Yarl Forum
யாரிவர்? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: யாரிவர்? (/showthread.php?tid=716)



யாரிவர்? - வர்ணன் - 02-25-2006

<b>16 வயசில் பல ஆசை வருமே-
இனம்மேலொரு ஆசை எவருக்கும் வருமா?

திசைக்கொன்றாய் பறக்கும் சிட்டு குருவி
வெடிகுண்டை தன் மடியில் - காவி
வீணே தன்னை கொல்ல நினைக்குமா?

எப்படி ஆச்சு?
ஆலயத்தில் போய் அழுவதில் - பயனில்லை
ஆட்லறிதான் - இனி எங்கள் பேச்சு- !

இப்படி நினைத்தாரே ஒருவர் -!

உன்னால்-என்னால்-எவரால் எண்ணி
பார்த்திருக்க முடியுமா? -ஆகியிருந்ததே!

இப்படி இப்படி -பாருங்களேன்!

எவர் நினைத்திருப்பார் - இந்த
இரும்பு மகன் எங்களை ஆள்வான் என்று?

ஒவ்வொரு வயதிலும் - ஒவ்வொரு ஆசை வரும்-
மனிதன்-மாறுவான் - அப்பிடிதான் என்கிறார்-!
பத்துகளிலிருந்து - ஐம்பதுகள்வரை - நீர்
அசைந்ததே இல்லையே- எப்படி எப்படி ?

எப்படி எப்படி - உம் பாட்டன்
வயசுள்ளவருக்கும் - தலைவரென்றானீர்
எப்படி எப்படி?

மூச்சடைத்து கிடந்த இனத்துக்கு - கதவுடைத்து
பிராணவாயு தந்த கரிகாலரே!
எங்கள் தேசத்து பிரவாகமே
பிரபாகரனே-தலைவா-!!

பட்டமும் பதவியும்-பத்து காசும் - வருது - என்றால்
என்னவும் செய்வார் - இந்த எச்சில் இலை தின்போர்!
எதுவும் வேணாம் - இனமே வேண்டும் --

இருப்பவரை பேச விட்டு - நீர் வருஷம் - ஒரு முறை
பேசுகிறீர் - எப்படி உம்மை புரிந்துகொள்ள?

கொஞ்சம் - சக்தி வந்தாலே -
அடுத்தவனை அடிச்சு கொன்று வாழ நினைக்கிறார் -அற்பர்!
எல்லா சக்தியும் இரு தோழில் கொண்டும்
இனத்துக்காய் உம் வாழ்வை தொலைக்கிறீரே!

புரிய முடியவில்லை -!

உதாரணம் உமக்கு நிகர்
யாரும் உலகில் இருந்தால்தானே
ஒப்பிட்டு - உம்மை நாம் அறிந்து கொள்வோம்!

வேலுப்பிள்ளையின் மகவென்று நீர் ஆகலாம்-
இந்த வேதனையில் கிடந்து உழலும்
ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் - நீர்தான் -தாய்!!</b>


- Nitharsan - 02-25-2006

அருமையான கவிதை வர்னன். தலைவரின் உறுதியையும் அவர் கொள்ளைக் பற்றையும் கண்முன்னே கொண்டு வந்தீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள்....


- அருவி - 02-25-2006

தலைவரினைப்பற்றி நிதர்சனமான கவிதையை அருமையாகத் தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் வர்ணன்.


- iniyaval - 02-25-2006

கவிதை நன்றாக உள்ளது வர்ணன். வாழ்த்துக்கள்.


- sankeeth - 02-25-2006

கவிதை நன்று வர்ணண். தலைவரின் மகத்துவத்தை இனிமையாய் கூறியுள்ளீர்கள்.


- Rasikai - 02-25-2006

தலைவரைப்பற்றிய கவி நன்றாகவுள்ளது வாழ்த்துக்கள்.


- karu - 02-25-2006

வீரம் விளைந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி
வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே

ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய
ஆண்மைக் குமரனடா - பெரும்
ஆபத்தையே பனியாக மதித்திடும்
ஆதித்ய சோதியடா
சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய
சிந்தனையாளனடா - எங்கள்
செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற
செல்வக் குமரனடா

இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட
எங்கள் தலைவனடா - தமிழ்
விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும்
விதியை மறுத்தவன் டா
செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச்
செதுக்கிய சிற்பியடா - ரத்தம்
சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச்
சீறிடும் வேங்கையடா.

குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து
குதறிட வைத்தவன் டா - அட
எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற-எம்
ஈழத்தலைமகன் டா
துட்டகெமுனு தொடக்கிவைத்திட்ட
துயரை ஒழித்தவன் டா - நாம்
பட்டது போதுமென்றார்த்து எதிரியில்
பாய்ந்த புலியவன் டா

ஆயிரமாயிரம் வேங்கைகள் சேர்த்து
அணிநடை செய்தவன் டா - உயிர்
மாய்வதெம் மண்ணினுக்காய் என வாழும்
மறவர் தலைவனடா
பேய்களுலாவிடு காடதுவாக்கிய
பேரின வாதிகளின்-தலை
சாய எம் மண்ணினில் வீர பராக்ரம
சாகசம் செய்பவன் டா

எத்தனை கோடி துயர் வந்தபோதும்
இடிந்து விடாதவன் டா - தன்னை
மொய்த்த பகைதனை ஈயெனவோர் பெரு
மூச்சிற் கலைப்பவன் டா
இத்தரை மீதிற் கரந்தடி வித்தையில்
ஈடிணையற்றவன் டா - எங்கள்
சொத்தென தாயக ஈழமண் தன்னிற்
சுதந்திரம் கேட்பவன் டா

சேய்கள் பல்லாயிரம் சேர்ந்தனர் - சூழ் பெருந்
தீமையழியுமடா - அவர்
வாய்மையில் வீர வழிமுறையில்-தமிழ்
மாண்பு சிறந்ததடா
ஆயதங்கையில் அறவழி நெஞ்சிலென்(று)
ஆர்க்கும் புலிகளினால் - துயர்
போயின போயின என்று தமிழ் மகள்
துள்ளி நிமிர்வாளடா
யுகசாரதியின் கவிதைகளிலிருந்து


- வர்ணன் - 02-26-2006

நன்றி நிதர்ஷன் - அருவி- சங்கீத்-இனியவள்-ரசிகை 8)


- RaMa - 02-26-2006

வர்ணன் தலைவரைப்பற்றிய கவிதை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்.


- விது - 02-26-2006

அருமை அருமை...


- malu - 02-26-2006

வர்ணன் உங்கள் கவிதை நான் எழுதிய கடிதத்தை ஒட்டியிருக்கிறது.வாழ்த்துக்கள்
அன்புடன்
மாலு


- malu - 02-26-2006

வர்ணன் உங்கள் கவிதை நான் எழுதிய கடிதத்தை ஒட்டியிருக்கிறது.வாழ்த்துக்கள்
அன்புடன்
மாலு


- Jenany - 02-27-2006

தலைவரை பற்றி எழுதிய கவிதை அருமையா இருக்கு.. வாழ்த்துக்கள் வர்ணன்.


- mathavan - 02-27-2006

கவி நன்றாக உள்ளது வர்ணன். வாழ்த்துக்கள்