![]() |
|
என்னையும் அழைத்துப்போ - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: என்னையும் அழைத்துப்போ (/showthread.php?tid=7068) |
என்னையும் அழைத்துப்ப - sharish - 06-07-2004 <b>என்னையும் அழைத்துப்போ</b> உன் பிஞ்சுக்கைகளால் களைத்து இளைத்துப்போன என் சிவந்த கைகளைப் பற்றிக்கொண்டு... இங்கிருந்து எங்காவது என்னையும் அழைத்துப்போ...! உன் வெள்ளைப்பாதங்கள் தள்ளாடும் தோழுக்கு துணையாக முன்னேவர என் முரட்டுப்பாதங்கள் பின்னேவர... வழிக்கு விழிதந்த வெள்ளை மனமே.. புரியாத பாதைக்கு பகல்தந்த பால் நிலவே... இங்கிருந்து எங்காவது என்னையும் அழைத்துப்போ...! எதற்காகவென்றே தெரியாத ஆணவம் அடித்தவனை உதைக்கும் ஆத்திரம் அறியாதவனை அடித்தொழிக்கும் ஆதிக்கம் இப்படியே... அழிவைநோக்கிமட்டும் அவசரமாக ஓடும் உலகைவிட்டு எங்காவது... என்னையும் அழைத்துப்போ...! த.சரீஷ் 30.05.2004 பாரீஸ் |