![]() |
|
நிஜங்களாய்.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: நிஜங்களாய்.... (/showthread.php?tid=7109) |
நிஜங்களாய்.... - shanmuhi - 05-28-2004 <b>நிஜங்களாய்.... தாயகத்தில் நெருடிய நிஜங்கள் புலத்தில் புகுந்துவிட்ட வேதனைகள் நெருப்பாகிப்போன உணர்வுகள் நெஞ்சைப் பிளந்து குரல்வளையில் வெடிக்கத்துடிக்கின்ற வார்த்தைகளை... கண்ணீரால் கரை துடைத்திடத்தான் முடியுமோ.. சுடுநீருக்குள் சுட்டிடும் உடலாய் கடும்குளிர்தனில் குளிர்மலராய் உறைந்துபோக புடைக்கின்ற நரம்பினைக் கீறி பீரிட்டு பாயும் செந்நீராய் ரத்தத்தின் வேகந்தனை அனுபவிக்கத் துடித்திடும் மனங்கள்தான் எத்தனை.. வாசம் செய்யும் புலத்தில் சுவாசக்காற்றுகூட சுகந்தமில்லா தேடலாய் வாழ்க்கை தொலைந்து போகிறது இன்றைய நேற்றைய தேடல்களில் வாழ்க்கை என்றோ தொலைத்துவிட்ட இதயத்தில் மரணம் வாழ்வை வழிமறித்தாட்டாலும் தகிக்கும் ரணங்கள் தணலுக்குள் சமாதிதான்.</b> - kuruvikal - 05-28-2004 நிஜத்துக்குள் நிஜமாய் நிலைக்காது போலிக்காய் போக்கிரிகளாய் தெரிந்தும் நிஜம் தொலைத்து தம் நெஞ்சம் தொட்டுணரா வாழும் உடல்களுக்காய் வந்த நிஜவரிகள்.... "வாசம் செய்யும் புலத்தில் சுவாசக்காற்றுகூட சுகந்தமில்லா தேடலாய் வாழ்க்கை தொலைந்து போகிறது" - Eelavan - 05-28-2004 கவிதை நன்று சண்முகி தொடர்ந்து எழுதுங்கள் - shanmuhi - 05-29-2004 குருவிகளுக்கும் ஈழவனுக்கும் நன்றிகள்... - tamilini - 05-30-2004 கவிதை நன்றாக இருக்கு சண்முகி! ஓரு வயதிலேயே இப்படி கவிதை எழுதீறீங்க. காலப்போக்கில் எங்கேயோ போய்விடுவீர்கள். வாழ்த்துக்கள். திறமைக்கு வயசு கிடையாது என்பது இது தானே? - Mathan - 05-30-2004 [quote=tamilini]கவிதை நன்றாக இருக்கு சண்முகி! <b>ஓரு வயதிலேயே இப்படி கவிதை எழுதீறீங்க. காலப்போக்கில் எங்கேயோ போய்விடுவீர்கள். </b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - shanmuhi - 05-30-2004 tamilini wrote: Quote:கவிதை நன்றாக இருக்கு சண்முகி! எங்கேயும் போகமாட்டேன் தமிழினி யாழ்களத்தில்தான் இருப்பேன. யாழ்களத்தில் இணைந்து ஒரு வருடமாகிவிட்டது. அதுதான். - tamilini - 05-31-2004 நல்லது சண்முகி. ஆனால் நீங்கள் வளர்ச்சி அடைவதை தான் நான் விரும்புவேன். {புகழில்,அறிவில்} - shanmuhi - 05-31-2004 நன்றிகள்.... தமிழினி. |