![]() |
|
முகத்தாருக்கு பிரியாவிடை......! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=13) +--- Thread: முகத்தாருக்கு பிரியாவிடை......! (/showthread.php?tid=711) |
முகத்தாருக்கு பிரியாவிடை......! - Thala - 02-25-2006 [quote=MUGATHTHAR]<b>கள உறவுகளுக்கு வணக்கம் உங்களுடன் ஒரு நிமிடம் </b> <b>முகத்தான் விடை பெறும் நேரம் இது . . . ஆமாங்க கடந்த 5 வருடங்களாக சவுதி பாலவனத்தில் சொந்தங்கள் நண்பர்கள் எவருமின்றி தனித்திருந்த எனக்கு யாழ் களம் ஒரு பெரிய குடும்பத்தையே அமைத்துத் தந்தது நான் இங்கு இணைந்து சரியாக 1வருடம் ஆகிறது. . .வருடத்தில் கிடைக்கும் ஒரு மாத லீவு எப்ப வரும் ஊருக்கு போக என கலண்டரை பார்த்து நாட்களை எண்ணிய எனக்கு யாழ்களத்தில் இணைந்ததின் பின் நாட்கள் போவதுகூடத் தெரியவில்லை பணம்தான் வாழ்க்கை அல்ல என்று கூறும் பொண்ஸ்சின் பேச்சை நம்பி மார்ச் 15ம் திகதியுடன் எனது ஒப்பத்த அடிப்படையிலான வேலையை முடித்துக் கொண்டு தாயகம் செல்லவுள்ளேன். . . .நிச்சயம் தாயகத்திலிருந்து உங்களை எல்லாம் தொடர்பு கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்த விடை பெறுகிறேன். . . அதற்கு முன்னம் இங்கு நான் நகைச்சுவையாக எழுதிய கருத்துக்கள் யாரினதும் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுகிறேன் </b> <b>நன்றி. . . .வணக்கம் . . .என்றும் உங்கள் முகத்தார்</b> <b>இண்றுவரை எங்களுடன் மகிழ்வாய் பேசிமகிழ்ந்த ஒரு அன்பு இதயமான முகத்தார் பிரிந்து போகிறார் அவரின் குடும்பவாழ்க்கையை அவர் காரணமாகச்சொன்னாலும் எங்களின் கனத்த இதயத்துடனான வாழ்த்துக்களைத்தான் சொல்ல முடிகிறது ......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> உங்களின் அன்பை என்றும் நாங்கள் மறவோம்.... உங்கள் மகிழ்வான வாழ்வுக்கு வாழ்த்துக்கள் முகத்தார்.....! </b> <b>உங்கள் அன்புக்கு நண்றிகள்.....! </b> - அகிலன் - 02-25-2006 <b>பிரிந்து போவதையிட்டு கவலை எண்றாலும். உங்களின் எதிர்காலம் என்பதால் உங்களை மனவுளைச்சலுக் உள்ளாக்கவும் விருப்பம் இல்லாமல், இரு மனத்தில் விடையளிக்கிறோம் முகத்தார். வாழ்த்துக்கள். மீண்டும் வருவீர்கள் எங்களுடன் கலந்தாட என்கின்ற நம்பிக்கையுடன் விடையளிக்கிறோம். !</b> - KULAKADDAN - 02-25-2006 <b>முகத்தார் உங்கள் ஆக்கங்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தன. உங்கள் விடை பெறுகை வருத்தமாக இருக்கிறது. தாயகத்தில் இருந்து தொடர்தும் உங்களால் முடிந்த பொழுதுகளில் எம்முடன் இணைந்திருங்கள். உங்கள் தாயக பயணமும், இல்வாழ்க்கையும் சிறப்பாக அமைய இறைவன் அருள் புரிவாராக,</b> - tamilini - 02-25-2006 முகம்ஸ் தாயகம் பயணம் என்றதில மட்டற்ற மகிழ்ச்சி.. பாலை வனத்தில பட்ட கஸ்டத்திற்கு முற்றுப்புள்ளி.. ம் ம்.. இலங்்கையில் இருந்தும் உறவுகள் வருகிறார்கள் நீங்களும் தொடர்ந்து வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.. அப்படியே.. முகத்தார் வீடும் தொடரணும் என்று கேட்டுக் கொள்்கிறேன்.. பயணங்கள்் இனிமையாக அமையட்டும். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kirubans - 02-25-2006 நேரடியாக அதிகம் கருத்தாடாவிட்டாலும், உங்கள் நகைச்சுவையாக கருத்துக்களை (அதே நேரத்தில் சிந்தனையைத் தூண்டுபவைகளாகவும் உள்ளவற்றை) படித்துப் பயன்(!) பெற்றவன் என்ற முறையில், பிரியாவிடை சொல்லத் தயக்கமாக உள்ளது. இது தற்காலிகப் பிரிவு என்றே யாழ் கள உறுப்பினர்கள் கருதுவார்கள். தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை தருவீர்கள் என்ற நம்பிக்கயுடன், உங்கள் தாயகப் பயணம் (வாழ்வு) இனிதாக இருக்க வாழ்த்துகின்றேன். - Selvamuthu - 02-25-2006 முகத்தார் அவர்களே! நீங்கள் மற்றவர்களை சிரிக்க, சிந்திக்க வைத்ததுபோல் என்றும் சிரித்துக்கொண்டும், சிரிக்கவைத்துக்கொண்டும் வாழ இறைவனை வேண்டுகிறேன். நன்றி. - RaMa - 02-25-2006 அங்கிள் நீங்கள் தாயகம் செல்வதையிட்டு சந்தோசம். ஆனால் தொடர்ந்தும் வந்து நம்மை சிரிக்க வைப்பீர்கள் என்று நினைக்கின்றேன். உங்களை வருத்ததுடன் அனுப்ப தயக்கமாய் இருக்கின்றது. என்றாலும் வருவீர்கள் என்றா நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். இனித்தான் அங்கிளுக்கு பொன்னமாக்காவின் பாசங்கள் புரியப்போகுது. வாழ்த்துக்கள் அங்கிள். - iniyaval - 02-25-2006 முகத்தார் அங்கிள் தாயகம் போறிங்களா? சந்தோசம்/ தாயகம் போனாலும் யாழ் வரலாம் தானே? நீங்கள் வருவீர்கள் என எதிர் பார்த்து இருப்போம்/ நன்றி வணக்கம் Re: முகத்தாருக்கு பிரியாவிடை......! - Netfriend - 02-25-2006 உங்கள்... எங்கள்.... உணர்வுகள்... தாக்கங்கள்... களஅனுபவங்கள்... உண்மைகளை... உங்களுக்கும்... எங்களுக்கும்.... ஒரு எல்லைகளில்... நடைமுறை... அல்லது பழைய... களஉறவுகளுடனும் நின்றுகொண்டு....காணமுடியா முகத்தார்... எத்தனை எத்தனை... உறவுகள் ஒருபிரியாவிடை அல்லது போறதே தெரியாமல் போயுள்ளார்கள்.... இதற்கு காரணங்கள் பற்பல... (உண்மையானவர்களும்... உண்மையற்றவர்களும் ....பழையவற்றை பார்க்க தெரிகிறது.. ) அந்தவகையில் முகத்தார் நீங்களும் நாமும் பெருமைபடவேண்டும்.... 8) ஆனால் உண்மை எல்லாம் தெரிந்தவர்கள் என்றுமே இங்கு உள்ளார்கள்... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அவர்கள் அனுபவம் பெற யாம் கொடுத்துவைக்க வேண்டும். :| <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen:ஆயிரம் ஆயிரம் களநண்பர்கள்... வரலாம் போகலாம்... ஆனால்.... ஒருகாலம்... உண்மை எல்லாம் தெரிந்தவர்கள்... அவர்கள் அனுபவங்களையும்... நாம் கட்டாயம் களத்தில் என்றோ ஓருநாள் அறியலாம்.... கட்டாயம். ![]() அதுமட்டும் (களத்தில் உண்மையானவர்கள் எண்டால்) நாமும் நீங்களும் வந்துபோய்கொண்ருப்போம்... (கருத்துவைக்கா விட்டாலும் எங்கிருந்தாலும்) முற்றாகவே போகமாட்டோம்.... இதுவே யதார்த்தம் அதுயாவரும் அறிந்ததே...... - Rasikai - 02-25-2006 வணக்கம் அங்கிள் உங்கள நகைச்சுவையால் யாவரையும் கவர்ந்தவர் நீங்கள். நீங்கள் முந்தி மாதிரி வர மாட்டீர்கள் என்று நினைக்க கவலையாக தான் இருக்கிறது இருந்தாலும் நீங்கள் தாயகம் செல்லுகிறீர்கள் எனும் போது மகிழ்வாக இருக்கிறது,. அங்கு இருந்து வரவும். உங்களை எதிர்பார்த்து இருப்போம். உங்கள் பயணம் இனிதே அமைய இந்த இரசிகையின் வாழ்த்துக்கள். நன்றி வணக்கம் - அருவி - 02-25-2006 [b]நகைச்சுவை கருத்துக்களால் அனைவரையும் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைத்த முகத்தார் தாத்தா தமிழீழம் சென்று தனது குடும்பத்துடன் இணைவது மகிழ்வழித்தாலும் ஓர் அன்பு உறவு பிரிகின்றதே என்ற ஒரு ஆதங்கம் மனதின் ஓரத்தில் ஏதோ ஓர் இனம்புரியாத உணர்வாக. அங்கிருந்தும் யாழ் கருத்துக்களம் வருவீர்கள் என்னும் நம்பிக்கையுடன் ........ அன்புடன் அருவி. - sankeeth - 02-25-2006 முதியவராய் களத்தில் முத்தான கருத்துக்களை முன்வைத்து முறுவலுடன் களத்தை முடுக்கிவிட்டு முடிவில் எம் நெஞ்சங்களை வேதனையால் முறுக்கி பிழிந்துவிட்டு போறாரே போறாரே முகத்தார். மீண்டும் எம்முடன் இணைவார் என்று நம்புகிறேன்.
- sinnappu - 02-26-2006 என் இனிய நண்பன் முகத்தான் !!!!!! தனக்கே உரிய பாணியில் நகைச்சுவை கருத்தால் எம்மனதை கொள்ளை கொண்ட முகத்தான் நாடு சென்று தன் குடும்பத்தாரோடு இணைந்து எம்மை எல்லாம் என்றும் மறவாமல் மீண்டும் களமாடவருவார் என்ற நம்பிக்கையுடன் சிசிசிசிசி.......... - narathar - 02-26-2006 முகத்தார் , உங்கள் பயணம் இனிதே நடக்கட்டும்,இல்லாளுடன் இணைவதை இட்டு மகிழ்ச்சி.பொன்னாம்மா அக்காவையும் கூட்டிக் கொண்டு வரலாம், ஆனா என்ன இனி எழுதிறதுகளைக் கவனமா எழுத வேணும் பிறகு வீட்ட சாப்பாடு அந்த மாதிரிக் கிடைக்கும்... - sOliyAn - 02-26-2006 தாயகம் சென்று உறவுகளுடன் மகிழ்ந்து, எதிர்காலத்தில் என்றும் களிப்புடனும் நிம்மதியுடனும் வாழ வாழ்த்துக்கள் முகத்தார். தங்களது வாழ்க்கைப் பயணம் சீராகச் செல்ல எப்பொழுதும் நான் வணங்கும் இறை துணை நிற்பாராக!! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- Saanakyan - 02-26-2006 ¾¡Â¸õ ¾¢ÕõÒõ ¦ÀâÂÅâüÌ Å¡úòÐì¸û! ±ó¾ ¿¡¼¡É¡Öõ ¾¡ö ÁÊ §À¡ø ͸õ ÅÕÁ¡ ±ýÉ? "Ó¸ò¾¡÷ Å£Î" ¦ÅÚ¨Á¡ɡÖõ ÀÚ¢ø¨Ä þÉ¢ ÍýÉ¡¸î ºó¨¾ ¸¨Ç ¸ðÊÅ¢Îõ ±ýÀ¨¾ ¿¢¨ÉòÐ Á¸¢ú§Â! - Vasampu - 02-26-2006 நகைச்சுவையென்றாலும் நசுூக்காக சில சமுதாய தவறுகளைச் சுட்டிக்காட்டும் பாங்கும் எவர் கருத்தென்றாலும் உண்மைகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை இப்படி எவ்வளவோ உங்களைப் பற்றி சொல்லலாம். அப்படியான நீங்கள் இப்படித் திடீரென்று விடைபெறுவது சங்கடமாகத் தான் உள்ளது. நீங்கள் என்றும் உங்கள் குடும்பத்தாருடன் சந்தோசமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். முடிந்தால் ஊரிலிருந்து எங்களுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்துங்கள். வணக்கம் - தாரணி - 02-26-2006 போய் வாருங்கள் சின்னப்பையா. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நன்றி - Snegethy - 02-26-2006 ஹாய் முகம்ஸ்.....ஊருக்குப் போறீங்களோ..சரி சந்தோசமாப்போட்டு நேரம் கிடைக்கும்போது யாழ் பக்கம் வாங்க. - வர்ணன் - 02-26-2006 தாயகம் திரும்பும் முகத்தார் ஐயா பயணம் இனிதே அமைய வாழ்த்துகிறேன் -! விரைவில் மீண்டும் யாழுடன் இணைந்திடுவீர்களென்ற நம்பிக்கையில் -மனங்களினால் - பிரியாத விடை தருகிறோம்-! 8) |