Yarl Forum
தேசியத்தைக் காத்த கையெழுத்துக்கள - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: தேசியத்தைக் காத்த கையெழுத்துக்கள (/showthread.php?tid=7204)



தேசியத்தைக் காத்த கைய - Eelavan - 04-14-2004

தேசியத்தைக் காத்த கையெழுத்துக்கள்

13.04.2004


தாயகக் கோட்பாட்டுக்கும் தமிழீழத் தேசியத்திற்குமான தமிழீழ மக்களின் பலத்த அங்கீகாரம் தேர்தல் மூலம் ஒருபுறம் நிலைநாட்டப்பட்டுக்கொண்டிருக்கையில் மறுபுறம் தமிழர் தேசியமும் தமிழீழத் தாயகக் கோட்பாடும் கருணா என்ற ஒரு தனிமனிதனின் முறைதவறிய செயற்பாடுகளால் பேரபாயத்தை எதிர்நோக்கலாயின. இந்தத் தேர்தல் வெற்றியில் பொதிந்து கிடக்கும் அரசியல் ஆழத்தையும், இந்த வெற்றி கருணாவின் சிக்கல்களுக்கூடாகக் காப்பாற்றப்பட்ட விதத்தின் குறியீட்டு முக்கியத்துவத்தையும் நாம் இத் தருணத்தில் திரும்பிப்பார்ப்பது அவசியமாகிறது.

இலங்கை அரசியலின் தொங்கு பாராளுமன்றத்தின் நாற்காலிகளின் தற்காலிகம் அர்த்தமற்றதாயிருக்கலாம்.

ஆனால், நடந்தேறிய தேர்தலில் தமிழீழ மக்கள் தமிழீழத் தேசியத்திற்கும் இறைமைக்கும் தமிழீழவிடுதலைப்புலிகளின் தலைமைத்துவத்திற்கும் வழங்கிய ஏகோபித்த அங்கீகாரம் மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.

இந்த வெற்றிக்குள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழீழத் தாயகத்தின் இறைமைக்கான குறியீட்டு முக்கியத்துவங்கள் பொதிந்துகிடக்கின்றன.

தாயகக் கோட்பாடு என்பது புவியியல் ரீதியாகத் தொடர்ச்சியாக அடையாளப்படுத்தப்படக்ஷகூடிய ஒரு பொதுப்பண்பாட்டிற்குரிய மக்கள் கூட்டம் வாழும் பாரம்பரிய தாய்நிலம் (Traditional homeland) என்பதாகும். இது வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த தமிழீழத் தாயகமாகும். இவ்வாறான தாயகத்தில் ஒன்றித்த தேசியப் பிரக்ஞையுடன் அடையாளப்படுத்தப்படுவதே தமிழீழத் தேசியம் ஆகும்.

இந்தத் தமிழர் தாயகக் கோட்பாடே எமது தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமைக்கும் (Right to Self-determination) எமது இறைமைக்கும் (Soverignty) அடிப்படையான வித்தாகும்.

தாயகக்கோட்பாட்டில் இருந்து பிறப்பதே தன்னாட்சி உரிமை.

தன்னாட்சியுரிமை கொண்ட ஒரு தேசிய இனம் தனது அரசியற் தலைவிதியைத் தானே நிருணயித்துக்கொள்ளும் உரிமையைக் கொண்டது என்பது ஐக்கிய நாடுகள் தாபனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மக்கள் உரிமைக்கான வரைவிலக்கணமாகிறது.

இது எமது விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நியாயப்பாட்டிற்கான உயிர் நாடியாகும்.

இந்த அரசியல் அடித்தளத்தையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானமாக நிறைவேற்றினார் தமிழீழத் தேசியத்தின் தந்தை செல்வா.

இதற்கான முதலாவது பகிரங்கமான மக்கள் அங்கீகாரம் 1977ம் ஆண்டுத் தேர்தல் விஞ்ஞாபனத்திற்குக் கிடைத்த வெற்றியூடாகத் நிரூபிக்கப்பட்டது.

தன்னாட்சி உரிமைக்குத் தமிழீழ மக்கள் வழங்கிய ஆணையின் அரசியல் நியாயப்பாடுகளிலிருந்தே ஆயுதப்போராட்டமாக தமிழீழ விடுதலைப்போராட்டத்தை பரிணாம வளர்ச்சியுறச் செய்து தேசியத் தலைவர் வழிநடாத்திக் கொண்டிருக்கிறார்.

எமது இறைமையை எவரோடும் பேரம் பேசுவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டில் தமிழீழ விடுதலைப்போராட்டம் தேசிய விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.

தாயகக் கோட்பாட்டிற்கும், தன்னாட்சியுரிமைக்குமான மக்கள் அங்கீகாரத்திற்கு இதுவரை காலமும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும், 1977ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்துக்குத் தமிழீழ மக்கள் அளித்த அங்கீகாரமும் திம்புத் தீர்மானங்களுமே குறியீடுகளாக அமைந்திருந்தன. இவற்றையே தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் அடிப்படையாக நினைவுபடுத்தியும் வந்துள்ளனர்.

இந்தக் கோட்பாட்டுக்கு ஒரு வலிமையான புத்துயிர் வழங்கிய வெற்றியாக, ஒரு பலத்த அரசியல் அங்கீகாரத்தை வழங்குவதாக சமீபத்திய தேர்தல் அமைந்துள்ளது.

அது மட்டுமல்ல, தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைமையாக தமிழீழ விடுதலைப்புலிகளை அங்கீகரித்தும், இடைக்கால ஆட்சி அமைவுக்கான வரைபுக்குரிய அங்கீகாரத்தையும் இந்தத் தேர்தல் வழங்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் பரந்துபட்ட மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு விடுதலை இயக்கம் என்ற குறியீட்டையும் இந்தத் தேர்தல் எழுதியிருக்கிறது.

சிங்களப் பேரினவாதம் தொங்கு பாராளுமன்றில் தொங்கிக் கிடக்க, தமிழீழத் தேசியத்திற்கு ஒரு வரலாற்றுரீதியான அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்த தேர்தலாக இத் தேர்தல் அமைந்தது.

தமிழீழத் தாயகக் கோட்பாடும், விடுதலைப்புலிகள் இயக்கமும் பலமாக இருக்கும்போது சர்வதேச அரசியலில் காணப்படும் தங்குதடைகள் கூட தற்காலிகமானவையாகவே அமையும் என்பதே உண்மை.

இதன் தார்ப்பரியத்தை உணர்ந்தே எதிர்ப்போராட்ட சக்திகள் தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைத்துவிடவேண்டும் என்று சூழ்ச்கிளைச் செய்துவந்திருக்கின்றன. தமிழர் தாயகத்தைக் கூறுபோடுவதற்குப் பல சிங்கள பேரினவாத சக்திகள் காலா காலமாகப் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டுவந்துள்ளன என்பது நாம் அறிந்ததே.

ஆகவே, தேர்தலில் தமிழீழத் தேசியம் வெற்றிபெற்றது மட்டுமல்ல, பெற்ற வெற்றியைத் தற்காலிகச் சூறாவளியில் அடிபட்டுப்போய்விடாது காப்பாற்றப்படவேண்டியதும் அவசியமாகியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர்களைத் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து மிரட்டி ஒரு தனிக்கட்சியை ஆரம்பிக்கும் எண்ணத்தைக் கருணாவுக்கு எதிர்ப்போராட்ட சக்திகள் வழங்கியிருந்தன.

இவ்வாறான தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிக்கும் எண்ணம் தனக்கு இருப்பதாக பந்துல ஜெயசேகராவிற்கு வழங்கிய பேட்டியில் கருணா வெளிப்படையாகவே கூறியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இது நடந்தேறியிருந்தால் தமிழீழத் தேசியத்திற்கு ஓர் இழுக்கு ஏற்பட்டிருக்கும். தமிழீழத் தேசியத்திற்குத் தேர்தலில் கிடைத்த அங்கீகாரம் கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும்.

இது நடந்தேறி விடுமோ என்ற அச்சம் சூழ்ந்த அந்த நாட்களில் எதிர்ப்போராட்ட சக்திகளின் எண்ணங்கள் தவிடுபொடியாகும் வண்ணம் ஒரு நிகழ்வு நடந்தேறியது. அது தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தெரிவான 20 பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் ஒன்று கூடித் தமது கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றைப் பகிரங்கமாக வெளியிட்ட நிகழ்வு. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்ற தீரமான செயற்பாடு என்பதை நாம் இங்கு எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மட்டு அம்பாறையில் தெரிவான 5 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உள்ளடங்கலாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மொத்தம் இருபது பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவர் ஷகூடத் தவறாமல் ஒன்று கூடிக் கையெழுத்திட்ட சம்பவம் எமது தேசியத்திற்குச் சாட்சிசொல்லும் நிகழ்வாகியது! இவ்வாறாக ஓர் அரசியற் தார்ப்பரியம் கொண்ட தேர்தல் வெற்றி பாதுகாக்கப்பட்டமை வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு ஆகும்.

எதிர்ப்போராட்ட சக்திகளின் முகத்தில் இந்த நிகழ்வு கரிபூசிவிட்டது!

அந்தக் கையெழுத்துக்கள் இங்கே பிரசுரமாகின்றன:

<img src='http://www.yarl.com/forum/files/tnasignatures.gif' border='0' alt='user posted image'>