Yarl Forum
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் ஆட்டிலறித் தாக - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் ஆட்டிலறித் தாக (/showthread.php?tid=742)



புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் ஆட்டிலறித் தாக - Shankarlaal - 02-23-2006

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் ஆட்டிலறித் தாக்குதல்
Written by Paandiyan - Thursday, 23 February 2006 13:16

யாழ். நாகர்கோவில் படைத்தளத்திலிருந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான முகாமாலை நோக்கி இன்று அதிகாலை 4.50 மணியளவில் ஸ்ரீலங்கா படையினர் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகமாலை யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர்கள் தூரத்தில் படையினரால் ஏவப்பட்ட ஆட்டிலறி எறிகணை ஒன்று வீழ்ந்து வெடித்துள்ளது.

இத்தாவிலுக்கும் முகமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றிற்கும், இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையம் ஒன்றிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த எறிகணை வீழ்ந்து வெடித்துள்ளது. குறித்த நலன்புரி நிலையத்திலிருந்து 150 மீட்டர்கள் தொலைவிலேயே எறிகணை வீழ்ந்த வெடித்துள்ளது. இதனால் ஏதாவது பாதிப்புக்கள் ஏற்பட்டனவா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எறிகணை வீழ்ந்து வெடித்த பகுதியை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளதாக தகவலென்று தெரிவிக்கிறது.



Sankathi.com