![]() |
|
பெண்ணே நீ பெண்ணாய் இரு.. - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பெண்ணே நீ பெண்ணாய் இரு.. (/showthread.php?tid=7111) |
பெண்ணே நீ பெண்ணாய் இரு - kuruvikal - 05-28-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/woman.jpg' border='0' alt='user posted image'> பெண்ணே நீ பெண்ணாய் இரு பேதையாய் இராதே ஆணை நீ வஞ்சகனாய் எண்ணாதே அவனையும் மாசறுத்து அன்பால் அணைத்துக் கொள் வாழ்வில் அபூர்வம் உணர்வாய்...! விடுதலை என்பது உனக்கில்லை உன் மனக் கிடங்கில் கொட்டிக் கிடக்கும் அசிங்கங்களுக்கு, அதற்காய் விழிப்பது உன் கடமை...! உன் கோரப் பார்வை கொண்டு ஆணின் அன்பு விழிகளை அழித்து விடாதே பின் அங்கு உனக்கும் இல்லை அவனுக்கும் இல்லை விழிப்பும் விளிப்பும் விடுதலையும் உரிமையும் என்ற நிலையும் ஆக்கிடாதே....! பெண்ணே நீ என்றும் பெண்ணாய் இரு அதுவே உனக்குப் பெருமை, எதற்காய் பொய் வேசங்கள் அவை கலையும் போது நீ பதுங்கக் கூட இடமிராது புரிந்து கொள்...! இன்றேல் மண்டியிடுவாய் உன் இயலாமையின் முன்....! பின் ஆணைத் திட்டித் தீர்ப்பது எள்ளளவும் நீ உன் இயல்பிரு உரிமை காக்க உதவிடாது தெரிந்து கொள்...தெளிந்து கொள்...! நன்றி... http://kuruvikal.yarl.net/ - sWEEtmICHe - 05-28-2004 கவிதை மிக அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- shanmuhi - 05-28-2004 பெண்ணுக்கு அறிவுரை கூறும் பாடல்கள் பல கேட்டு இருக்கிறேன. கவி வடிவில் அமைந்த அறிவுரை நன்றாகவே இருக்கின்றது. |