![]() |
|
அழிவில் இருந்து தப்பிய பூமியின் வட அரைக்கோளம்...! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25) +--- Thread: அழிவில் இருந்து தப்பிய பூமியின் வட அரைக்கோளம்...! (/showthread.php?tid=7431) |
அழிவில் இருந்து தப்பி - kuruvikal - 02-25-2004 [b]அழிவில் இருந்து தப்பிய பூமியின் வட அரைக்கோளம்...! <img src='http://newsimg.bbc.co.uk/media/images/39899000/jpg/_39899127_asteroid_andrejov_203.jpg' border='0' alt='user posted image'> ஆரம்பத்தில் 30 மீற்றர்கள் அகலம் உள்ளது எனக்கருதப்பட்ட விண்கல் (2004 AS1) ஆரம்பத்தில் 30 மீற்றர்கள் அகலம் உள்ளது எனக்கருதப்பட்ட விண்கல் (2004 AS1) ஒன்று கடந்த மாதம் 13ம் திகதி அளவில் விண்ணில் இருந்து பூமியின் வடமுனைவடங்கிய (ஐரோப்பா அமெரிக்கா கனடா ரஷ்சியா அடங்கிய பகுதி) வட அரைக்கோளத்தில் எங்கோ ஒரு இடத்தின் மீது மோதுவது போல் வருகிறது எனக்கருத்தப்பட்டது. இருப்பினும் இறுதியில் அது பூமியுடன் மோதாமல் சுமார் 12 மில்லியன் கிலோமீற்றர்கள் விலகிச் சென்று விட்டது....!(இந்தத்தூரம் பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தூரத்தைப் போல் 32 மடங்காகும்)..எனினும் அது பூமியைக் கடந்த போதுதான் விஞ்ஞானிகளுக்குத் தெரிந்தது அதன் பருமன் சுமார் 500 மீற்றர் (0.5 கிலோமீற்றர்) அகலம் உடையதென்பது....! உண்மையில் அது பூமியுடன் மோதியிருந்தால் இன்று நாம் இங்கு யாழில் இருக்க முடியாது....! :roll: இது பற்றிய தகவல்கள் இப்போதுதான் வெளியிடப்படுகின்றன...! இப்போ எதிர்பாக்கப்பட்டது போன்ற ஒரு மோதுகையின் போதுதான் முன்னர் பூமியில் வாழ்ந்த டைனோசோரர்கள் முற்றாக அழிந்தன என நம்பப்படுகிறது....! [url=http://news.bbc.co.uk/1/hi/sci/tech/3517319.stm]மேலதிக தகவல் இங்கே... --------------- Thanks bbc.com - Mathan - 02-25-2004 இந்த சைட் உங்களோடதா குருவி? http://kuruvikal.blogspot.com/ இதுல நிறைய Science News இருக்கு - vasisutha - 02-26-2004 நானும் இந்த தளத்துக்கு போவதுண்டு. ஆனால் இது குருவியினதா என்றுதான் தெரியவில்லை. - kuruvikal - 02-26-2004 ம்ம்....நமதும்தான்....நண்பர்களினதும் தான்....ஏன் உங்களினதும் தான்....விஞ்ஞானம் எல்லோருக்கும் பொது....அது முழு உலகினதும் தான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
|