Yarl Forum
ஆதங்கம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: ஆதங்கம் (/showthread.php?tid=7396)



ஆதங்கம் - Mathan - 03-01-2004

இது பரணியோட கவிதை. அவர் ஏன் இதை இங்கை போடலைன்னு தெரியலை. இல்லை ரொம்ப காலத்துக்கு முன்னால் போட்டு நான் பாக்கலையா? பரணி தான் சொல்லணும்.

உறவு, நண்பர்கள் இல்லாம வெளி நாட்டிலை தவிக்கிற தமிழனோட மனத்தை ரொம்ப அருமையா சொல்லியிருக்கார்.

வாழ்த்துக்கள் பரணி

[size=18]ஆதங்கம்

[size=14]எத்தனை இழப்புகள்
எத்தனை தவிர்ப்புகள்
தேசம்விட்டு வந்தபின்
என்னை நானே உணர்கின்றேன்

ஆலயத் திருவிழாக்கள்
பாடசாலை விளையாட்டு
பொங்கலின் களிப்புகள்
புத்தாண்டு கொண்டாட்டம்
தீபாவளி விற்பனை என
எத்தனை எத்தனையோ
இழப்புகள் எனக்குள்ளே

அவைமட்டுமல்ல

உறவுகளின் திருமணங்கள்
உடன்பிறப்பின் சந்தோசங்கள்
ஊரவரின் மறைவுகள்
நண்பர்களின் விருந்துபசாரங்கள்
என எத்தனை எத்தனையோ
இழப்புகள் எனக்குள்ளே

இன்றும்கூட
நாம் ஆலயம் சென்றோம்
நாம் உறவினர் வீடு சென்றோம்

அவர்கள் வந்தார்கள்
இவர்கள் வந்தார்கள் என
என் வீட்டார் கூறும்போது எனக்கு
ஆத்திரமும் பொறாமையும்
ஓருங்கே வருகின்றது

நான் மட்டும் இங்கே
அனாதையாய் வாழ்கின்றேன்

உறவினர் இல்லை
ஊரவர் இல்லை
பண்டிகை இல்லை
இது என்ன வாழ்க்கை

தமிழனாய் பிறந்து
இன்று தனியனாய் வாழ்கின்றேன்
அங்கும் இல்லை
இங்கும் இல்லை
இடையினில் வாடுகின்றேன்

அழகாக உடுத்த ஆடை உண்டு
ஆசைதீர உண்ண உணவுகள் உண்டு
கால்நீட்டி உட்கார அழகான மனை உண்டு
இத்தனை இருந்தும்
உறவுகள் இல்லாது
ஊரவர் இல்லாது
எப்படி வாழ்வது

நன்றி - பரணிதரன்


- Paranee - 03-01-2004

நன்றி பிபிசி

போட்டிருக்கின்றேன் என நினைக்கின்றேன் பழைய தளத்தில்

இங்கு அதை மீண்டும் வெளிச்சமாக்கியதற்கு நன்றிகள் கோடி
நட்புடன் பரணீதரன்


- Mathan - 03-01-2004

நன்றிக்கு நன்றி. தமிழ்ல எப்பிடி நன்றிக்கு(Thank you) வெல்க்கம்(Welcome) சொல்றதுன்னு தெரியலை. யாராவது தெரிஞ்சா சொல்லுங்க. இல்லைன்னா இத பத்தி தனி விவாதம் ஆரம்பிச்சுரலாம்

இதை நான் உங்க தனிப்பட்ட பக்கத்துல பார்த்தேன் பரணி. பழைய யாழ் பக்கம் நான் முழுக்க பாத்ததில்லை.


- yarlmohan - 03-01-2004

பழைய களம் : http://www.yarl.com/kalam/


- Eelavan - 03-02-2004

இது பரணி அண்ணனின் ஆதங்கம் மட்டுமல்ல எனது மனதைப் பிழியும் உண்மையும் தான்

எதிர்பார்த்து வந்த படிப்பு,
எதிர்பாராமல் கிடைத்த வசதிகள்,
பல்வேறு நாகரீகங்கள்,
பலநூறு பழக்கவழக்கங்கள்.
இத்தனையும் கிடைத்தும்,
மனம்
ஏதோ ஒன்றுக்காக...
அலை மோதுகின்றதே!
ஏன்?

காலை வேளையில்,
"மச்சான் எழும்படா...
கல்லூரிக்குப் போகவேணும்".
திருப்பள்ளியெழுச்சியாய்
நண்பன் குரல்.
இதையே....
அம்மா சொன்னால்,
எவ்வளவு நன்றாகவிருக்கும்.

இருள் நிறையும் நேரம்
"மச்சான் சாப்பிட்டாயா?..
கோப்பையில் தேத்தண்ணி இருக்கு..
குடிச்சிட்டுப் படு"
நண்பனின் விசாரிப்பு.
இதையே....
தங்கை சொன்னால்
எப்படியிருக்கும்

பொங்கலுக்கும் தீபாளிக்கும்
இங்கு மட்டும்.
என்ன குறைச்சல்?
இங்கென்ன
கோவிலில்லையா?
கும்பிடுவதற்கு,
சாமியில்லையா?
மனம் மட்டுமேன்
ஆலமரத்தடிப் பிள்ளையாருக்கு
அடம்பிடிக்கிறது?

"என்ன இருந்தாலும்
என்ரை ஊர் மாதிரி வராது"
அடிக்கடி நான் சொல்ல..
அலட்டாமல் நண்பன்.
எனக்குத் தெரியும்,
அவன் கண்கள்
இப்போது
உப்புக் கண்ணீர்
ஊற்றாகும்.

என்ன குறை
இந்த நாட்டில்?
உனவில்லையா?
உடையில்லையா?
ஊர் சுற்ற..
நட்பில்லையா?
இருந்துமேன்
தெருப் புழுதிக்கும்
தேங்காய்ப் பிட்டுக்கும்
ஊமையாய்
அழுகிறேன்?

எதற்காக கவலை
அம்மாவிற்கா,
தங்கைகளுக்கா?
நான் உழைப்பதே
அவர்களுக்காகத் தானே.
அதுதானே கிழமைக்கொருதரம்
தொலைபேசியில்
குரல் கேட்கிறேன்.
நண்பர்கள்???
இங்கேயும் உள்ளனரே.

பின் எதற்காம்
இந்த ஏக்கம்...
அங்கலாய்ப்பு...
என் மீது எனக்கே
இனம் புரியாக் கோபம்.?
ஒவ்வொரு விடுமுறையிலும்
அழகழகாய் எடுத்து வந்து
அடுக்கி வைத்து ரசிக்கும்
புகைப் படங்களிலுள்ள
என்னூருக்கா?


- sWEEtmICHe - 03-02-2004

வாழ்த்துக்கள் பரணி,

நல்ல இருகு நன்றி ... நண்பா!!

ஆதங்கம்

எத்தனை இழப்புகள்
எத்தனை தவிர்ப்புகள்
தேசம்விட்டு வந்தபின்
என்னை நானே உணர்கின்றேன..
அன்புடன் மிச்