![]() |
|
ரோஜாத்திருநாள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: ரோஜாத்திருநாள் (/showthread.php?tid=7451) |
ரோஜாத்திருநாள் - Naavalan - 02-19-2004 <span style='font-size:23pt;line-height:100%'><b>ரோஜாத்திருநாள்</b></span> [u]ஒரு ரோஜாத்திருநாள் மாலைப்பொழுது... சிறு தேனீர்க்கடையின் கதிரைகளில்... அதில் நானும் அவளும் எதிரெதிராய்... விநாடிகள் நிமிஷமாகி... நிமிஷங்கள் மணிகளாய்... காதல் பற்றி அவள் பிதற்ற... கண்கள் உதட்டசைவை வெறுமையாய் நோக்க... மனம் சிறகடித்து வெளியே சூனியத்தில்... ரோஜா வேண்டுமா? அழைத்தது ஏழை பூ வியாபாரி... குரல் கலைத்தது என்னை... கருமை படர்ந்த சிவப்பாய் ரோஜாக்கள்... அன்று ஏனோ அவை அதிக அழகாய்... அவள் அவசரமாய் ஒன்று வாங்கிக் கொண்டாள்... தன் காதலனுக்கு காதலர்நாட் பரிசாய்... என் நண்பி...[/b] |