![]() |
|
அன்னையர் தினக் கவிதை - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அன்னையர் தினக் கவிதை (/showthread.php?tid=7307) |
அன்னையர் தினக் கவிதை - shanmuhi - 03-21-2004 <b>நான் தாயாக......</b> தத்தி தளிர் நடை நடக்கையில் என் தளிர் பாதம் நோகும் என்று என்னை உள்ளங்கையில் தாங்கியவள் நீ அம்மா கலங்கிய போதெல்லாம் என்னை நீ அணைத்துக் கொண்டது உன் மார்பல்லவா நான் துவண்டாலும் தோள் தந்து நம்பிக்கை தந்தவளும் நீதானம்மா. உன்னை உருக்கி என்னை உருவாக்கிய அம்மா. வயோதிப காலமதில் நான் உனக்கு தாயாகும் நிலை வேண்டும் வேண்டும் என்றே என் மனம் துடிக்கின்ற துடிப்பின் நிஜங்கள் நிழலாக மாறுகின்ற காலமதில் மனம் மனதார வாழ்த்துகின்றது நோய் நொடியின்றி நீ வாழ வேண்டுமம்மா..... என் கனவு நனவாக அம்மா.... உன் வயோதிப காலமதில் நான் உனக்கு தாயாகும் நிலை வேண்டுமம்மா 21.03.2004 - Paranee - 03-21-2004 தாய் தந்த அன்பிற்கு தாய் தந்த உதிரத்திற்கு வாழ்த்த வரிகள் இல்லை என் வாழ்வே உனக்குத்தானம்மா என் நிமிடங்கள் ஒவ்வொன்றும் உன் நினைவுகள் சுமந்தபடி என் நிழல்கள் ஓரசைவும் உன் துணையாய் இருக்குதம்மா நீ என்றென்றும் எனக்குள்ளே உனையன்றி என்னுள்ளே எதுவுமில்லை என்றென்றும் எனக்கு நீ தாய் உனக்கும் நான் தாயாவேன் தாயிலும் மேலாக உன்னை காப்பேன் அன்னையர் தினத்திற்காய் சண்முகி அளித்த கவிதை அருமை அன்னையர்க்கெல்லாம் இம்மகவின் வாழ்த்துக்கள் வார்த்தைகளின்றி அன்பாய் ஓர் கண்ணீர்; - sWEEtmICHe - 03-21-2004 மிக அருமை சண்முகி வாழ்த்துக்கள்.பெருமையாகவும் இருக்கு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 03-21-2004 தாயின் அன்புக்கு... பாசத்துக்கு.... ஈடு இணை இல்லைதானே...? Paranee sWEEtmICHe இருவருக்கும் நன்றிகள். - Eelavan - 03-22-2004 மனதைத் தொட்ட கவிதை சண்முகி வாழ்த்துகள் |