![]() |
|
சிறீதேவி உன் வாழ்வில்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: சிறீதேவி உன் வாழ்வில்.... (/showthread.php?tid=7114) |
சிறீதேவி உன் வாழ்வில். - kuruvikal - 05-27-2004 <img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/01/17_sridevi.jpg' border='0' alt='user posted image'> முன்னாள் நடிகையும் இன்னாள் பிரபலமும் கணவர் விவகாரம்: நடிகை ஸ்ரீதேவிக்கு நீதிமன்றம் மீண்டும் சம்மன் நான் தான் ஸ்ரீதேவியின் கணவர் என்று கூறி ராமகிருஷ்ண கௌட் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஸ்ரீதேவிக்கு மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் ஜூலை 7ம் தேதி கண்டிப்பாக ஸ்ரீதேவி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்த ராமகிருஷ்ண கௌட் என்பவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நடிகை ஸ்ரீதேவியை தான் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் அவர் வரவில்லை என்றும். எனவே ஸ்ரீதேவியை தன்னுடன் சேர்ந்து வாழ உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீதேவி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டார். 3 முறை இது போல சம்மன் அனுப்பியும் ஸ்ரீதேவி வரவில்லை. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோதும் ஸ்ரீதேவி வரவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் மட்டுமே ஆஜரானார். ஆனால், வழக்கறிஞரின் வாதத்தை ஏற்காத நீதிபதி ஜூலை 7ம் தேதி ஸ்ரீதேவி கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று கூறி மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். thatstamil.com ------------------------- உதையே படமாக்கினா....விதியை வெல்லும் போல..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|