![]() |
|
வழுதியின் வணக்கங்கள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வழுதியின் வணக்கங்கள் (/showthread.php?tid=7427) |
வழுதியின் வணக்கங்கள் - வழுதி - 02-25-2004 வந்தனங்கள் .. அனைவர்க்கும் வழுதியின் வணக்கங்கள். கணனித்தமிழில் கருத்தாடு களத்தில் கால் பதிக்கின்றேன் ஒரு கற்றுக்குட்டியாய். என்னையும் ஏற்று ( ஆரோக்கியமானதாக, ஆக்கபூர்வமானதாக அமைந்த விடத்து)என் கருத்துக்களையும் ஏற்பீர்கள் என நம்புகின்றேன் - Paranee - 02-26-2004 வணக்கம் வழுதி தங்கள் வரவு நல்வரவாகுக கருத்துக்கள் கனதியானால் களமும் சிறப்பாகுமல்லவா தாருங்கள் உங்கள் எண்ணத்தின் சிதறல்களை - phozhil - 03-03-2004 வழுவில் மொழியொடு எழுகதிர் ஒளியொடு வணங்கி இவண் விளையாட வந்திட்ட விபுதரே! உங்களை வரவேற்பதில் களத்தாரோடு நானும் கரம் குவிக்கின்றேன் - vasisutha - 03-04-2004 ஐயா புலவரே! தங்களிடம் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. இருந்தாலும் இந்த பாமரனுக்கு தாங்கள் கூறுவது புரியவில்லை. மன்னித்தருள்க. - Mathan - 03-04-2004 எனக்கும்தான் வசி - phozhil - 03-04-2004 வழு-குற்றம்,மொழி- சொல்,எழுகதிர்-அதிகாலைச்சூரியன்,விபுதன் -கவிஞன் ------------------------------------------ அகசியம்(கேலி) செய்யாதீர்,புலவன் அல்லன் நான். உரைநடையில் நான் அறிந்த சில நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்துகின்றேன் அவ்வளவே. மன்னிக்கவும், இனி தெளிவாக்கிகொள்கிறேன். - sWEEtmICHe - 03-10-2004 tEST - Manithaasan - 03-10-2004 வழுதியாருக்கு வணக்கம்.. பொழிலாரே..நற்றமிழ் சொற்களை நயமுடன் நவில்கின்றீர்..நன்றி ஐயா! - kuruvikal - 03-10-2004 பொழிலரே எங்கள் குரு வந்தாயிற்று எனி பொழியும் செந்தமிழ் சுவையூற...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
|