Yarl Forum
இவன் சுயம் தரும் சுகம்...! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: இவன் சுயம் தரும் சுகம்...! (/showthread.php?tid=7110)



இவன் சுயம் தரும் சுகம் - kuruvikal - 05-28-2004

<img src='http://kuruvikal.yarl.net/archives/baby.jpg' border='0' alt='user posted image'>

நான் ஓர்....
இலங்கைப் பிரஜை,
இனம்...
ஈழத்தமிழன்,
படிக்க விரும்புவது...
பட்டதாரியாய்,
விரும்பாதது...
வேட்டு
உயிருக்கும்
கல்விக்கும்,
காப்பாற்ற விரும்புவது..
என் சுயமும்
தாயகத்தின் சுயநிர்ணயமும்,
மதிப்பது....
பெற்றோரை
குருவை
சான்றோரை
கொள்கைப் பிடிப்புள்ளோரை,
மிதிப்பது...
துரோகிகளை
எதிரிகளை
மனிதம் சிதைப்பவனை/ளை,
என் மகிழ்ச்சி....
என்றும்
குழந்தையாய் வாழ்வதில்,
என் கவலை...
பூமித்தாயின் இன்றைய நிலையும்
எதிர்கால உறவுகளின் கதியும்,
இலட்சியம்...
மனிதருக்காய்
மனிதம் காத்து
உயர் விழுமியங்கள் நிறை
நாகரிகம் போற்றும்
போதிக்கும் மனிதனாய் வாழ்வது...!


நன்றி... http://kuruvikal.yarl.net/


- shanmuhi - 05-28-2004

ஈழத்தமிழனாய் விரும்புவது, விரும்பாதது அனைத்தும் கவிவடிவில் அருமை.

[b]பூமித்தாயின் இன்றைய நிலையும்
எதிர்கால உறவுகளின் கதியும்
இலட்சியம்...
மனிதருக்காய்
மனிதம் காத்து
உயர் விழுமியங்கள் நிறை
நாகரிகம் போற்றும்
போதிக்கும் மனிதனாய் வாழ்வது...!

மனிதனாய் வாழ... சிந்திக்க வேண்டிய வரிகள்..


- kuruvikal - 05-28-2004

வரிகளின் வலிமை
உணர்வால் உணர்த்திய
தங்களுக்கு நன்றிகள்...!