![]() |
|
நீயும்..இயற்கையும்.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நீயும்..இயற்கையும்.. (/showthread.php?tid=7358) Pages:
1
2
|
நீயும்..இயற்கையும்.. - phozhil - 03-09-2004 விசும்பில் மதக்களிறாய் முறைக்கும் மேகம், விளையாடிய நேரம் விதிர்த்த இரத்தம்; பூமகளாகம் மெல்லென தீண்டிய நீர்முத்து, புணரிசையாய் சில்லென வீசிய சுரக்காற்று; இராகம்..தாளம்..இராகம்..தாளம்.. தாளம்..இராகம்..தாளம்..இராகம்.. காரூறிய வளியிடை ஏறிய வாசம், நீரூறிய சுவரிடை ஏறிய பாசம்; இன்பம்..பித்தம்..இன்பம்..பித்தம்.. பித்தம்..இன்பம்..பித்தம்..இன்பம்.. அந்தோ! சித்தம் பித்தாக்கிய உந்தன் சத்தம் சற்றும் இல்லென மகிழ்ந்த நித்தம் சாபமாய முளைத்த சூரிய கோரம்..... - Eelavan - 03-09-2004 நண்பரே சந்தக் கவி தந்த விந்தைக் கவியே பூமகளகம் என்றுதானே வரவேண்டும் அல்லது பூமகளாகம் என வேறு பொருளுளதோ? - phozhil - 03-09-2004 அன்பின் ஈழவரே! ஆகம் என்றால் மார்பகம் என பொருள்படும். பூமகளாகம் என மலைகளை எடுத்தாள்க. மேலும் கவி எனும் அடைமொழிக்கு தகுந்தவன் அல்லன் நான், கவிக்கு நிதம் வருவது சந்தம்,எனக்கோ ஆண்டிற்கு ஒன்றோ இரண்டோ.. கருத்துப்பிழைகள் காணின் சுட்டுக,எழுத்துப்பிழையாயின் மன்னிக்கவும். ஐயம் தொடுதமைக்கு நன்றி. - Eelavan - 03-09-2004 ஐயம் கேட்டேன் அகமகிழ்வுடன் தீர்த்ததன்றி ஆகம் என்ற சொல்லையும் எனக்குத் தந்தீர் ஆண்டாண்டு காலமாகப் பொழியும் மழையெல்லாம் வேண்டுவாரில்லாமல் கடலிடை ஏகும் போது கரையிடை உள்ள நீரைக் கவனத்தில் கொள்ளாச் சிப்பி தான் வேண்டும் துளியை நோக்கி தவத்தினிலிருந்தாற் போல வேண்டிப் பெற்ற கவிதை இது நன்றி - vasisutha - 03-09-2004 நான் எந்த உலகத்தில் இருக்கிறேன். ஏதோ நல்லாய் எழுதியிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. மன்னியுங்கள் பொழில். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- phozhil - 03-10-2004 Eelavan Wrote:ஐயம் கேட்டேன் அகமகிழ்வுடன் தீர்த்ததன்றி ஆகம் என்ற சொல்லையும் எனக்குத் தந்தீர்கேண்மைசால் ஈழவரே! தங்கள் அன்புச்சொல்லுக்கு நன்றி. - phozhil - 03-10-2004 vasisutha Wrote:நான் எந்த உலகத்தில் இருக்கிறேன்.மன்னிக்கவும், தாங்கள் புரிந்துணர இவை உதவும். விசும்பு -வானம், களிறு -யானை, விதிர்ப்பு -வியர்வை, கார் -மழை, வளி-காற்று. இயற்கையின் வினோதங்களில் அவன் மனம் ஆழ்ந்த சமயங்களில் மட்டுமே அவனுக்கு அவள் நினைப்பில் இருந்து விடுதலை.அப்பொழுதும் அவளை மறந்துவிட்டோமே என்றெண்ணிய கணமே மீண்டும் அவளாட்கொள்கிறாள். Re: நீயும்..இயற்கையும்.. - sWEEtmICHe - 03-10-2004 phozhil Wrote:சித்தம் பித்தாக்கிய உந்தன் சத்தம்நண்பரே வார்தைகல் மிக அருமை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Eelavan - 03-10-2004 அன்பின் நண்பியே இங்கே நீங்கள் உபயோகிக்கவேண்டியது "கல்" இல்லை "கள்" (சோழியன் அண்ணா அதற்காக களத்தில் கள் உபயோகிக்கலாமா என்று கேட்கவேண்டாம் தேவைப்படின் நிர்வாகம் அனுமத்தித்தால் உபயோகிக்கலாம்) - kuruvikal - 03-10-2004 அப்படிச் சொன்ன புரியாது ஈழவன்...இப்படிச் சொல்லுங்கோ...கல்(kal) இல்ல கள் (kaL) அப்படி என்று...எனி அம்மணி திருந்த வேணும்...இல்லாட்டி.....????! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Eelavan - 03-10-2004 விடுங்கோ குருவிகாள் nursary ல் படிக்கும் போது தங்கச்சிக்குச் சொல்லிக் கொடுத்தது தான் நினைவுக்கு வருகிறது - Eelavan - 03-10-2004 அன்பின் தங்கையே ஆருயிர்ச்செல்வமே குறும்பு மழலை பேசி கொள்ளை கொண்டவளே மழலையால் மகிழ்ந்தோமன்றி மனவேதனை கொண்டோமல்ல வந்தாரை வாழ வைக்கும் வற்றாத பண்புண்டு தமிழ்த் தாயின் மருமகளே தலை தழ்ந்து வணங்குகிறேன் உன் தமிழுக்காய் அல்ல தமிழ் பேசும் ஆர்வத்துக்காய் - shanmuhi - 03-10-2004 <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 03-10-2004 Eelavan Wrote:அன்பின் தங்கையே இதுதான் எங்கள் நிலைப்பாடும்...! எமக்குத் தெரிந்த தமிழைச் சொல்லித் தந்தோம் ஏன் கோபிக்கிறீர்கள்....! தவறுகண்டால் மன்னித்துவிடுங்கள்....! இது வந்தாரை வாழவைக்கும் தேசத்தின் குடிமக்கள் வாழும் வீடு....! ஆனால் ஒரு அன்பான வேண்டுகோள் எனிமேலும் ஆங்கிலத்தில் எழுதுவதை இயன்றவரை தவிருங்கள்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Manithaasan - 03-10-2004 Quote:தலை தழ்ந்து வணங்குகிறேன் ஈழவரே தாழ்ந்து எனச் சொல்லவந்திருக்கிறீர்கள் அப்படித்தானே.. - kuruvikal - 03-10-2004 எங்கள் மணிதாசன் அங்கிள் எங்கே போனீர்கள்....?! தங்கள் கவியும் காணோம் கருத்தும் காணோம் கண்கள் தவித்தன சித்தம் அலைந்தது விடைகாண...! மீண்டும் தங்கள் வரவு பகலவன் கண்ட செந்தாமரையாய் உள்ளம் பூரிக்க நல் வரவாகுக....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Manithaasan - 03-10-2004 உடல் நலிவுற்று உள்ளம் மிகச்சோர ..யேர்மன் மருத்துவர்கள் மனம் வைத்துழைத்து நிமிர்த்தியெனை மீண்டும் நடமாட வைத்துள்ளார். இயன்றதையெழுத இன்னும் உடற்தெம்பு தேவை! முயன்று பார்க்கின்றேனே முழுவீச்சோடு வந்திட..... - shanmuhi - 03-10-2004 தாங்கள் என்றும் நலமுடன் இருக்க பிராத்தனைகள்...... - kuruvikal - 03-10-2004 இவ்வளவு நடந்தும் ஏன் இந்த மெளனம் மாற்றார் போல் எம்மையும் எண்ணிட யாம் என்ன தவறு செய்தோம்...! ஒரு வார்த்தை செப்பி இருந்தால் இயன்றதை உடல் வருத்தியேனும் செய்திருப்போமே...! எனியும் வேண்டாம் மெளனம் தேவைகள் கண்டால் உடன் செப்புங்கள் உடனுதவ இயன்றதைச் செய்வோம் முழுச் சுகத்திற்கு இறைவனையும் வேண்டி நிற்கிறோம்...! :twisted:
- Eelavan - 03-11-2004 Manithaasan Wrote:Quote:தலை தழ்ந்து வணங்குகிறேன் தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி ஐயா/அண்ணா |