Yarl Forum
கணனி மென்பொருள்கள் என்றதலைப்பு அவசியமா?ஆம்/இல்லை. - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: கணனி மென்பொருள்கள் என்றதலைப்பு அவசியமா?ஆம்/இல்லை. (/showthread.php?tid=7029)

கணனி மென்பொருள்கள் எ - kavithan - 06-18-2004

அனைவருக்கும்வணக்கம்,

நீங்கள் அறுவியல் களத்தினுள் கணனி சம்மந்தப்பட்டவற்றையும், மற்றும் காணொளி களத்தை தனியாகவும் வைத்திருக்கிறீர்கள். அந்த காணொளி களத்தில்தான் அது சம்பந்தமான மென்பொருள்களைப்பற்றி எழுதமுடியும்.ஆனால் மென் பொருள்கள் பல தனித்து வீடியோ சம்பத்தப்பட்டது அல்ல அவற்றுக்கு பலவிதமான தொழிற்பாடுகள் உண்டு. மற்றும் பலர் மென்பொருள்களை பாவித்து பார்ப்பதில் ஆர்வமுடையவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் காணொளியில் ஆர்வம் அற்றவராக இருந்தால் அதற்கு செல்லமாட்டார்கள். எனவே அறவியல்களத்தல் கணனி சம்மந்தப்பட்ட தலைப்பகளுடன் <span style='font-size:25pt;line-height:100%'>கணனிமென்பொருள்கள் </span>என்றதலைப்பில் ஒருபகுதியை நீங்கள் தொடங்கினல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றல் எங்களால் பயன்படுத்தக்கூடிய எல்லா மென் பொருள்களும் கணனிக்கு கீழ்தான் அடங்கும், அடங்கினால்லால் தான் எல்லோரும் இலகுவாகப் பயனடைவார்கள் என்பது எனதுகருத்து.
கணனிப்பகுதியில் மென்பொருள் என்பது அவசியம்
உங்கள்கருத்து என்னவோ?
இயக்குனரே,மட்டுறுத்தினர்களே,அங்கத்தவர்களே வாசகர்களே.

கவிதன்

Re: கணனி மென்பொருள்கள் - AJeevan - 06-19-2004

kavithan Wrote:அனைவருக்கும்வணக்கம்,

கவிதன்,
இரு பகுதிகளிலும் எழுதினால் போச்சு . . . . . . .

அங்கு (அறிவியல்) தேவையானவர்கள் அங்கும்,
இங்கு (காணொளி) தேவையானவர்கள் இங்கும் தேடிக் கொள்வார்கள்.

இணைக்கும் நீங்கள், எவருக்கு பிரயோசனம் என்பது புரிந்தால் அதைப் பரிந்துரைக்கலாம்.

எல்லா மென்பொருள்களும், எல்லா பகுதிகளுக்கும் பொருந்தாது.

தேவையானவர்களுக்கு தேடல் என்பது அவசியமானதே.

_______________________________________________________________________________________________________
சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்..........
-அஜீவன்

- Ilango - 06-19-2004

கணனிப்பகுதிக்கு இன்னும் மென் பொருட்கள் என்ற தலைப்பு இல்லாதது ஒரு குறை தான்.

அங்கும் மென் பொருட்கள் என்ற தலைப்பு இருப்பது அவசியமே
ஏனெனில் காணொளிக்கு அற்பாட்பட்ட மென் பொருட்கள் பற்றிய தகவல்களை எங்கே எழுதுவது என்பதில் சிக்கல்கள் இருக்கலாம்.

நிர்வாகம் அதில் கவனம் எடுக்கும் என்று நம்புகிறேன்.