![]() |
|
அமைதி குலைந்த நாட்கள் கவிதை நூல் அறிமுக விழா - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: நிகழ்வுகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=15) +--- Thread: அமைதி குலைந்த நாட்கள் கவிதை நூல் அறிமுக விழா (/showthread.php?tid=6987) |
அமைதி குலைந்த நாட்கள் - kirubans - 07-02-2004 அமைதி குலைந்த நாட்கள் கவிதை நூல் அறிமுக விழா வரும் ஞாயிறு (04.07.2004) லன்டன் லூசியம் சிவன் கோயில் மண்டபத்தில் நடைபெறுகிறது. இத்துடன் மாற்று திரைப்படமும் காண்பிக்கப்படுகிறது. ஆரம்பம்: 5.00 மணி - Eelavan - 07-03-2004 அமைதி குலைந்த நாட்கள் - நூல் அறிமுக நிகழ்வு எண்பதுகளின் ஆரம்பத்தில் காத்திரமான இலக்கிய சஞ்சிகையாக அளவெட்டியில் இருந்து வெளிவந்த புதுசு சஞ்சிகையின் கவிதைகள் அமைதி குலைந்த நாட்கள் என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. புதுசு கவிதைகள் அனைத்தும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஏழு பிறமொழிக் கவிஞர்களினதும், இருபத்திநான்கு ஈழத்து கவிஞர்களினதும் எழுபது கவிதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. எமது மண்ணின் பதிப்புத் துறையை வளர்க்கும் நோக்குடன் இலங்கையில் அச்சிடப்பட்ட இந்நூல் இந்திய வெளியீடுகளுக்கு நிகரான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் வெளியீட்டு விழா 04-07-2004 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணிக்கு இலண்டன் லூசியம் சிவன் கோயில் மண்டபத்தில் நடைபெறுகின்றது. இந்த கவிதைத் தொகுப்பின் ஆய்வுரையை திரு.மு.நித்தியானந்தன் அவர்கள் நிகழ்த்த வெளியீட்டுரையை திரு. உ.சேரன் அவர்கள் நிகழ்த்துகிறார். * தொடர்புகளுக்கு நா.சபேசன்: 00 44 208 3185012 www.appaal-tamil.com - shobana - 07-09-2004 தகவலுக்கு நன்றிகள் மேலும் கடைகளிலும் இப்புத்தகம் பெற்றுக்கொள்ளலாமா?? ஐரோப்பாவில் எல்லா நாட்டிலும் பெற்றுக்கொள்ள முடிந்த விபரம் கூறவும் ஏன் எனில் நானும் வாசித்துப்பயன் பெற... - vasisutha - 07-09-2004 UK & பிரான்ஸ் இல் எங்கே கிடைக்கும்? |