![]() |
|
வணக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: வணக்கம் (/showthread.php?tid=7308) Pages:
1
2
|
வணக்கம் - vallai - 03-21-2004 வணக்கம் நான் வல்லை கேள்விப்பட்டிருப்பியள் பார்த்தும் இருப்பியள் வல்லை வெளியைப் பற்றி அப்பிடித் தான் நானும் நிறையப் பிரயோசம் இருந்தும் பயன்ப்டுத்தாமல் இருக்கிறன் இனிப் பிரயோசனப் படுத்துவம் - Kanthar - 03-21-2004 உப்புக்காத்து உடம்புக்கு நல்லம்... அதை உள்ளத்துக்கும் நல்லதாக்க வாரவேணும் வணக்கம் வல்லை வாங்கோ வாங்கோ.... - shanmuhi - 03-21-2004 தங்கள் கருத்துக்கள்..... யாழ்களத்தை பிரயோசனப்படுத்த வாழ்த்துக்கள்.... - Paranee - 03-21-2004 வல்லை வெளியாக இருந்தாலும் வெளிச்சமானது இணைப்பு கொடுத்து இரு பிரதேசங்களை வளர்த்துக்கொண்டுள்ளது வாருங்கள் வல்லை தாருங்கள் நற்கருத்தக்களை - vallai - 03-21-2004 ஓமப்பு பூகோள ரீதியிலை பாத்தா இரண்டு பிரதேசமில்லை மூண்டு பிரதேசம் வடமராச்சி,தென்மராச்சி,வலிகாமம் மூண்டுக்கும் இடையிலை இருக்கு மொத்தத்திலை நாவற்குழி கடனீரேரியும் வல்லையின் ஒரு தொடுப்புத் தானே இப்படி ஒரு உறவுப் பாலமாகத் தான் இருக்க எனக்கும் விருப்பம் இதுக்கை ஆரும் வல்லை தெரியாதனீங்கள் இருந்தா சொல்லுங்கோ ஓயாத அலை ஓபிறேசன் லிபரேசன்,இடி மின்னல்,சூரியக்கதிர்,இந்தியன் ஆமியின்ரை கோப்பாய் சண்டை என்று எல்லாத்துக்கும் களம் கொடுத்த உப்பு விளையும் பூமிதான் இந்த வல்லை - Manithaasan - 03-21-2004 வணக்கம் வல்லை... வாருங்கள் !நற்கருத்துகளாய் தாருங்கள் - Mathan - 03-21-2004 vallai Wrote:ஓமப்பு பூகோள ரீதியிலை பாத்தா இரண்டு பிரதேசமில்லை மூண்டு பிரதேசம் வடமராச்சி,தென்மராச்சி,வலிகாமம் மூண்டுக்கும் இடையிலை இருக்கு மொத்தத்திலை நாவற்குழி கடனீரேரியும் வல்லையின் ஒரு தொடுப்புத் தானே வணக்ஸ் வல்லை. எனக்கு வல்லை பத்தி ரொம்ப தெரியாது நீங்க சொல்லுங்க - Eelavan - 03-22-2004 வணக்கம் வல்லை வாருங்கள் களத்துக்கு தாருங்கள் கருத்துகளை - vallai - 03-22-2004 அப்பு ராசா வல்லை பற்றி ரொம்பத் தெரியாதோ உமக்கு நான் என்னெண்டு விளங்கப் படுத்திறது யாழ்ப்பாணம் வந்ததில்லைப் போலை கிடக்கு - Mathan - 03-22-2004 vallai Wrote:அப்பு ராசா வல்லை பற்றி ரொம்பத் தெரியாதோ உமக்கு நான் என்னெண்டு விளங்கப் படுத்திறது யாழ்ப்பாணம் வந்ததில்லைப் போலை கிடக்கு தெரியாதவங்க யாரும் இருக்கிறாங்களான்னு நீங்க தானே கேட்டீங்க? அப்ப அதை பத்தி சொல்லுங்களேன். - vallai - 03-22-2004 சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டா உண்மையிலை கேப்பியள் எண்டு நினைக்கேலை இப்பிடி விடுத்து விடுத்து கேள்வி கேக்கிறவையளை எனக்கும் பிடிக்குமெண்டதாலை சொல்லுறன் வல்லை யாழ்ப்பாணத்திலை இருந்து வடமராச்சி போற வழியிலை இருக்கு நட்ட நடுவிலை எங்கடை குலதெய்வம் முனியப்பரும் இருக்கிறார் எதுக்கும் பூகோளப்படம் எடுத்துப் பாருங்கோ - Mathan - 03-22-2004 vallai Wrote:சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டா உண்மையிலை கேப்பியள் எண்டு நினைக்கேலை பூகோளப் படத்திலை வல்லை என்ன நைல் நதி எங்கே இருக்குது அப்பின்னு கூட தெரியும். நான் அதை கேக்கலை. வல்லையோட அருமை பெருமைகளை சொல்லுவீங்கன்னு நினைச்சேன். - kuruvikal - 03-22-2004 வல்லைவெளி எங்க முற்றவெளியிலையா இருக்குது....அதுகிடக்கட்டும்...வருக வல்லை தருக 'சென்றி' போடாக் கருத்துகள்....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: :wink:
- Mathan - 03-22-2004 kuruvikal Wrote:வல்லைவெளி எங்க முற்றவெளியிலையா இருக்குது....அதுகிடக்கட்டும்...வருக வல்லை தருக 'சென்றி' போடாக் கருத்துகள்....! 'சென்றி' போடாக் கருத்துகள் ??? :roll: அதற்கு அனுமதி ??? - kuruvikal - 03-22-2004 உதுக்கேன் முழியுறியள்...'சென்றி' எண்டா ஆருக்குத்தான் பயமில்லை...எனி கருணா 'குறூப்பும்' தலையாட்டியாகும் போல இருக்கு....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
- Mathan - 03-22-2004 kuruvikal Wrote:உதுக்கேன் முழியுறியள்...'சென்றி' எண்டா ஆருக்குத்தான் பயமில்லை...எனி கருணா 'குறூப்பும்' தலையாட்டியாகும் போல இருக்கு....! இல்லை நான் கேட்டது சென்றி போடா கருத்துக்கள் அதாவது தணிக்கை இல்லாம கருத்துக்கு அனுமதி இருக்கா என்று? அதுசரி எப்ப கருணா குறூப்பானார்? - kuruvikal - 03-22-2004 அப்ப குறூப்பில்ல கருணா கும்பல்...இப்ப சரியா...! ஒரு குரங்கு மாங்காய் கொண்டோட நாலு குரங்கு பின்னால் ஓடும் விழுகிறதப் பொறுக்கித் திண்ண...அது கும்பல்தானே....எதுக்கும் ஒரு மரியாத குடுப்பம் என்றால் விடுறியள் இல்ல...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:அப்ப குறூப்பில்ல கருணா கும்பல்...இப்ப சரியா...! அது குறூப்போ கும்பலோ தனி ஒருத்தன் இல்லை அதுதான் கேட்டனான். இலங்கை மாங்காய் போலத்தானே பார்க்க இருக்கு அந்த மாங்காயில ஒரு துண்டும் அதுக்கு பின்னால ஒரு குறூப்பும் இருக்கு. நாங்கள் அதையும் யோசிக்கோணும். இல்லாட்டி அந்த பிரைச்சனையை தீர்க்க இன்னொருத்தர் வந்துடுவார். எதுவோ இந்த விசயம் பிரைச்சனை இல்லாமல் தீர்ந்தால் சரி - kuruvikal - 03-23-2004 இதென்னப்பா நாங்கள் ஒரு பேச்சுக்கு குறூப்பெண்ட நீங்கள் அதுக்கு அங்கீகாரம் தேடுறிள் போல....! பொறுங்கோ பொறுங்கோ பொறுக்கின மாங்காய் முடிய அதுகளே ஒண்டை ஒண்டு மோதி சேர வேண்டிய இடத்தில சேருங்கள் அப்ப தெரியும் குறூப்போ...கும்பலோ...தனிக்கட்டையோ எண்டு...! ஏன் இப்ப நீங்கள் அங்கீகாரத்துக்கு அலையுறியள் ...உங்களுக்கும் மாங்காய்த் துண்டு வேணுமோ....???! ஆரோ தோப்பு வைச்சான் ஆரோ தண்ணி ஊத்தினான் ஆரோ காவல் காத்தான்...இப்ப மாங்காய் பறிக்க பழக்கி வச்சிருந்த குரங்கு கட்டு மீறி ஓடுது அதுக்குப் பின்னால சிலது ஏன் ஓடுறம் எண்டில்லாம ஓடுதுகள்... அதுதானே குரங்குக் குணமாச்சே....தெளியத் திரும்புங்கள்.....????! தோப்புப் பத்திரம் ஆரேன் குழப்பகாரக் குரங்கில தருனம் பாத்து தீப்பந்தம் கட்டிவிட்டுவிடுவாங்கள் கவனம்...! உங்க சுத்துமுத்தும் பலபேர் பந்தமும் கையுமாய் நிக்கிறதாக் கேள்வி....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Mathan - 03-23-2004 kuruvikal Wrote:இதென்னப்பா நாங்கள் ஒரு பேச்சுக்கு குறூப்பெண்ட நீங்கள் அதுக்கு அங்கீகாரம் தேடுறிள் போல....! நான் அங்கீகாரம் தேடலை குருவி. என்னக்கு அந்த அவசியமும் இல்லை. எனக்கு மாங்காய் துண்டும் வேண்டாம். குரங்கு(கள்) தெளிய திரும்புமோ இல்லை தோப்பையே பிரிக்குமோ அது எனக்கு தெரியாது. ஆனா வசைபாடி பிரயோசம் இல்லை. தோப்பு தோப்பா இருந்தா சரி. |