிற்கான பணம், தொலைபேசிக் கட்டணம் எல்லாம் விரயமாகிறது. மெயில்களைப் பார்த்து அவற்றுள் குப்பை மெயில்களைத் தேடிக் கண்டு பிடித்து அழிப்பதால் நமது விலை மதிப்பற்ற நேரம் வீணாகிறது. <b>ஏன் குப்பை மெயில்களை அனுப்புகிறார்கள்?</b> எவ்வித செலவும் இன்றி, உடனடியாக ஈமெயில்களை அனுப்ப முடியும் என்பதை பல வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். தயாரிப்புகளை விளம்பரப்படுத்தலாம் எனில் பணம் செலவாகும். இந்த விளம்பரங்களால் வியாபாரம் பெருகும் என்பதை உறுதியாகக் கூறமுடியாது. எனவே பைசா செலவில்லாத ஈமெயில்கள் மூலம் விளம்பரப்படுத்தலாம். யாராவது கொஞ்சம் நபர்களாவது அந்த மெயில்களைப் படிப்பார்கள், அவர்களில் கொஞ்சபேர் பொருட்களை வாங்குவார்கள் என்ற நம்பிக்கையில் குப்பை மெயில்களை அனுப்புகின்றனர். இப்படி வியாபாரத்தை பெருக்க வேண்டும் என அனுப்பப்படுகிற மெயில்களை Unsolicited Commercial Email என அழைப்பார்கள். அடுத்தவர்களை பயமுறுத்த வேண்டும், துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் பீதிகளை பரப்புகிறவர்கள் மெயில்களை அனுப்புகிறார்கள். அற்ப மகிழ்ச்சிக்காக வதந்திகள் கொண்ட மெயில்களை அனுப்புகிறார்கள். மது, மாது போன்றவை கொண்ட மெயில்களை அனுப்புகிறார்கள். சிற்றின்ப ஆசையைத் தூண்டி விடுகிற இந்த மெயில்கள் வியாபார நோக்கத்திற்கானவைதான். நமது மதத்தை நசுக்கிறார்கள், நமது மொழியை இழிவுபடுத்துகிறார்கள் என்பன போன்ற மெயில்களை அனுப்பி வெறியைத் தூண்டுகிறார்கள். <b>எப்படி நமது முகவரி கிடைக்கிறது?</b> ""நமது ஈமெயில் முகவரியை எப்படி தெரிந்து கொண்டு நமக்கு குப்பை மெயில்களை அனுப்புகிறார்கள்?'' என்ற கேள்வி எழுவது இயற்கையே. பல வெப் தளங்களில், பயனாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்யும்படி கூறப்பட்டிருக்கும். ஈமெயில் முகவரியைக் குறிப்பிடும்படி அதில் கண்டிப்பாக கூறியிருப்பார்கள். நாமும் பெருமையுடன் நமது முகவரியை கொடுத்து விடுகிறோம். வந்தது வினை. நமது முகவரி, குப்பை மெயில்களை அனுப்புகிறவர்களிடம் சென்றடைந்து விடும். அரட்டை அடிப்பதற்காக இன்டர்நெற் IB (IRC) தளங்களில் நுழைபவர்கள் ஈமெயில் முகவரிகளைக் கொடுத்து விடுகின்றனர். அவை கைமாறி விடும். நியூஸ்குரூப் எனப்படுகிற செய்திக் குழுக்களுக்கு கட்டுரை அனுப்புகிறவரா நீங்கள்? அப்படியானால் கண்டிப்பாக உங்கள் ஈமெயில் முகவரி, குப்பைகளை அனுப்புகிறவர்களிடம் சேர்ந்து விடும் கவலைப்படாதீர்கள். \"\"மெயிலிங் லிஸ்ட்'' என்ற இன்டர்நெற் சேவையைப் பயன்படுத்துபவர்களின் ஈமெயில் முகவரிகளும் விஷமிகளிடம் போய்ச் சேர்ந்து விடும். வெப் தளங்கள், IB செர்வர்கள், நியூஸ்குரூப்புகள் போன்றவற்றில் இருந்து ஈமெயில் முகவரிகளை அறுவடை செய்கிற வழக்கத்தை ஆங்கிலத்தில் harvesting எனவே அழைக்கின்றனர். இதற்காக ஸ்பைடர்கள் (Spiders) எனப்படுகிற சிறப்பு புரோகிராம்கள் பயன்படுத்தப்படுகின்றன. <b>குப்பை மெயில்களை எப்படி வடிகட்ட?</b> நீங்கள் பயன்படுத்துகிற ஈமெயில் புரோகிராம்களில் மெயில்களை வடிகட்டுவதற்கான வசதிகள் உண்டு. எடுத்துக்காட்டு: அவுட்லுக் எக்ஸ்பிரஸ் (Outlook Express) என்ற ஈமெயில் புரோகிராமில் Message Rules என்ற வசதி உண்டு. குப்பை மெயில்களை அடையாளம் கண்டு அழிப்பதற்கான விதியை நீங்கள் வகுத்தால் போதும், மீதியை ஈமெயில் புரோகிராம் பார்த்துக் கொள்ளும். Hotmail, Yahoo போன்ற வெப் தளங்களில் ஈமெயில் அக்கவுன்ட் வைத்துள்ளவர்கள், அந்த தளத்தில் உள்ள குப்பை மெயில்களை அழிப்பதற்கான வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஹொட் மெயிலில் Block Sender என்ற வசதி உள்ளது. அதைப் பயன்படுத்தி குப்பை மெயில்களை அழிக்கலாம். குப்பை மெயில்களை உங்களுக்கு யார் அனுப்புகிறார்கள் எனக் கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கப் பல தளங்கள் உள்ளன. உங்களுக்கு வந்துள்ள குப்பை மெயில்களின் நகல்களை இங்கு அனுப்பி வைக்க வேண்டும். இதோ அவற்றின் முகவரிகள்: The Voalition Against Unsolivted commercial EMail (CAUSE) http://www.vause.org The Mail Abuse Prevention System Realtine Blackholt List http://mailabuse.org/rbl </span> |