![]() |
|
ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள்: உலகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=14) +--- Thread: ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்! (/showthread.php?tid=736) |
ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்! - வினித் - 02-23-2006 ராஜீவ்காந்தியின் கொலையும் சுப்பிரமணியசுவாமியின் அலட்டலும்! ராஜீவ்காந்தி கொலையைப் பற்றி இந்தியாவில் உள்ள பைத்தியக்கார அரசியல்வாதி என குறிப்பிடப்படும் சுப்பிரமணியசுவாமி "விடை கிடைக்காத வினாக்களும் கேட்கப்படாத கேள்விகளும் என்ற தலைப்பில் தனது அலட்டல்களை புத்தகவடிவில் கொண்டு வந்துள்ளார். புத்தகத்தின் அரைப்பகுதி வரை சுய புராணம் பாடியுள்ள சுவாமி ஏதோ ராஜீவ்காந்தி தன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியை காங்கிரசுக்கு வந்து சேருமாறு கெஞ்சி மன்றாடியதாவும், ஆனால் தான் ஜனதா கட்சியையும் கொள்கையையும் விட்டு விலகாதவன் என்று புலம்பியிருக்கிறார். அத்தோடு நில்லாமல் தான் அமைச்சராக இருந்த நேரத்தில் தான் ஒருவர்தான் நம்பிக்கையான நியாயமான அரசியல்வாதி என்றும், யஷ்வந்த்சிங், கமால் மொரார்க்கா, அர்ஜுன்சிங் போன்ற மற்றைய அமைச்சர்கள் மீது கூவத்து சாக்கடையை அள்ளி வீசியுள்ளார். இப் புத்தகத்தில் சுவாமி கேட்கும் வினாக்கள்: - ராஜீவ்காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது திருப்பத்தூர் வந்தே தீரவேண்டும் என்று சிலர் முயன்றனர். அவர் அங்கு வருவதை அந்த நேரத்தில் தோழமைக் கட்சியான ஜெயலலிதாவும், காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் விரும்பவில்லை. இப்படியிருக்க ராஜீவ்காந்தியை வரவழைத்தது யார்? - திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய குழுவின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு சில விடயங்கள் தெரியும். ஆனால் இதுவரையில் மௌனமாக இருக்கிறார். ஏன்? - மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருபெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி இதுவரையில் வாயை திறக்கவில்லை. ஏன்? -ராஜீவை தமிழகம் வரவழைக்க வற்புறுத்தியவர்களில் முக்கியமானவர் மணிசங்கர் அய்யர். கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரையில் மணிசங்கர் அய்யர் விசாரிக்கப்படவில்லை. ஏன்? இவர் குற்றம் சாட்டுவது இஸ்ரேலின் மொஸாட் அமைப்பையே. ஏன் இவருடைய குற்றச்சாட்டு இந்திய உளவுத்துறையால் கருத்தில் எடுக்கப்படவில்லை? - உடலில் பொருத்தப்பட்ட குண்டுகளுடன் வந்த தாணுதான் கொலையாளி என்றால், முன்பின் தெரியாத தாணு எப்படி பொலிஸ் பாதுகாப்பின்றி மாலையிட அனுமதிக்கப்பட்டார்? - வேதாரண்யம் சண்முகத்தின் தற்கொலையின் மர்மம் ஏன் ஆராயப்படவில்லை? - ராஜீவ்காந்தி கொலையை விசாரிக்க லண்டன் போயிருந்த உளவுப்பிரிவு அதிகாரியின் பெட்டி காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பெட்டியில் என்ன இருந்தது? இவ்வாறு கேள்விகளை எழுப்புகின்ற சுவாமி வேறு சிலரின் மீதும் குற்றம் சாட்டுகிறார். ராஜீவ் கொலையில் விடுதலைப்புலிகளுடன் காங்கிரஸின் பதவி ஆசை பிடித்த அர்ஜுன்சிங் தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார். அதே போல் ராம்ஜெத்மாலினி மீதும் தன் குற்றச்சாட்டுக்களை தொடுத்துள்ளார். இவர்கள் எல்லாம் ராஜீவ்காந்தி கொலையில் பலனடைந்தவர்கள் என்று கூறி நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகாமாக தன் குற்றச்சாட்டுக்களை வலியுறுத்துகிறார். இப்படியெல்லாம் கேள்விகளையும் எழுப்பி பலரை குற்றமும் சாட்டுகின்ற சுவாமி ஈழப்பிரச்சனைக்கும் சில தீர்வுகளை முன்வைக்கின்றார். 1. இலங்கைக்கு இந்திய முறைக் கூட்டாட்சியை கொண்டு வருவது ( அதாவது தமிழர்கள் வாழும் பகுதியை தனி மாநிலமாக்கி பெடரல் முறையை வலுப்படுத்துவது என நினைக்கிறேன்) 2. இலங்கையை பிரித்து ஈழம் என்று தனி நாட்டை உருவாக்குவது 3. இலங்கையை இந்தியாவுடன் இணைப்பது ( இதை வாசிப்பவர்கள் தயவு செய்து சிரிக்க வேண்டாம். சுவாமி நியமாகவே இந்த யோசனையை முன் வைக்கின்றார். ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த இந்த சுவாமி மண்டைக் குழப்பத்தில் அல்லது மது போதையில் எழுதினாரா என்று தெரியவில்லை) இந்த மூன்று வழிகளில் இரண்டாவதை கடுமையாக எதிர்க்கிறார். இது இந்தியாவிற்கு ஊறு விளைவிக்கும், இந்தியாவிலும் பிரிவினைவாதத்திற்கு வழி கோலும் என்பது அவரது கருத்து. முதலாவது தீர்வு ஈழத் தமிழரின் மிகக் குறைந்து பட்ச கோரிக்கை என்றும் காலம் கடக்க கடக்க இது நடை பெறுவதில் மிக குறைந்த சாத்தியங்களே உள்ளது என்றும் கூறுகின்றார். மேலும் புலிகளை ஒழிக்காமல் முதலாவது தீர்வு நடைமுறைக்கு வந்தால் அது இரண்டாவதிற்குதான் வழி வகுக்கும் என்பது சுவாமியின் வாதம். ஆகவே மூன்றாவது தீர்வைத்தான் இந்தியர்கள் அதிகம் விரும்புகிறார்கள் என்றும் சொல்கிறார். இந்தத் தீர்வுகளுக்கு அப்பால் ராஜீவ்காந்தியின் கொலைக்கு காரணமானவர்கள் என இந்திய நீதிமன்றங்களினால் தீர்மானிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரை இந்தியாவிற்கு கொண்டு வந்து உரிய தண்டனை கொடுத்தே தீர வேண்டும் என்றும், அவ்வாறு இதுவரை நடைபெறாதது இந்தியாவுக்கு உள்ள பெருத்த அவமானம் என்றும் குமுறுகிறார். புலிகள் சுதந்திரப் போராளிகள் அல்ல, அவர்கள் போதை மருந்து கடத்தல்காரர்கள் என்று புத்தகம் முழுவதும் சுவாமி குறிப்பிடுகின்றார். இந்த புத்தகம் சம்பந்தமாக தமிழகத்தில் உள்ள சில பெயர் குறிப்பிடமுடியாத நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழு, அவர்களும் சில கேள்விகளை எழுப்பினார்கள். - திருபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் ராஜீவ்காந்தியை தவிர ஒரு காங்கிரஸ்காரன் கூட கொல்லப்படவில்லையே. இதில் உள்ள மர்மம் என்ன? - சிறப்பு அதிரடிப்படையால் கொல்லப்பட்ட ஒற்றைக்கண் சிவராசனின் உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது ஏன்? தணுவின் உடல் மட்டும் ஏன் சாட்சிக்காக சென்னயில் வைக்கப்பட்டிருந்தது? - திருபெரும்புதூர் உள்ள+ர் காங்கிரஸ் தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை கடத்தினார்கள். இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரெயில்வே தொழிலாளி. ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படி கோடிஸ்வரரானார்? இந்த தமிழக நண்பர்களின் கேள்விகளையும் சுவாமியின் கேள்விகளையும் பார்க்கும் பொழுது, மொத்தத்தில் ராஜீவ்காந்தி கொலை ஒரு உள்வீட்டுச் சதியே என்பது புரிகிறது. .வன்னியிலிருந்து புலோலியூரான் http://www.webeelam.com/ - தூயவன் - 02-24-2006 அக் கொலையில் இந்தியவின் உள்வீட்டுச் சதி தான் முக்கிய காரணம் என்பது இப்போது வெளிப்படையாக மறைக்கமுடியாமல் வருவது மகிழ்ச்சியே!! ஆனால் தன்னை புலிகள் மதிக்கவில்லை என்பதற்காக புலம்பித்திரியும் இந்தியாவின் யோக்கர் சுப்பிரமணியம் சுவாமி தன் இருப்பை காட்டவேண்டும் என்பதற்காகத் தான் நூல் விடுகின்றார் போலும். அல்லது சனம் மறந்துவிடும் என்ற பயம் தான். இருந்தாலும் இவரை ஒரு FBI என்று பலர் சொல்லுவதுண்டு. அமெரிக்காவின் தேவைக்காக இந்திய அரசியலைக் குழப்பியடிப்பார். பிஜேபியின் ஆட்சியை தேனீர் கொடுத்தே குழப்பி அடித்தவர் என்று புகழ் பெற்ற இந்திய அரசியல் குழப்பி. இவர் எல்லாம் இந்தியாவின் தேசப் பற்றைக் கதைப்பது வேடிக்கை. - கந்தப்பு - 02-24-2006 சுப்பிரமணியசுவாமி அமேரிக்க காவட் பல்கழைக்கழகத்தில் படிச்சாலும் 8ம் வகுப்பு அறிவு போல, புலம்பல் தாங்கமுடியவில்லை - Raguvaran - 02-24-2006 கந்தப்பு Wrote:சுப்பிரமணியசுவாமி அமேரிக்க காவட் பல்கழைக்கழகத்தில் படிச்சாலும் 8ம் வகுப்பு அறிவு போல, புலம்பல் தாங்கமுடியவில்லை <b>தவறு! எட்டாம் வகுப்புடன் எவரும் போட்டி போட முடியாது. அவர் எங்கோ நிற்பார்....</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- வர்ணன் - 02-24-2006 கந்தப்பு Wrote:சுப்பிரமணியசுவாமி அமேரிக்க காவட் பல்கழைக்கழகத்தில் படிச்சாலும் <b>8ம் வகுப்பு </b>அறிவு போல, புலம்பல் தாங்கமுடியவில்லை அட நம்ம <b>சுகுமார</b> வையா அர்த்தப்படுத்தினீங்க ஐயா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Luckyluke - 02-24-2006 Quote:இந்த தமிழக நண்பர்களின் கேள்விகளையும் சுவாமியின் கேள்விகளையும் பார்க்கும் பொழுது, மொத்தத்தில் ராஜீவ்காந்தி கொலை ஒரு உள்வீட்டுச் சதியே என்பது புரிகிறது. ஆனால், இது வரை புலிகள் இதை தாங்கள் செய்ததாகத்தானே கூறுகிறார்கள்.... புலிகளின் தலைவரும் இதை ஒரு "துன்பியல் சம்பவம்" என்று பேட்டியில் ஒத்துக்கொண்டாரே...... - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-24-2006 Luckyluke Wrote:Quote:இந்த தமிழக நண்பர்களின் கேள்விகளையும் சுவாமியின் கேள்விகளையும் பார்க்கும் பொழுது, மொத்தத்தில் ராஜீவ்காந்தி கொலை ஒரு உள்வீட்டுச் சதியே என்பது புரிகிறது. þÆ× Å¢Øó¾ÐüÌ ÅÕò¾õ ¦¾Ã¢Å¢ò¾¡ø,¬Ú¾ø ¦º¡ýÉÅý §ÁÄ ÀÆ¢ §À¡ÎÈо¡ý §º¡ÆÅó¾¡ý ÅÆì¸Á¡? - ¾õÀ¢Ô¨¼Â¡ý - 02-24-2006 Luckyluke Wrote:Quote:இந்த தமிழக நண்பர்களின் கேள்விகளையும் சுவாமியின் கேள்விகளையும் பார்க்கும் பொழுது, மொத்தத்தில் ராஜீவ்காந்தி கொலை ஒரு உள்வீட்டுச் சதியே என்பது புரிகிறது. þÆ× Å¢Øó¾ÐüÌ ÅÕò¾õ ¦¾Ã¢Å¢ò¾¡ø,¬Ú¾ø ¦º¡ýÉÅý §ÁÄ ÀÆ¢ §À¡ÎÈо¡ý §º¡ÆÅó¾¡ý ÅÆì¸Á¡? - அகிலன் - 02-24-2006 முதல் முறை இராக் யுத்தம் முடிந்தபின் ராஜீவ்தான் இராக்கிற்கு இந்திய அரசியல்வாதிகளையும் எதிர்த்து போய் இறங்கிய தலைவர்(பதவியில் இல்லாத போதும்). ராஜீவ் இந்திய தலைவரானால் இராக்கின் மேல் உள்ள பிடி குறையும் எண்று அமெரிக்கா கொலை செய்ததாக சில அரை லூசுகள் சொல்கிறார்களே. அதில எதும் உண்மை இருக்குமா.? "சுப்புற சாமியை" கேழுங்கப்பா.! - putthan - 02-24-2006 புலிகளின் தலைவரும் இதை ஒரு "துன்பியல் சம்பவம்" என்று பேட்டியில் ஒத்துக்கொண்டாரே...... தலைவரே சொல்லிட்டார் கம் என்று இருங்கோவேன் அதை விட்டுவிட்டு ஏன் அப்பு ஓவர் பிள்டப்...... இனி இவ்வாறான துன்பியல் சம்பவம் ஏற்படாத வண்ணம் பார்த்துகொள்ளுங்கோ .............. - கறுப்பன் - 02-24-2006 நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக நடக்கட்டும். - Raguvaran - 02-24-2006 இனிமேல் எதற்கும் அனுதாபம் தெரிவிக்கக்கூடாது. :roll: :roll: mile2:
- தூயவன் - 02-26-2006 Raguvaran Wrote:இனிமேல் எதற்கும் அனுதாபம் தெரிவிக்கக்கூடாது. கதிர்காமர், நீலன் திருச்செல்வம் எல்லாம் மண்டையைப் போடும் போது அமெரிக்காவும், இந்தியாவும், ஏன் அனுதாபம் தெரிவித்தவை!! கூட்டுச் சதியாக இருக்குமா?? :roll: :roll: - karu - 02-26-2006 ராஜீவ் கொலையில சுப்பிரமணிய சுவாமிக்கும் இன்னுமொரு சந்திரசேகர சுவாமிக்கும் தொடர்பு இருக்குதாமெண்டும் கதைக்கிறாங்க. சுப்பிரமணியசாமி; மதுரைப்பக்கத்தில செய்யிற து}ள் வியாபாரத்துக்கு இலங்கைக் கரையத் தங்குதளமாப் பாவிக்க ஏலாம புலிகளுடைய வலிமையான கடற்படை தடையா இருக்குறதால புலிகளை ஒழிச்சுப்போட்டுத்தான் மறுவேலை எண்டு கங்கணங்கட்டிச் செயல்படுறதாகவும் கதை அடிபடுகுது. - Raguvaran - 02-28-2006 தூயவன் Wrote:Raguvaran Wrote:இனிமேல் எதற்கும் அனுதாபம் தெரிவிக்கக்கூடாது. :? :? :? :?: :?: :? - malu - 02-28-2006 ஏனைய்யா சுப்புவெல்லாம் கண்டுக்கிட்டு அவருக்கு வேற பப்ளிசிட்டி தர்ரைங்க. அவரும் அப்பப்ப நானும் இருக்கிரேன் என்று காமிச்சுக்கிருவாரு. - கந்தப்பு - 03-02-2006 <!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-கந்தப்பு+--><div class='quotetop'>QUOTE(கந்தப்பு)<!--QuoteEBegin-->சுப்பிரமணியசுவாமி அமேரிக்க காவட் பல்கழைக்கழகத்தில் படிச்சாலும் <b>8ம் வகுப்பு </b>அறிவு போல, புலம்பல் தாங்கமுடியவில்லை<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அட நம்ம <b>சுகுமார</b> வையா அர்த்தப்படுத்தினீங்க ஐயா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ரகுவரன் சொல்வது போல் எட்டாம்வகுப்பு அதற்கும் மேல |