Yarl Forum
மொழிமாற்றம் சில எண்ணங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழ் /தமிழர் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=20)
+--- Thread: மொழிமாற்றம் சில எண்ணங்கள் (/showthread.php?tid=7439)

Pages: 1 2

மொழிமாற்றம் சில எண்ணங - Mathan - 02-23-2004

நா படித்ததை நீங்களும் படிக்க இங்கை போட்டிருக்கேன்

மொழிமாற்றம் சில எண்ணங்கள்

உஷா ஒரு கேள்வி கேட்டிருந்தார். 'காசி! comment க்கு சரியாய் ஒரு வார்த்தை தமிழில் சொல்லுங்கள் பார்ப்போம்?'. முதலில் நான் ஒன்றும் தனித்தமிழ் ஆர்வலன் அல்ல. அதை மீண்டும் மீண்டும் சொல்லிகொள்கிறேன். நான் காலையில் 'காப்பி'தான் சாப்பிடுகிறேன். 'காரி'ல் தான் அலுவலகம் வருகிறேன். தமிழ்ப்பித்தன் எல்லாம் கிடையாது. என் குழந்தைகளுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்துள்ளேன். அதை மாற்றும் உத்தேசம் கிடையாது. ஆகவே நானும் எல்லாரையும் போல சாதாரண 'குமுதம்-சன்டிவி-தனுஷ்-சிம்ரன்-செரினா-வைகோ' தமிழன்:-)))

உஷா, உங்கள் மேல் கோபமில்லை:-))

எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். இதில் தவறும் இருக்கலாம்.

எந்த ஒரு சொல்லுக்கும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்யும்போது 'இதுக்கு இது' என்று நேரான சொல் ஒன்றைச் சொல்ல முடியாது. மூல மொழியில் அந்தச் சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் இருக்கும். அதே பொருளுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சொல்லும் இருக்கும். அதே போல் ஆக்கவேண்டிய மொழியிலும் இப்படியே. ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் என்பது சூழல், தொனி, முதலானவற்றை (context, connotation, etc.) சார்ந்தே இருக்கிறது.

எனவே comment என்பதற்கு கருத்து, விமரிசனம், எண்ணம், மறுமொழி என்று சொல்லாலாம். இதில் 'கருத்து'க்கு, opinion, message, என்று விரிந்து கொண்டே போகும். 'விமரிசன'த்திற்கு, இதே போல் criticism, review, etc. என்று சொல்லலாம். opinion என்பதற்கு எண்ணம், அபிப்ராயம் என்றும், message என்றால் செய்தி, தூது, அறிக்கை என்றும் சொல்ல முடியும். review என்பதற்கு, அலசல், பார்வை, என்று விரியும். இது மொழிகளின் பெருமையைத்தான் குறிக்குமே அன்றி சிறுமையை அல்ல.

நம் வலைப்பதிவுகளில் comment என்பதற்குப்பதில் ஒவ்வொருவர் ஒவ்வொன்றை பயன்படுத்துகிறோம். அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. comment என்பதில் ஒரு குறைகூறும் தொனி இருப்பதாகவும், 'மறுமொழி' அப்படி எந்தத் தொனியும் இல்லாமல் வெள்ளையாக (neutral) இருப்பதாக எனக்குப் படுகிறது. comment என்பது என்னவோ தேவ வாசகம் என்று எண்ணி அதற்கு நேர் தமிழ்ச் சொல் தேடினோமானால் ஒற்றைசொல் கிடைக்காமல் போகலாம். எனவே தமிழ்மேல் சற்றுக் கோபம் கூட வரலாம். ஆனால் எங்கு அதைப் பயன்படுத்தப் போகிறோம், அந்த இடத்தில் என்ன பொருளை எதிர்பார்க்கிறோம் என்று பார்த்தால் இப்படிப்பட்ட பல விடைகளிலிருந்து பொருத்தமானதை தேர்வுசெய்யமுடியலாம்.

மொழிமாற்றம் செய்யும்போது, குறிப்பாய் கலைச்சொற்களை மாற்றும்போது இன்னொன்றையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாய் ஆங்கிலத்தில் இருந்து மொழிமாற்றம் செய்யும்போது வினை(verb - transitive, verb - intransitive) வினையின் பெயர்(Noun - act of doing), விளைவின் பெயர் (Noun - result of doing), உரிச்சொல் (adjective) என்ற பல வடிவங்களில் எந்த வடிவம் நமக்குத்தேவை என்று அறிந்து செய்யும்போது ஒரே சொல்லுக்கு வேறு வேறு தமிழ்ச் சொல் வரும். உதாரணமாய், cut, copy, paste எல்லாருக்கும் தெரியும். இதைத் தமிழில் வெட்டு, நகல், ஒட்டு என்று மொழிபெயர்த்தால் அதில் பிழை இருக்கிறது. copy என்ற பெயர்ச் சொல்லுக்கு 'நகல்' சரிதான். ஆனால் copy என்ற வினைக்கு 'நகலெடு' என்பதுதான் சரியாக இருக்கும். view என்பதற்கும் 'பார்' (வினை) 'பார்வை' (வினையின் பெயர்) 'தோற்றம்' (விளைவின் பெயர்) என்று பல பொருள்படும்.

Update என்ற சொல்லுக்கு மொழிமாற்றம் பற்றிய பேச்சு வந்தபோது அதற்கு 'புதுப்பித்தல்' என்று ஒரு சொல் முன்வைக்கப்பட்டது. எனக்கு அப்போது தோன்றிய சில எண்ணங்களை ஒரு சிறு உரையாடல் மூலம் விளக்க முயன்றேன். அது மீண்டும் இங்கே:
____________________________________________________
ஒரு சிறு உணவகத்தில் ஒரு உரையாடல்:
-----------------------------------------------------
'வாங்க அண்ணே, இப்ப எப்படி இருக்குது நம்ம கடை?'
'என்னடா ரொம்ப நாளாக் கடை மூடிக் கிடந்ததேன்னு பாத்தேன். ஓஹோ, கடையைப் புதுப்பிச்சுட்டே(1) போலிருக்கு. எல்லாம் அழகா இருக்குது.'
'ஆமாங்கண்ணே.'
'அதெல்லாம் சரி கடைக்கு உரிமமும் புதுப்பிச்சிட்டியா?)(2) காலாவதி ஆயிருக்குமே...'
'ஓ..ஆச்சுங்க, அதெல்லாம் நேரத்துக்கு செய்திட வேண்டாமா?'
'எல்லாம் சரியாப் பண்ணிருக்கே, ஆனா இந்த இன்றைய ஸ்பெஷல் பலகையை மட்டும் புதுப்பிக்க(3) மறந்துட்டே போலிருக்கே...'
'இல்லீங்களே, அதையும் ஆசாரி கிட்டே குடுத்து உடைஞ்ச கட்டையெல்லாம் சரி பண்ணி, புது பெயின்ட் எல்லாம் அடிச்சுப் புதுப்பிச்சுட்டேனே.'
'அட அது இல்லப்பா, இது இன்னும் நேற்றைய ஸ்பெஷலையே காட்டிட்டு இருக்கேனு சொல்ல வந்தேன்.'
'அட ஆமாங்கண்ணே. டேய் பையா, அந்த போர்டை அழிச்சுவிடு, சாக் பீஸ் கொண்டா, இன்றைய ஸ்பெஷலை சரி பண்ணிடலாம்.'
----------------------------------------------------
புதுப்பித்தல்(1)=refurbish
புதுப்பித்தல்(2)=renew
புதுப்பித்தல்(3)=update

செம்மொழி என்று சொல்லிக்கொண்டு மூன்றுக்கும் ஒரே சொல்லை பயன்படுத்தினால் எனக்கென்னவோ சரியாகப் படவில்லை.
____________________________________________________

எனக்கு என்ன ஆச்சு, நான் என்னவோ தமிழாசிரியர் மாதிரி இப்படி விளக்கமெல்லாம் கொடுத்துக்கொண்டு... நான் எனக்குத் தோன்றியதைச் சொல்லுகிறேன். உண்மையில் தமிழ் இலக்கணம் படித்தவர் இன்னும் சரியாகச் சொல்லமுடியும். நினைத்துப் பார்க்கிறேன், என் முந்தைய அலுவலகத்தில், வாரம் ஒருவர் சிறு குழுவில் ஏதாவது தலைப்பில் பேசுவோம். அங்கு நான் பேசிய முதல் தலைப்பு, 'How to improve our English vocabulary?'

- kuruvikal - 02-23-2004

சுட்டது எங்கோ...???!

அது போக.... இவருக்குத் தெரியாதெண்டதற்காக தமிழ இல்லை எண்டு சொல்லுறார்...தமிழில் அழகான இலக்கணத்தில்... ஒரு சொல் பல பொருள் என்று சின்னதில படிக்கல்லப்போல...எல்லாம் இங்கிலீசில படிச்சுக் கிழிச்சது எண்டு நினைப்பு...இல்ல இந்தக் கட்டுரை எழுதிய மேதாவியச் சொல்லுறம்...!

put (present tense) போடு
put (past tense) போட்டான்
put (past perfect tense) போட்டுவிட்டது

come....(present tense) வா
come....(past perfect tense)...வந்துவிட்டது

cut...(present tense) வெட்டு
cut...(past tense) வெட்டியது
cut...(past perfect tense) வெட்டிவிட்டது

இதுகள உங்கட இங்கிலீசில எப்பிடிங்கோ வேறுபடுத்துறிங்க....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

- Mathan - 02-23-2004

சுட்ட இடத்தை விட்டுட்டேன் மன்னிக்கணும். தேடி எடுத்து போடுகின்றேன்.

உங்க கேள்விகளை நானும் ஆதரிக்கிறேன். இதே மாதிரியான் கேள்விகள் எனக்கும் உண்டு.

எதுக்கும் அவங்க ஆங்கிலம் செம்மொழி இல்லைன்னு சொல்லுவாங்களோ தெரியாது.

- vasisutha - 02-23-2004

bbc is a good boy <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mathan - 02-23-2004

இன்னொரு கருத்தையும் சொல்லணும். கட்டுரை எழுதினவரோட நோக்கம் ஆங்கிலத்தில இருந்து தமிழுக்கு நேரடியா மொழிபெயர்க்க கூடாது சொல்லுறதா இருக்கலாம்.

- kuruvikal - 02-23-2004

மொழிபெயர்பில் தேவையான இடத்தில் தேவையானதைத்தானே தேர்தெடுத்துக் கையாள்வது வழக்கம்...அதென்ன நேரடி மொழி பெயற்பு...அப்படி என்று ஒரு வகை மொழிபெயற்பு உண்டா...?! நாங்கள் அறிந்ததில்லை...சம்பந்தப்பட்டவர்கள் மேலதிக விபரங்கள் தந்தால் அறிந்து கொள்ளலாம்...!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

- Mathivathanan - 02-23-2004

"Give to every human being every right that you claim for yourself."
இதை தமிழுக்கு மொழிபெயருங்கள் பார்க்கலாம்.. குருவிகளே.. எனக்கு விளங்கவில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sOliyAn - 02-23-2004

முதல்ல... 'இன்றைக்கு உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள்?" - இதை ஆங்கிலத்தில மொழிபெயர்த்து தாருங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mathivathanan - 02-23-2004

sOliyAn Wrote:முதல்ல... 'இன்றைக்கு உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள்?" - இதை ஆங்கிலத்தில மொழிபெயர்த்து தாருங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கௌ ஓல்ட் ஆர் யூ ருடே? இதுவா..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sOliyAn - 02-23-2004

எத்தனை வயது உங்களுக்கு இன்று?- இப்பிடியா கேட்டேன்?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இன்று உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள்? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

- Mathivathanan - 02-23-2004

sOliyAn Wrote:எத்தனை வயது உங்களுக்கு இன்று?- இப்பிடியா கேட்டேன்?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இன்று உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள்? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சரி.. சரி.. எனது பிழையானது .. நீங்களே விடையை சொல்லுங்களேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- vasisutha - 02-23-2004

எனக்கும் எப்படி அதை ஆங்கிலத்தில் சொல்வது என தெரியவில்லை :roll:

- sOliyAn - 02-23-2004

எனக்கு தெரியலையே.. அதுதான் கேட்டேன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- vasisutha - 02-23-2004

அட பாவி <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathivathanan - 02-23-2004

sOliyAn Wrote:எனக்கு தெரியலையே.. அதுதான் கேட்டேன்.. <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Which birthday is your's today? இது கிட்டத்தட்ட வந்தாலும் இலக்கணப்பிழை உள்ளது.. அதனால் அதை தவிர்த்து மாற்றி How old are you today? என்று கேட்பார்கள்.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Mathivathanan Wrote:
sOliyAn Wrote:எத்தனை வயது உங்களுக்கு இன்று?- இப்பிடியா கேட்டேன்?! <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இன்று உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள்? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
சரி.. சரி.. எனது பிழையானது .. நீங்களே விடையை சொல்லுங்களேன்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Mathivathanan Wrote:
sOliyAn Wrote:முதல்ல... 'இன்றைக்கு உங்களுக்கு எத்தனையாவது பிறந்தநாள்?" - இதை ஆங்கிலத்தில மொழிபெயர்த்து தாருங்கோ.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கௌ ஓல்ட் ஆர் யூ ருடே? இதுவா..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- sOliyAn - 02-24-2004

ஆகவே, பிபிசிக்கு கூறுவதென்னவென்றால்.. எந்த ஒரு மொழியையும் வேறு மொழிக்கு நேரடியாக மொழிபெயர்க்க முடியாதென்பதே! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

- Mathivathanan - 02-24-2004

sOliyAn Wrote:ஆகவே, பிபிசிக்கு கூறுவதென்னவென்றால்.. எந்த ஒரு மொழியையும் வேறு மொழிக்கு நேரடியாக மொழிபெயர்க்க முடியாதென்பதே!
இதை குருவிகளும் ஒத்துக்கொள்ளவேணுமே..
:?: :?: :?:

- kuruvikal - 02-24-2004

சோழியான் அண்ணா மொழிபெயர்ப்பு என்பதில் நேரடியான மொழிபெயர்ப்பு என்று ஒன்று அங்கீகரிக்கப்பட்ட முறையில் உலகில் செய்யப்படுகிறதா....ஆங்கில இலக்கண வடிவம் வேறு தமிழ் இலக்கண வடிவம் வேறு...பிறகெப்படி மாற்றின்றிய நேரடி மொழிபெயர்ப்பு என்பது சாத்தியம்....! ஒரு மொழியால் சொல்லப்பட்ட விடயத்தை இன்னொரு மொழியின் வடிவத்தால் இயன்றவரை கருத்துப் பிழை இன்றி நாகரிகமாகச் சொல்வதே மொழிபெயர்ப்பு.....! இதுதான் இன்று வரை உலக நடைமுறை...அதற்குள் புதிதாக ஒன்று முளைத்தது எதற்காக.....??????! :?: அதுவும் நடைமுறையில் இல்லாத ஒன்று...இதென்ன செந்தில் கவுண்டமணி வடிவேல் நகைச்சுவை ஆங்கிலமா.....தமிழா....அப்படி மொழி பெயர்த்துவிளையாட.....????!

தாத்தா நீங்கள் தந்த ஆங்கில மொழி வாக்கியம் சொல்லும் கருத்தையே தமிழ் மொழி வாக்கியமாகத் தரமுடியும்...அதை அப்படியே மொழிபெயர்க்க முடியாது....காரணம் மேலே சொல்லப்பட்டுள்ளது....!

நீங்கள் தந்த ஆங்கில மொழி வாக்கியம் சொல்லும் கருத்து என்ன என்பதும் அதை தமிழில் எப்படி எழுதுவதென்பதும் ஆங்கில தேசத்தில் வசிக்கும் ஒரு தமிழருக்குத் தெரிந்திருப்பது அடிப்படைத் தேவை....! உங்களுக்கு அந்த அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய தகுதி இருக்கும் என்று நம்புகின்றோம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

- Eelavan - 02-24-2004

உண்மைதான் நண்பர்களே கருத்துக்களை எந்த ஒரு மொழியிலிருந்தும் இன்னொரு மொழிக்கு நேரடியாக மொழி பெயர்க்க முடியாது அது வெறும் "மொழி"பெயர்ப்பாக மட்டும் அமையுமே அன்றி உண்மையான கருத்தை தராது
சிலவேளை ஆங்கிலத்தில் ஒற்றைச்சொல்லில் சொல்லக்கூடிய ஒரு சொல்லை தமிழில் சொல்வதற்கு நிறைய வார்த்தைகள் தேவைப்படலாம் அதே போன்று அதிக சொற்களால் உருவாக்கப்பட்ட ஆங்கிலச்சொல்லுக்கு நேரடியான பொருள் தரக்கூடிய தமிழ் வார்த்தைகளும் உண்டு

- sOliyAn - 02-24-2004

உண்மை. மொழிபெயர்ப்பானது அந்தந்த மொழிகளுக்கேற்ப உள்வாங்கப்படும்போதே எளிதில் மக்களைச் சென்றடையும்.
உதாரணமாக, ஒரு திரைப்படத்தை மொழிமாற்றம் செய்யும்போது அந்தப் பாத்திரங்களின் நடை உடை பாவனைகளை அந்தந்த மொழிக்கேற்றவாறு உருவாக்குவார்கள். இது டப்பிங் படங்களிலும் பார்க்க ஒரு மேலான தாக்கத்தை ஏற்படுத்துவதை அவதானிக்க முடியும்.