![]() |
|
எல்லாருக்கும் வணக்கம், - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: எல்லாருக்கும் வணக்கம், (/showthread.php?tid=7435) |
எல்லாருக்கும் வணக்கம - Ramanan - 02-24-2004 எல்லாருக்கும் வணக்கம், "இனிவரும் காலத்தில் எம்இனம் அழிந்து விடும் என எவனோ சென்னான், ஆனால் இனிவரும் காலத்தில் எம்இனம் எழுந்து நிற்கும் என இறுமாப்புடன் இடித்துரைத்தோம் அன்று. ஆனால் இன்று?" களத்தில யார் கருத்துச்சொன்னாலும் அதை சேறா மாத்தி ஆளுக்காள் எறிபடிறது கூடிப்போச்சு, அதால புதியவர்கள் தங்கட கருத்துக்களும் நாறிப்போடும் எண்டு நினைக்கினம் போல. நானும் அப்பிடித்தான் நினைக்கிறன். கருத்துள் பகிரப்படும்போது அதின்ட முக்கியத்துவம் விளங்காம அதை தனிப்பட்ட சண்டைக்கு பாவிக்கிறது புதிசா வாறவயயும், புதுக்கருத்துக்களையும் வலுவிளக்கச் செய்யிது. முந்தி நல்ல கருத்ததுக்கள் எழுதினவ கூட இப்ப சேற்ற வாரி இறைக்கிறதிலதான் முன்னுக்கு நிக்கினம். எப்பமாறும் இது? யோசிப்பம். Re: எல்லாருக்கும் வணக்க - yarlmohan - 02-24-2004 Ramanan Wrote:எல்லாருக்கும் வணக்கம், இது விடயத்தில் இனி அதிகம் கவனம் செலுத்த முயற்சிக்கிறோம். முதற்கட்டமாக தனிப்பட்ட ரீதியில் யாரையாவது தாக்கி எழுதுவர்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது. Re: எல்லாருக்கும் வணக்க - Mathivathanan - 02-24-2004 மோகன் Wrote:Ramanan Wrote:எல்லாருக்கும் வணக்கம், செல்லப்பிள்ளைகள் எத்தனைபெயரில்வந்து எப்படி அவதூறு வைத்தாலும் விஷேட அனுமதியுண்டு.. சொல்ல மறந்துவிட்டீர்கணே மோகன்..
- Eelavan - 02-24-2004 அன்பின் ரமணணுக்கு உங்கள் வேதனை புரிகின்றது நான் கூட வந்த சில நாள்களாக அதையே சொல்லி வந்தேன் நிச்சயம் கேட்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு தாத்தாவின் மனவேதனை கூட புரிகிறது என்ன செய்வது களபூமியிலிருந்து வந்தவர்கள் போராடித்தான் எதையும் பெறவேண்டும் என்றாகிவிட்டது போராடுங்கள் பேரர் நாம் இருக்கிறோம் துணைக்கு Re: எல்லாருக்கும் வணக்க - Ramanan - 02-26-2004 இது விடயத்தில் இனி அதிகம் கவனம் செலுத்த முயற்சிக்கிறோம். முதற்கட்டமாக .......... ஆக்கள் திருந்தினால் சந்தோசம். - Ramanan - 02-26-2004 நம்புவம் ஈழவன் நம்புவம், தாத்தா விளங்கிது. Re: எல்லாருக்கும் வணக்க - yarlmohan - 02-27-2004 மோகன் Wrote:வணக்கம், இது விடயத்தில் இனி அதிகம் கவனம் செலுத்த முயற்சிக்கிறோம். முதற்கட்டமாக தனிப்பட்ட ரீதியில் யாரையாவது தாக்கி எழுதுவர்களை தற்காலிகமாக இடைநிறுத்துவதென்று முடிவு செய்யப்பட்டுள்ளது.[/quote] டக்கிளசின் தற்காலிகத் தடை நீக்கப்பட்டுள்ளது. மற்றவர்களைத் தாக்கி எழுதும் போக்கில் மாற்றம் இல்லாவிடில் நிரந்தரத்தடை வழங்கப்படும். - sethu - 02-27-2004 டக்ளஸசை திறந்து விட்டதிற்கு நன்றிகள் தொடர்ந்து டக்ளஸ் தனது புதிரான தகவல்களை வைப்பாரா? முடிந்தால் வைக்கவும். எனது சவாலை நிறைவேற்றுவாரா? - Ilango - 02-27-2004 சேது மேலே என்ன எழுதப்பட்டுள்ளது என்று புரியவில்லையா? - sethu - 02-27-2004 எனக்கு புரிகிறது ஆனால் அவர் சொல்லவந்த விடயங்களை ஏன் உலகிற்கு சொல்லவேன்டும் என்பது எனது ஆவல். குற்றம் உள்ள நெஞ்சாக இருந்தால் தானே குறுகுறுப்பதற்கு. - Ramanan - 03-02-2004 அய்யோ திருப்பவுமோ |