Yarl Forum
உதவுங்கள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: உதவுங்கள் (/showthread.php?tid=7218)

உதவுங்கள் - aathipan - 04-08-2004

அன்பும் கருணையும் கொண்ட நெஞ்சங்களே,

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்த நன்பர் ஒருவர் விபத்தின் சிக்கி காலை இழந்து பின் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். வீட்டைவிட்டு வெளியே வந்திராத அவரது மனைவியும் ஒரு பெண்குழந்தையும் அநாதரவாக இந்தியாவில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்து அவர்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பி சுயமாகவேலைசெய்து வாழ்க்கையை நடத்த உதவிதேவைப்படுகிறது. உங்கள் சகோதரியாக எண்ணி உதவமுன்வாருங்கள் சிறுதுளிகள்போதும் அது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் உதவியை அனுப்பவேண்டிய முகவரி நீங்கள் அவர்களுடன் பேசவிரும்பினால் தொலைபேசி எண் அகியவற்றை நாளை தருகிறேன்.

உதவ விரும்புகிறேன் என்று கீழே பதில் அனுப்புங்கள். உதவிசெய்யவிரும்பும் எமக்கும் ஊக்கம் தாருங்கள்.

- Eelavan - 04-08-2004

கேட்கும் போதே மனம் வேதனையுறுகின்றது நண்பரே உங்கள் அன்புள்ளத்திற்கு பாராட்டுக்கள் என்னாலியன்ற உதவியை நிச்சயம் செய்கிறேன்

- aathipan - 04-08-2004

ஒரேஒரு நெஞ்சம்தான் இதுவரை இரக்கம்கொண்டு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. இன்னும் நிறையப்பேர் உதவவேண்டும்.

உங்கள் சகோதரர்கள் யாரும் இலங்கையில் போதிய மருத்துவசிகிச்சை இன்றி தவிக்கிறார்களா? அவர்களுக்கு இந்தியாவில் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். சேவைமனப்பாண்மையுள்ள ஒரு அமைப்பை ஆரம்பிக்க விரும்புகிறோம். இது எங்கள் முதல்படி தான்.

- aathipan - 04-08-2004

பருத்துறையைச்சேர்ந்த மாணவிக்கு கண் அறுவைச்சிகிச்சை செய்ய மற்றும் யாழ்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு புற்றுநோய் குணப்படுத்த உதவியுள்ளோம். நாங்கள் பணம் இல்லாததால் சாரிர உதவிமட்டுமே செய்துவருகிறோம். நீங்கள் நினைத்தால் ஆதரவு கொடுத்தால் இன்னும் செய்யலாம்

- aathipan - 04-09-2004

அன்பும் கருணையும் கொண்ட நெஞ்சங்களே,

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்த நன்பர் ஒருவர் விபத்தின் சிக்கி காலை இழந்து பின் சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். வீட்டைவிட்டு வெளியே வந்திராத அவரது மனைவியும் ஒரு பெண்குழந்தையும் அநாதரவாக இந்தியாவில் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்து அவர்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அனுப்பி சுயமாகவேலைசெய்து வாழ்க்கையை நடத்த உதவிதேவைப்படுகிறது. உங்கள் சகோதரியாக எண்ணி உதவமுன்வாருங்கள் சிறுதுளிகள்போதும் அது அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். நீங்கள் உங்கள் உதவியை அனுப்பவேண்டிய முகவரி நீங்கள் அவர்களுடன் பேசவிரும்பினால் தொலைபேசி எண் அகியவற்றை நாளை தருகிறேன்.

உதவ விரும்புகிறேன் என்று கீழே பதில் அனுப்புங்கள். உதவிசெய்யவிரும்பும் எமக்கும் ஊக்கம் தாருங்கள்.

- Paranee - 04-10-2004

உதவும் உள்ளங்கள் நிட்சயம் உதவுவார்கள் ஆதிபன் கவலை வேணடாம்