![]() |
|
கருணைக்கொலைகள்? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: கருணைக்கொலைகள்? (/showthread.php?tid=6986) |
கருணைக்கொலைகள்? - ganesh - 07-02-2004 கருணைக்கொலைகள்? கேள்விப்பட்டுள்ளீர்களா? கருணைக்கொலையென்றால்? உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள் - ganesh - 07-02-2004 கருணைக்கொலை நெதர்லாந்து நாட்டில் சட்ட ரீதியாக அனுமதிக்கப்பட்டுள்ளது ஒரு கடுமையான நோயாளி மாற்றமுடியாத நோயினால் அல்லல்படுவோர் பிறப்பில் அல்லது அதன்பின் வலதுகுறைந்தவர்கள் ஆக மாறியவர்கள் இவர்கள் தமது வாழ்க்கை நிரந்தரமாக முடிப்பதற்காக இந்தக்கருணைக்கொலையை நாடுவார்கள் இவர்களின் விண்ணப்பத்தை சட்டாPதியாக ஆராய்ந்தபின் வைத்தியர்கள் கருணைக்கொலையை வழங்குவார்கள்? இது தான் கருணைக்கொலையென்று நான் நினைக்கின்றேன்? உங்கள் கருத்து? - ganesh - 07-02-2004 கருணைக்? கொலைகள் <img src='http://www.notdeadyet.org/images/bostonbanner.JPG' border='0' alt='user posted image'> - kirubans - 07-03-2004 இங்கிலாந்திலிருந்து ஸ்விசுக்கு குணப்படுத்த முடியாத நோயினால் பீடிக்கப்பட்ட பலர் தற்கொலை செய்யப் போகிறார்கள். இதற்கெனவே சில நிறுவனங்கள் இயங்குகின்றன. கருணைக்கொலை ஒருவகையில் நல்லது என்று சிலர் ஆதரவு தருகிறார்கள். இது நீண்டகாலமாகத் துன்பப்படுவோருக்கு நிரந்தர விடுதலையைத் தந்தாலும், உயிரைப் பறிக்க மனிதருக்கு உரிமையில்லையென சிலர் விவாதிக்கிறார்கள். பல காலம் அழுந்திச் சாவதை விட கருணைக்கொலை மூலம் போய்ச் சேருவது மேல். எனினும் இது சட்டப்படி செய்யப்பட வேன்டும். - ganesh - 07-03-2004 கருணைக்கொலைகள் சம்பந்தமான மேலதிக தகவல்கள் நெதர்லாந்து ஆங்கில மொழிகளில் http://euthanasie.pagina.nl/ - kuruvikal - 07-04-2004 கருக்கலைப்பு முதற்கொண்டு... உயிர்களை எந்த நிலையில் என்ன வடிவத்தில் அழித்தாலும் அது கொலை... கொலைதான்....! உலகில் தோன்றும் ஒவ்வொரு உயிருக்கும் அதற்கு அனுமதிகப்பட்ட இயற்கையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாழ உரிமை இருக்கு.... அதை யாரும் பறித்தெடுக்க முடியாது...அப்படிச் செய்வது ஏதோ ஒரு வகையில் அடக்குமுறைதான்.....! :twisted:
|