Yarl Forum
ஜெனிவா பேச்சு மேசையில் தூங்கிவிழுந்தார் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: ஜெனிவா பேச்சு மேசையில் தூங்கிவிழுந்தார் (/showthread.php?tid=697)



ஜெனிவா பேச்சு மேசையில் தூங்கிவிழுந்தார் - Shankarlaal - 02-26-2006

<b>ஜெனீவா பேச்சு மேசையில் தூங்கி விழுந்த அரசாங்கக் குழு உறுப்பினர்- தட்டி எழுப்பிய பேரியல் அஸ்ரப் </b>
[ஞாயிற்றுக்கிழமை, 26 பெப்ரவரி 2006, 17:31 ஈழம்] [ம.சேரமான்]
ஜெனீவா பேச்சுவார்த்தையில் சிறிலங்கா அரசாங்கக் குழு உறுப்பினர் ஒருவர் தூங்கி விழ அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவரை தட்டி எழுப்பியுள்ளார்.


ஜெனீவா பேச்சு மேசையில் நடந்த சில நிகழ்வுகளின் தொகுப்பு:

- யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் திருத்தம் செய்வது பற்றி பேசினால் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்பு செய்வோம் என்று ஜெனீவாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த எச்சரிக்கை தொடர்பில் ஜெனீவாவிலிருந்து சிறிலங்கா அரசாங்கக் குழுவினர் மகிந்தவை தொடர்பு கொண்டனர்.

"விடுதலைப் புலிகள் வெளிநடப்பு செய்வதானால் செய்யட்டும். நமது நிலைப்பாடு என்ன என்பதை சர்வதேச சமூகத்துக்கு நாம் சொல்வோம். உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் மாற்றிக்கொள்ளாதீர்கள்" என்று மகிந்த உத்தரவிட்டுள்ளார்.

- கொழும்பில் உள்ள மகிந்தவின் தொடர்பகத்திலிருந்து ஜெனீவா பேச்சுக் குழுவினரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட அதிகாரி ஒருவர், "நிமல் சிறிபால டி சில்வா எப்படி இருக்கிறார்? இப்போது பேச்சு மேசையிலும் அவர் தூங்கிக் கொண்டிருக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் ஜெனீவா பேச்சுக் குழுவில் இடம்பெற்றிருந்த அரசாங்கக் குழு உறுப்பினர் ஒருவர் பேச்சு மேசையிலே நல்ல உறக்கத்தில் இருந்ததாகவும் அமைச்சர் பேரியல் அஸ்ரப் அவரை தட்டி எழுப்பிய போது நோர்வேத்தரப்பு உள்ளிட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற அறையில் அனைவரும் சிரித்துள்ளனர்.

- துணை இராணுவக் குழுக்கள் தொடர்பில் ஜெனீவாவில் 2 ஆம் நாள் பேச்சுக்களின் போது நீண்ட விளக்கம் அளித்த பாலசிங்கம், டக்ளஸ் தேவானந்தா ஒரு அரசியல் கட்சியாக இயங்கினால் நாம் அவர்களைத் தாக்க மாட்டோம். துணை இராணுவக் குழுவினராக அவர்கள் செயற்படுகிறார்கள். அதேபோல் புளொட்டிலிருந்து பிரிந்து பரந்தன் ராஜனைக் கொண்டு இந்திய றோவினால் ஈ.என்.டி.எல்.எவ். உருவாக்கப்பட்டது. பரந்தன் ராஜனை இந்திய றோ இப்போதும் பாதுகாத்து வருகிறது. இந்தியாவின் பெங்களுரில் பரந்தன் ராஜன் உள்ளார். ஈ.என்.டி.எல்.எஃப். குழுவினரை பொலன்னறுவை பிரதேசத்துக்கு அனுப்பி படுகொலைகளை அவர் செய்து வருகிறார். ஈ.என்.டி.எல்.எஃப்., ஈ.பி.டி.பி, கருணா ஆகியோர் இணைந்து ஒரு குழுவாக இப்போது இயங்குகின்றனர். ஈ.பி.டி.பி. குழுவினரும் கருணா குழுவினரும் இணைந்து பயிற்சி எடுத்து வருகின்றனர்.

- சிறார் படை சேர்ப்பு விவகாரத்தின் போது பேசிய பாலசிங்கம் அமெரிக்காவினரும் 16 வயதுக்குக் கீழே உள்ள சிறார்களை படையில் சேர்த்தனர்தான். இங்கிலாந்து நாட்டவரும் சிறார்களைப் படையில் சேர்த்தனர். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைகிற போது ஒருவரின் வயது 18 தான் என்று கூறினார்.

- ஜெனீவாவில் பேசிய சிறிலங்கா காவல்துறை மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, தன் சுயசரிதையை வாசித்துள்ளார். தான் யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்த போது இளநிலை காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றியவர்தான் இந்த மேசையில் அமர்ந்திருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறை பொறுப்பாளர் பா. நடேசன் என்றும் கூறினார். மிக நீண்ட நேரம் 20,30 ஆண்டுகால சம்பவங்களை பட்டியலிட்டுப் பேசிக் கொண்டே இருந்ததை எரிக் சொல்ஹெய்முக்கு பாலசிங்கம் சுட்டிக்காட்டி நீண்ட நேரம் அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

சந்திரா பெர்னாண்டோவின் நீண்ட அறிக்கைக்குப் பதிலளித்த பாலசிங்கம், இது காவல்நிலையம் அல்ல என்பது முதலில் சிறிலங்கா காவல்துறை மா அதிபர் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கைது நடவடிக்கைகள் பற்றி எங்களுக்கும் தெரியும். யுத்தம் நடக்கின்ற போது கொல்லுவது எங்கள் பணி என்றும் பாலசிங்கம் தெரிவித்திருக்கிறார்.

http://www.eelampage.com/


- Sukumaran - 02-26-2006

பேரியல் அஸ்ரப் பேச்சுவார்த்தை மேசைல இருந்தாங்களா.. மகிந்தவின் சிந்தனாவுக்கு வெற்றியா?


- Shankarlaal - 02-26-2006

Sukumaran Wrote:பேரியல் அஸ்ரப் பேச்சுவார்த்தை மேசைல இருந்தாங்களா.. மகிந்தவின் சிந்தனாவுக்கு வெற்றியா?

<b>எல்லாமே கிழிஞ்சுது போ. பேரியல் அஸ்ரப் பேச்சுவார்த்தை மேசையில் இருந்தாங்களாவா?
சரியா போச்சு ... நான் நினைக்கிறேன் நீங்கள் Drugsக்கு அடிமையாகிவிட்டீர்கள் போல் உள்ளது... ஜோக்ஸ் ஆக நினைக்கவும். கோபிக்கவேண்டாம்</b>

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Danklas - 02-26-2006

Sukumaran Wrote:பேரியல் அஸ்ரப் பேச்சுவார்த்தை மேசைல இருந்தாங்களா..

இல்லையாம்,, பேச்சுவார்த்தை மேசைக்கு முன்னால போட்டிருந்த கதிரையில இருந்தாங்களாம்,,,, ஏன் இவ்வளவு நாளும் எங்க செவ்வாய் கிரகத்துக்கு போயிருந்தியா??? :evil: :evil:

ஓஒ அப்ப நம்ம 8ம் வகுப்பும் கும்பல்ல கோவிந்தா போடும் ஆளா??? கறுமண்டா,,, :oops: :evil: :evil:


- Sukumaran - 02-26-2006

ஏண்ணா நீங்க யாராவது அரசதரப்புல யார் பங்குபற்றினதெண்டு செய்தி இங்க போட்டீங்களா.?
பேடலயே.. வோறயாரோ முஸ்லும கொண்டுபோறதா வதந்தியா எழுதின ஞாபகம்.. அதான் கேட்டேன்

அதுதவிர ஒங்களமாதிரி லுசா இந்த களத்திலயெ படுத்துக்கிடக்க.. நமக்கெல்லாம் வேலையிருக்கப்பா.. கொஞசம் சாப்பிங் போகவிடுங்கண்ணா.மிகுதிக்கு. இரவு சந்திக்கிறேன்..

Danklas Wrote:
Sukumaran Wrote:பேரியல் அஸ்ரப் பேச்சுவார்த்தை மேசைல இருந்தாங்களா..

இல்லையாம்,, பேச்சுவார்த்தை மேசைக்கு முன்னால போட்டிருந்த கதிரையில இருந்தாங்களாம்,,,, ஏன் இவ்வளவு நாளும் எங்க செவ்வாய் கிரகத்துக்கு போயிருந்தியா??? :evil: :evil:

ஓஒ அப்ப நம்ம 8ம் வகுப்பும் கும்பல்ல கோவிந்தா போடும் ஆளா??? கறுமண்டா,,, :oops: :evil: :evil:



- Shankarlaal - 02-26-2006

Sukumaran Wrote:ஏண்ணா நீங்க யாராவது அரசதரப்புல யார் பங்குபற்றினதெண்டு செய்தி இங்க போட்டீங்களா.?
பேடலயே.. வோறயாரோ முஸ்லும கொண்டுபோறதா வதந்தியா எழுதின ஞாபகம்.. அதான் கேட்டேன்

அதுதவிர ஒங்களமாதிரி லுசா இந்த களத்திலயெ படுத்துக்கிடக்க.. நமக்கெல்லாம் வேலையிருக்கப்பா.. கொஞசம் சாப்பிங் போகவிடுங்கண்ணா.மிகுதிக்கு. இரவு சந்திக்கிறேன்..

Danklas Wrote:
Sukumaran Wrote:பேரியல் அஸ்ரப் பேச்சுவார்த்தை மேசைல இருந்தாங்களா..

இல்லையாம்,, பேச்சுவார்த்தை மேசைக்கு முன்னால போட்டிருந்த கதிரையில இருந்தாங்களாம்,,,, ஏன் இவ்வளவு நாளும் எங்க செவ்வாய் கிரகத்துக்கு போயிருந்தியா??? :evil: :evil:

ஓஒ அப்ப நம்ம 8ம் வகுப்பும் கும்பல்ல கோவிந்தா போடும் ஆளா??? கறுமண்டா,,, :oops: :evil: :evil:

அது சரி டங்க்ளஸ் ஏற்கனவே அரசுதரப்பில் யார் யார் பங்குபற்றுகிறார்கள் என்பதனை இங்கு அறிவிக்காமல் விட்டது அவரது மஹா தப்பு...
இந்த பிழை எதிவரும் மார்ச் மாத பேச்சுவார்த்தையின் போது நடக்காமல் பார்ர்த்துக்கொள்ளும்படி நண்பர் டங்க்ளஸ்ஸை கேட்டுக்கொள்கிறேன்.. தவறும் பட்சத்தில் அவரின் புலனாய்வுதுறை ID பறிக்கப்பட்டு தண்ணி இல்லா காட்டிற்கு அனுப்பப்படும்