Yarl Forum
நாற்பதை கடக்கும் பெண்களுக்கு.. மெனோபாஸ் ஸ்பெஷல் கைடு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: நாற்பதை கடக்கும் பெண்களுக்கு.. மெனோபாஸ் ஸ்பெஷல் கைடு (/showthread.php?tid=6948)



நாற்பதை கடக்கும் பெண் - AJeevan - 07-11-2004

<b><span style='font-size:30pt;line-height:100%'>நாற்பதை கடக்கும் பெண்களுக்கு..
மெனோபாஸ் ஸ்பெஷல் கைடு</b></span>
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_woman.jpg' border='0' alt='user posted image'>

அத்தனை நாட்களும் சின்னஞ்சிறுமியாக சுற்றித் திரிந்தவள் வயதுக்கு வந்து விட்டால் என்னவெல்லாம் செய்கிறீர்கள்? பெற்றவர்கள் மட்டுமில்லாமல் மொத்த உறவுக் கூட்டமும் 'எப்போ? எப்போ?னு காத்திருந்தோம்' என்று கொண்டாடுகிறதே. நாட்டுக்கோழி முட்டையும் உளுந்தங்களியும் கொடுத்துப் பார்த்துப் பார்த்துக் கவனிக்கிறீர்களே. 'இனியும் ஒரு இட்லி ரெண்டு இட்லினு சாப்பிட்டுட்டிருந்தே.. பாத்துக்கோ. வாய்க்குள்ள குச்சிய விட்டாவது நாலு இட்லியத் திணிச்சிடுவேன்' என்று கண்டிக்கிறீர்களே. இதில் ஒரு பங்கையாவது நீங்கள் மாதவிலக்கு நிற்கும் நிலையை அடையும்போது செய்கிறீர்களா?

'ஐயய்ய.. இதையெல்லாம் பத்திப் பேசுவாங்களா?' என்று நினைக்கிறீர்கள். 'இந்த மனோபாவம்தான் முதல் தவறு' என்கிறார்கள் மருத்துவர்கள்.

"எல்லாம் ஹார்மோன் பண்ணுகிற வேலை" என்கிறார் ஹார்மோன் சிறப்பு மருத்துவர் ஜெயஸ்ரீ கோபால்.

"ஒரு பெண்ணின் வாழ்க்கையில் வயதுக்கு வருவதும், டீன் ஏஜும் கல்யாணமும் குழந்தை பிறப்பும் எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம்தான் மெனோபாஸ் எனப்படுகிற இந்த மாதவிலக்கு நிற்கும் காலகட்டமும். ஆனால், காலம்காலமாக, 'இது அசிங்கம். இதைப் பற்றிப் பேசக் கூடாது' என்றே போதிக்கப்பட்டுள்ளதால் பெண்களாகிய நாம் இழப்பது எத்தனை அதிகம்?" என்கிறார் மகப்பேறு நிபுணர் தமிழிசை.

"இதுவும் ஒரு பருவம்தான். இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் ஏற்படக் கூடியது. டென்ஷனற்ற, நிம்மதியான மெனோபாஸ்தான் இந்த வயதில் இருக்கிற எல்லாப் பெண்களின் தேவை" என்கிறார் மனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன். "வலிகளை கவனிக்கிறீர்களா?" என்று கேட்கிறார் எலும்பு சிறப்பு நிபுணர் சௌந்தரபாண்டியன். "இதயமும் முக்கியமானது. மறந்துடாதீங்க" என்று எச்சரிக்கிறார் இதய நோய் சிறப்பு மருத்துவர் ஆஷா குருமூர்த்தி. "கேன்சருக்கான சிறப்பு கவனமும் தேவை" என்கிறார் கேன்சர் சிறப்பு நிபுணர் செல்வி ராதாகிருஷ்ணா. "உணவு விஷயத்தில் நீங்கள் எப்படி?" என்று கேட்கிறார் நியூட்ரிஷியன் ஜோத்ஸ்னா ரஜ்ஜா.

"தாம்பத்திய வாழ்க்கை இனி அவ்வளவுதான் என்று நினைக்க வேண்டாம்" என்று வழிநடத்துகிறார் செக்ஸாலஜிஸ்ட் நாராயண ரெட்டி.. இத்தனை பேரின் துணையுடன் இந்த சிறப்புப் புத்தகமே இருக்க, உங்களுக்கு நிம்மதிக்கா குறைச்சல்? வாருங்கள்.. வாழ்க்கையைச் சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.

ஹார்மோன் குறைஞ்சு போச்சு!

"இனி எல்லாம் சுகமே' என்று மெனோபாஸை சந்தோஷமாக வரவேற்பார்கள் சிலர். 'அடடா.. நம்மளோட இளமை ஓடிப் போயிடுச்சே' என்று வருந்துவார் கள் பலர். வருந்தும்படியான விஷயமில்லை இது" என்கிறார் டாக்டர் ஜெயஸ்ரீ கோபால்.

ஓவரி எனப்படும் சினைப் பையில் முட்டை உற்பத்தி நிற்கும் பருவமான மெனோபாஸ், பொதுவாக 45 வயதுக்குமேல்52 வயதுக்குள் ஏற்படும்.

ஓவரியின் செயல்பாட்டுத் திறன் சுருங்கி அங்கிருந்து வரவேண்டிய, மாத சுழற்சிக்குத் தேவையான அத்தனை ஹார்மோன்களும் குறைந்து, சமயத்தில் தீர்ந்தும் போவதால் மாதவிலக்கு ஆவதில்லை. அவ்வளவுதானே தவிர, 'போச்சுடா.. இனிமேல் நம் வாழ்க்கை அவ்வளவு தான் போல' என்று பயப்படுமளவுக்கு ஒன்றுமேயில்லை.

வெளிநாட்டுப் பெண்கள் மெனோபாஸ§க்குக் கூடுதல் கவனம் தருவார்கள். அதிலும் 'ஹார்மோன் ரீப்ளேஸ்மெண்ட் தெரபி' எனப்படுகிற ஹெச்.ஆர்.டி|க்குப் பயங்கர மரியாதை. உடலில் குறையும் ஹார்மோனை வெளியிலிருந்து தத்தெடுப்பதுதான் ஹெச்.ஆர்.டி.!

'இது எதற்கு என்றால், ஹார்மோன் களின் உற்பத்தி குறைந்தோ, தீர்ந்தோ போவதால், மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படுகின்றன. முக்கியமாக, ஹாட் ஃப்ளஷ் எனப்படுகிற வெப்ப ஊற்றுப் பிரச்னையால் எண்பது சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள்.

உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உடல் முழுக்க வெப்பம் பரவுவதுபோல ஒரு உணர்வு தோன்றுவ தைத்தான் ஹாட் ஃப்ளஷ் என்கிறோம். வியர்வை ஊற்றாகப் பெருகும். ஐந்து முதல் பத்து நிமிடங்களில் இந்த உணர்வு மறைந்து உடல் நார்மலாகிவிடும். சிலருக்கு ஒரு நாளைக்கு ஒன்று முதல் பதினைந்து முறைகூட இது போல ஏற்படலாம்.

சிலர் சாதாரணமான வேலைகூட செய்ய முடியாத அளவுக்குப் பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு இந்த ஹெச்.ஆர்.டி. ஒரு வரப்பிரசாதம். இதில், ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் நீங்களாகவே இதற்கான மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. அது கேன்சர் போன்ற மிகப் பெரிய பிரச்னைகளில் கொண்டுபோய் விடக்கூடும். ஜாக்கிரதை.

ஹாட் ஃப்ளஷ் ஏற்பட்டதும் உடனடியாக காற்றோட்ட மான இடத்துக்குச் செல்லுங்கள். மெல்லிய பருத்தி ஆடைகளையே அணியுங்கள். காற்றோட்டமில்லாத இடத்தில் குளிக்கும்போது, மசாலாப் பொருட்களைச் சேர்க்கும்போது என்று ஹாட் ஃப்ளஷ் எப்போதெல்லாம் ஏற்படுகிறது என்பது தெரிந்தால், அவற்றைத் தவிர்க்கலாம். பெரும்பாலும் ஒரே மாதிரியான சூழலில்தான் இது வருகிறது. சிகிச்சை மூலம் இதைக் கட்டுப் படுத்தலாமே தவிர, முன்பே கண்டறிந்து தவிர்க்க முடியாது.


<b>டென்ஷன்.. டென்ஷன்.. </b>


ஆனந்தியின் நாற்பத்தெட் டாவது பிறந்தநாள் முடிந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. ஒருநாள் காலை பெரும் எரிச்சலும் குழப்ப முமாய் விடிந்தது ஆனந்திக்கு.

"அம்மா.. ப்ரஷ் எங்கேனு தெரியல. கொஞ்சம் தேடிக் குடேன்" என்றான் நரேன். வழக்கமாக அவன் கேட்பதுதான். இவள் தேடித் தருவதுதான். ஆனாலும், அன்று ஏனோ அநியாயத்துக்கு எரிச்சல் வந்தது ஆனந்திக்கு. "வயசு என்னாகுது? இன்னும் ப்ரஷ்ஷை நான்தான் தேடித் தரணுமா? ஒனக்கா தேடிக்கத் துப்பில்ல? ஒன் பொண்டாட்டி மகாராணி என்ன செய்றா? அவள்ட்ட கேளு" என்று எகிற, நரேனின் மனைவியும் அங்கு வர...

நிலைமை என்னவாகியிருக்கும் என்பதைவிளக்கவும் வேண்டுமா?

மெனோபாஸால்தான் இந்தப் பிரச்னை என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். விளக்கமாகப் பார்ப்போம்.

பெரிமெனோபாஸ், மெனோபாஸ், போஸ்ட் மெனோபாஸ் என்று மூன்று நிலைகள் இதில் உண்டு.

பெரிமெனோபாஸ்

நாற்பத்தெட்டு வயதில் மெனோபாஸ் ஆகப்போகிறதெனில், நாற்பத்தைந்து வயதிலேயே அதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துவிடும். இதுதான் பெரிமெனோபாஸ். சிடுசிடுவென்று விழுவது, அல்ப காரியங்களுக்கு எல்லாம் மூட் அவுட் ஆவது, ஹாட் ஃப்ளஷ், மூட்டு வலி, கைகால் உளைச்சல் இவையெல்லாமேதான் இதன் அறிகுறிகள். பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உடல் குழம்ப ஆரம்பிக்கும். வயதுக்கு வந்த புதிதில், என்னென்ன அறிகுறிகள் இருந்தனவோ அவையெல்லாம் இப்போது மீண்டும் 'உள்ளேன் அம்மா..' என்று தலை காட்டும். சரியாக இருபத்தெட்டு நாட்களில் வந்துகொண்டிருந்த மாத விடாய் சில மாதங்கள் கழித்தெல்லாம் திடீரென்று வந்து டென்ஷன் பண்ணுவது, மிக அதிகமான ரத்தப் போக்கு, ஸ்பாட்டிங் எனப்படுகிற திட்டுத் திட்டாகப் படுவது என்று எல்லாம் நடக்கும். காரணம் என்ன தெரியுமா? வயதுக்கு வந்த காலத்தில் திடீரென்று அதிகரித்த ஹார்மோன்களால் உடல் குழம்பிப் போய் தடுமாறி, சில காலம் கழித்து நார்மலானது இல்லையா? அதேபோலத்தான் இப்போதும் ஹார்மோன் குறைவதால் உடல் குழம்பிப் போகும். அதே நேரம், மேலே குறிப்பிட்ட எல்லாப் பிரச்னைகளுக்கும் தகுந்த நிவாரணமுண்டு.

(ஒழுங்கற்ற மாதவிலக்கும் திட்டுத்திட்டாகப் படிவதும் சகஜம்தான் என்றாலும், இவை கேன்சருக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். கவனம் தேவை.)

இந்த இடைப்பட்ட காலம் ஒவ்வொரு வரையும் படுத்துகிற பாடு இருக்கிறதே.. அது இந்தஅளவு என்றில்லை.

முதலாவது மனரீதி யான பிரச்னைகள். 'ஓஹோ.. இனி நான் அவ்வளவுதான் போல' என்கிற தன்னிரக்கம் எழுபது சதவிகிதத்தினருக்கு ஏற்படும். வேலையிலிருந்து ஓய்வுபெறுகிற ஒரு ஆண், 'நாளையிலருந்து நான் இந்த ஆபீஸ§க்கு வரமாட்டேன்ல..' என்கிற ஒரு கனத்த இதயத்தோடு வீட்டுக்குப் போவதற்கு இதை ஒப்பிடலாம். சிலர், ரொம்பவே பயந்து போவார்கள். 'இனி நான் தாம்பத்திய வாழ்க்கைக்கே லாயக்கில்லை. எதற்குமே உபயோகமில்லாதவள். முன்னைப்போல் அழகாக இருக்க முடியாது. வயதாகத் துவங்கி விட்டது. தோலெல்லாம் சுருங்கும். யாரும் மதிக்க மாட்டார்கள்' என்றெல்லாம் பல எண்ணங்கள் மனதைப் பாடாய்ப் படுத்தும்.

ஏற்கெனவே இதுமாதிரி இருக்கும்போது உடல் வேறு பல அசௌகரியங் களைச் சுமந்துவந்து நோகடிக்கும். இரண்டும் கலந்த இந்த நேரத்தில்தான் முக்கால்வாசி வீடுகளில் மகனுக்குக் கல்யாணம் செய்துவைப்பார்கள். ஏற்கெனவே, 'நாம எதுக்கும் உபயோகமில்ல போல' என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களின் எண்ணத்தை உறுதி செய்வதுபோல, புதிதாக வருகிற மருமகள் பல விஷயங்களையும் கையில் எடுப்பாள்.

இந்த நேரத்தில் அந்தத் தாய்க்குத் தேவைப் படுவதெல்லாம் குடும்ப உறுப்பினர்களின் அக்கறை யும் ஆறுதலும் சரியான சிகிச்சையும்தான். ஆனால், பெரும்பாலான வீடுகளில் அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்தக் காலத்தில் புகுந்த வீடு போகிற மகளிடம் தாய், 'எங்கியாவது வெளியில போனா, உன் மாமியார் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ' என்பார். காரணம் இதுதான். 'நான் உபயோகமில்லாதவள் போல' என்ற எண்ணம் மாறி, 'பரவால்லியே.. மருமக நம்மள மதிக்கிறாளே..' என்கிற சந்தோஷம் ஏற்படும் அந்தத் தாய்க்கு.

"இதற்கு என்னிடம் வந்த ஒரு நோயாளியே உதாரணம்...ÕÕ என்கிறார் டாக்டர். தமிழிசை.

"ஒரு அம்மா, பெரிமெனோபாஸ் நிலையில் என்னிடம் வந்தார். அவருக்கு அதோடுகூட, பிபி, சர்க்கரை, கொழுப்பு, கைவலி என்று ஏகப் பட்ட பிரச்னைகள். 'அது முடியல.. இது முடியல' என்று சொல்பவர், திடீரென்று ÔÔஆனாக் கூட டாக்டர்.. சில நேரம்தான் இதெல்லாம். மத்தபடி சமாளிச்சிடுவேன். என் மருமக தங்கம் டாக்டர். என்னை ராஜாத்தி மாதிரி கவனிச்சுக்கிறா!Õ' என்றார்.

உண்மையில் அவருக்கிருந்த பிரச்னைகள் எக்கச்சக்கம். மருமகளின் அன்பான பேச்சும் கவனிப்பும் மட்டுமே அந்த அம்மாவின் எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்து இருக்கிறது என்பது என்னை ஆச்சரியப் படுத்தியது" என்கிறார் தமிழிசை.

<b>மெனோபாஸ் </b>

இது, மாதவிலக்கு முற்றிலுமாக நின்றுபோன காலகட்டம். இப்போது, பெண்ணுறுப்பை வழவழப்பாக வைத்திருக்கிற திரவத்தின் சுரப்புக் குறையும். அந்த இடத்தில் இன்ஃபெக்ஷன் ஆகும். சிலருக்கு வெள்ளைப் படுதல் இருக்கும். அரிக்கும்.

இவையெல்லாவற்றுக்குமே தீர்வுண்டு. திரவத்தின் சுரப்புக் குறைவதால்தான் இந்தப் பிரச்னைகள். இதற்கு என்று க்ரீம்கள், ஜெல்கள் கிடைக்கின்றன. இன்ஃபெக்ஷன் ஏற்பட்டாலும் சரிசெய்ய முடியும். மெனோபாஸ§க்குப் பிறகு ஏற்படுகிற வெள்ளைப்படுதல் அபாயகரமானது. இதையும் உடனே கவனித்தால் குணமாக்கிவிடலாம்.

<b>போஸ்ட் மெனோபாஸ் </b>

இது ஒருவகையில் நிம்மதியான காலகட்டம். ஆரம்பத்தில் கவலைப்பட்டவர்கள்கூட, 'அப்பாடா.. இத்தனை வருஷ அவஸ்தை இனி இல்லை' என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். இந்த நிலையில் ஒரு விஷயத்தில் கவனம் தேவை.

முற்றிலுமாக மாதவிலக்கு நின்றபிறகு, ஆறு மாதமோ ஒரு வருடமோ கழித்து ரத்தப்போக்கு இருந்தாலோ, சின்னதாகத் திட்டுக்கள் இருந்தாலோ, அது ஆரோக்கிய சீர்கேட்டுக்கான (கேன்சராகவும் இருக்கலாம்!) அலாரம். உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

அடி இறங்குதலும் இந்தச் சமயத்தில் பலருக்கு ஏற்படும். கர்ப்பப்பை லூஸாகி இறங்கிவிடும். சிலருக்குப் பெண்ணுறுப்பு வழியே வெளியே வரைகூட வந்துவிடும். இப்படி ஆகிவிட்டால், சர்ஜரி செய்து பையை வெளியே எடுப்பதுதான் தீர்வு.

ஆரம்ப கட்டம் எனில், வளையம் போடுவது போன்ற சிகிச்சைகள் உண்டு. சிறுநீர் கழிக்கும்போது விட்டுவிட்டுக் கழிப்பது இதற்குச் சிறந்த சிகிச்சை.

அக்கறை காட்டுங்களேன்..

அவர் சினிமாத் துறையில் மிகவும் பிரபலமான புள்ளி. அவர் மனைவியை பண்புக்கும், பணிவுக்கும் உதாரணமாகச் சொல்வார்கள். அந்தத் தம்பதியின் அந்நியோன்னியம் அவ்வளவு பிரபலம். எங்கு சென்றாலும் எத்தனை நேரமானாலும் வீட்டுக்கு வந்து மனைவி கையால் மட்டுமே சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நல்ல தம்பதி என்ற வார்த்தைக்கு அர்த்தமாக விளங்கிய அவர்களின் வாழ்க்கையில் அந்த அம்மாவின் நாற்பத்தைந்தாவது வயதில் ஒரு வில்லி உள்ளே நுழைந்தாள், மெனோபாஸ் வடிவத்தில்.

மெனோபாஸின் எதிரொலிப்பான எரிச்சல், கோபம், ஆங்காரம்.. அதெல்லாம் அந்த அம்மாவையும் விட்டுவைக்கவில்லை. அதுவரை சாதுவாகவே அவரைப் பார்த்துப் பழக்கப்பட்ட அத்தனை பேரும், எதற்கெடுத்தாலும் கத்தி, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, வீட்டை ரணகளப்படுத்திய அவரின் புதிய முகத்தைக் கண்டு மிரண்டனர்.

'அம்மாவுக்கு என்னமோ ஆயிடுச்சு' என்று எல்லோருமே விலகினார்கள். அதிலும் பாசமான கணவன் என்று புகழப்பட்ட அவரது கணவரும் அவரை விட்டு விலகியதுதான் கொடுமை.

இந்த மாறுபட்ட நடவடிக்கைகள் வெறும் ஆறேழு மாதங்களில் மறைந்துவிட்டது. ஆனால், அதற்குள் அந்தப் பெண்மணியின் கணவர் இன்னொரு பெண்ணை மணந்து, இவர்களது சந்தோஷ சாம்ராஜ்யமே குப்புறக் கவிழ்ந்து, பிறரது கேலிக்கு உள்ளானதுதான் சோகம்.

"குடும்பத்தினரின் அக்கறை கொஞ்சம் அதிகமாக அப்போது அந்தப் பெண்மணியின்மீது விழுந்திருந்தால், இந்த அசம்பாவிதம் நடந்திருக்குமா?! மெனோபாஸில் காலெடுத்து வைக்கப்போகும் நிலையிலுள்ள பெண்களைக் கொண்ட ஒவ்வொரு குடும்பத்தினரும் யோசிக்க வேண்டிய விஷயம் இது" என்கிறார் மனநல நிபுணர் பாரதி விஸ்வேஸ்வரன்.

"இப்படிப்பட்டவர்களைக் குடும்பத்தோடுதான் வரச்சொல்கிறோம். எங்களது முதல் கவுன்சிலிங் குடும்பத்தாருக்குத்தான்" என்கிறவர், இந்த நேரத்தில் மனதில் ஏற்படும் புதுவித உணர்வுகள், மாற்றங்கள், அதனால் உண்டாகும் பிரச்னைகள் பற்றியும் விவரிக் கிறார்.

"மனதில் ஏற்படும் மாற்றங்கள் என்பதைவிடவும் குழப்பங்கள் என்பதுதான் சரியாக இருக்கும்.. எவ்வளவு தெளிவான ஆட்களையும் கொஞ்சம் அசைத்துப் பார்த்துவிடும் காலகட்டம் அது. பெரும்பாலான பெண்கள், அந்த நிலையை அடையும்வரை அதனைப் பற்றித் தெளிவாக ஏதும் தெரியாமல் இருக்கின்றனர். அதுதான் முதல் பிரச்னையே. முன்பே தெரிந்து, தெளிந்து இருந்தால் தலைவலி, பல்வலியைப் போல இந்தக் குழப்பங்களையும் மிகச் சுலபமாகக் கடந்துவிடலாம்.

யாரையும் பிடிக்காது. எரிச்சலும் சிடுசிடுப்பும் கோபமும் அளவுக்கு அதிகமாகத் தலைகாட்டும். எப்பொழுதும் படுத்துக்கொண்டே இருக்க வேண்டும்போல சோம்பலாக இருக்கும். மனதும் சோர்ந்துபோய், சாப்பிட, டி.வி. பார்க்க, அலங்காரம் செய்ய என எந்த விஷயங்களிலும் ஈடுபாடு இருக்காது. அதுவரை வெகு விருப்பமாக செய்துவந்த வேலைகள்மீதுகூட வெறுப்பு வரும். இதனால் தலைவலி, தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வுகள் தோன்றும். மறதி அதிகமாகும். தூக்கம் வராது. எடை கூடும். அடிக்கடி மார்பு படபடப்பு வந்துபோகும். ஒரு காரணமும் இல்லாமல் வெடித்து அழத் தோன்றும்.

இவை எல்லாவற்றுக்கும் மூல காரணம் அவர்கள் மனதில் உள்ள பயம்தான். பெண்கள் உடல் தோற்றத்துக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள்.

ஒரு கதை சொல்வார்கள். ஒரு அம்மாவுக்குக் கை நடுங்கிக்கொண்டே இருந்ததாம். எத்தனையோ மருத்துவர்களிடம் அழைத்துப் போயும் குணமாக்க முடியவில்லை. கடைசியாக ஒரு டாக்டரிடம் போனபோது அவர், 'வயசாகுதில்லையா.. அப்படித்தான் இருக்கும்' என்றாராம். உடனே சட்டென்று கை நடுக்கம் காணாமல் போய்விட்டதாம்!

அப்படித்தான்.. மாதவிலக்கை 'இன்னும் இளமையாக இருக்கிறோம்' என்பதற்கான சான்றாக எடுத்துக் கொள்கிறவர்களை மெனோபாஸ் பயமுறுத்துகிறது. தோற்றத்தில் உடனே முதுமை வந்து ஒட்டிக்கொள்ளுமோ.. அழகு குறைந்து விடுமோ.. கணவர் விலகிடுவாரோ.. இனி தாம்பத்திய வாழ்க்கைக்கு நாம் லாயக்கில்லையோ.. போன்ற பயங்கள் சூழ்ந்துகொள்கின்றன (உண்மையில் இவையெல்லாமே தேவையற்ற பயம்தான்!).

அந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளும் திருமணம், மேல்படிப்பு என்று பெற் றோரைப் பிரிந்திருப்பார்கள். வெளிஉலகத்தோடு அதிக தொடர்பு இல்லாத, பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபாடு இல்லாத, சதா குழந்தைகளையே நினைத்துக் கொண்டிருக்கும் அம்மாக்களுக்கு இந்த வெறுமையை அவ்வளவு சுலபத்தில் ஜீரணித்துக் கொள்ள முடியாது.

தவிர, கணவருக்கும் வீட்டில் இருக்கும் வயதான பெரியவர் களுக்கும் உடல்நலக் குறைபாடுகள் வரும். இல்லத்தரசி என்ற முறையில் அதை கவனித்தாக வேண்டிய பொறுப்பும் இவர்களுடையதாகத்தான் இருக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படும். எல்லாமே பெரிய அளவில் செலவு வைக்கும் சமாச்சாரங்கள். அதைச் சரிக்கட்ட வேண்டிய கடமையும் அழுத்தும். ஆக, உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கிடைக்காததோடு, கூடுதல் பொறுப்புகளும் சேர மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தங்களுடைய பிரச்னைகளைக் குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள முடியாமலே போய்விடுகிறது.

இவை தாண்டி கணவரின் அனுசரணை இருந்தாலே மெனோபாஸைச் சுலபமாக எதிர்கொள்ளலாம். 'அனுசரணையான கணவர் அமையப் பெறாதவர்கள், கணவனை இழந்த, திருமணமாகாத, விவாகரத்தான பெண்கள், தாமதமாகக் குழந்தை பெற்றதால் டீன்|ஏஜ் பிள்ளைகளைக் கொண்ட அம்மாக்கள் ஆகியோர் இதுபோன்ற மன உளைச்சலுக்கு மிக மிக அதிக அளவில் ஆளாகின்றனர்' என்கிறது உலக அளவில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரம்.

நம் ஊரில், பிரச்னையோடேயே வாழ்வதுதான் அம்மாக்கள் செய்கிற பெரிய தவறு. மன உளைச்சலை போக்க மாத்திரைகள் உள்ளன. மருத்துவரின் அனுமதியோடு எடுத்துக்கொள்ளலாம். மெடிடேஷனும் அதிகாலை நடைப்பயிற்சியும் சுலபமான நிவாரணிகள்.

மெனோபாஸில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அவை எல்லாமே தீர்வுள்ள பிரச்னைகள்தான். அதற்குப் பிறகான வாழ்க்கை நிம்மதியானது. மாதாந்திரத் தொல்லை இல்லை. கோயில், விசேஷங்களுக்கு நிம்மதியாகப் போய் வரலாம். குழந்தை உண்டாகுமோ என்ற பயமின்றி தைரியமாக தாம்பத்தியத்தில் ஈடுபடலாம். மீண்டும் வளர்ந்த குழந்தையாக வாழ்வை அனுபவிக்கலாம்.ÕÕ

<b>இயற்கை தந்த வரம்! </b>

ஆயிரம் திரை கண்டு இன்றும் சளைக்காமல் நடிப்புலகில் ஓடிக்கொண்டிருக்கும் மனோரமா வுக்கு வயது அறுபதுக்கும் மேல். உடலையும் மனதையும் துவளச்செய்யும் மெனோபாஸ் பருவத்தைத் தான் கடந்துவந்த விதத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார் ஆச்சி.

"பத்து வயசா இருக்கும்போதே மெனோபாஸ்னா என்னனு தெரிஞ்சுக்கிட்டேன். அந்தளவுக்கு என் கண்ணு முன்னால கஷ்டப்பட்டாங்க எங்கம்மா. அம்மாக்கு எந்நேரமும் அனல்ல குளிச்சு முறுக்குச் சுடற வேலை. வேலை பாத்துட்டிருக்கும்போதே திடுதிப்புனு காலோட தீட்டுப் போகும். அவங்க கட்டியிருக்கற 18 முழம் புடவை மொத்தமா நனஞ்சு தொப்பலாயிடும். ஒரு நாளைக்கு நாலஞ்சு புடவை மாத்துவாங்க. நான்தான் தொவைப்பேன்.

அம்மா படற வேதனையைப் பார்த்து எனக்கு நெஞ்சு வலிக்கும். அம்மா கஷ்டப்பட்டாத்தான் எங்க வயித்துக்கு சோறு. ஆனா, 'சேர்ந்தாப்பல அரை மணி நேரம் உக்கார முடியாதபடிக்கு கைகாலெல்லாம் விட்டுப் போகுதும்மா'னு அழுதுட்டே போய் படுத்துடுவாங்க. ஒரு வருஷம் வரைக்கும் இந்த அவஸ்தை தொடர்ந்துச்சு. அம்மாவுக்கு நான், எனக்கு அம்மா, வேற துணை இல்லேங்கறதால தன் உடம்புக்கு என்னங்கறதை எங்கிட்ட விளக்கமாச் சொன்னாங்க. அப்பலேர்ந்தே என் அடி மனசுல இந்த வயச நெனச்சு சன்னமா ஒரு பயம் ஒட்டிக்கிட்டே இருந்துச்சு.

நாற்பத்தஞ்சாவது வயசுல அந்தக் கட்டம் எனக்கு வந்துச்சு. இந்த விஷயத்துல 'அம்மா மாதிரிதான் பொண்ணுக் கும்'னு பலபேர் சொன்னதால பயம் கூடிடுச்சு. மகமாயி தயவால எனக்கு அவ்வளவு சோதனை வரலை.

அந்த ரெண்டு வருஷமும் அடிக்கடி மூளையே குழம்பிப் போற மாதிரி ஆகிடும். திடீர்னு உடம்பு முழுக்க அனலடிக்கும். குப்புனு வேர்க்கும். அதை வெளில காட்டிக்காம, காத்தாட உக்காந்து உடம்பு பழைய நிலைமைக்கு வந்ததும் வேலையைப் பார்ப்பேன். இப்படில்லாம் ஆகும்னு தெரிஞ்சிருந்ததால தன்னால சரியாகிடும்னு நானே என்னை சமாதானப்படுத்திக்கு வேன்.

எப்போ வரும்னு தெரியாம, திடீர் திடீர்னு விலக்காகும் பாருங்க. அதுலதான் ரொம்பவும் அவஸ்தைப்பட்டுட்டேன். அப்படித்தான் 'வருவான் வடிவேலன்' படத்துக்காக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போனப்போ விலக்காயிட்டேன். எல்லாரும் காத்திருக்காங்க. நான் தயங்கினா பல பேர் பொழப்பு கெட்டுடும். கடைசியா ஆத்தாமேல பாரத்தைப் போட்டுட்டு, 'இது பொம்பள பொறப்புக்கு நீ ஏற்படுத்தின நியதி.. இதுல என் தப்பு ஒண்ணுமில்லை. தாயேÕனு கண்ணீரோட வேண்டிக்கிட்டு பிரகாரத்துக்குள்ள நுழைஞ்சு நடிச்சேன். அந்த ஒரு நாள் முழுக்கப் பச்சைத் தண்ணி பல்லுல படாம பார்த்துக் கிட்டேன். அதுதான் ஆத்தாக்கு என்னால செய்யமுடிஞ்சது.

இத்தனை அவஸ்தைப்பட்டதனாலயோ என்னமோ அப்புறமா அந்த மாதாந்தரத் தொல்லையிலிருந்து கிடைச்ச.. விடுதலை, பிரசவ வேதனையை மறக்கடிச்சு குழந்தை முகம் பாக்கிற மாதிரி அத்தனை சுகமா இருக்கு. ஒருவேளை.. இளமை போய்டுச்சேனு சங்கடப்படக்கூடாதுனுதான் இயற்கை இத்தனை கஷ்டங்களைத் தருதோ, என்னவோ..' என்கிறார் கவித்துவமாக.

<b>"இன்னும் நான்இளமைதான்" </b>

சிரித்த முகம் எழுத்தாளர் அனுராதா ரமணனுக்கு. வரும் ஜூனில் ஐம்பத்தேழு வயதைத் தாண்டுகிற அனுராதா, தான் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கிறார்.

"அப்போ எனக்கு முப்பத்தேழு வயசு. எழுத்தாளரா ரொம்பப் புகழோட இருந்த நேரம். மீட்டிங், விழானு எங்கேயாவது போய்ட்டே இருப்பேன். அப்போதான் அந்தப் பிரச்னை ஆரம்பிச்சது. பதினஞ்சு நாள், இருபது நாளுக்கு ஒருமுறை விலக்காகிடுவேன். உடம்பே கரைஞ்சுபோற மாதிரி ரொம்பக் கஷ்டப்பட்டேன்.

டாக்டர்ட்ட போனப்போ ஸ்கேன் பண்ணிப் பாத்துட்டு, 'யூட்ரஸ்ல சின்ன கட்டி இருக்கு. யூட்ரஸையே எடுக்கணும்' னுட்டாங்க. எனக்கு சர்ஜரி பண்ணின டாக்டர் கனகவல்லி, 'உனக்கு முப்பத்தேழு வயசுதானே ஆகுது. ஓவரிஸை எடுக்க வேணாம். அதைஎடுத்துட்டா, ரொமான்டிக்கான உணர்வுகள் செத்துப் போய்டும்'னு சொன்னாங்க. அதுக்கு எங்கம்மா, 'அதனால என்ன டாக்டர்? அவ புருஷன்தான் உயிரோட இல்லையே'னு சொல்லவும் டாக்டர், 'அப்படிச் சொல்லாதீங்கம்மா. உணர்வுகள் வேற. கல்யாணம், புருஷன்ங்கிறதெல்லாம் வேற. அதிலயும் அவ எழுதுறவ. ஒரு லவ்ஸ்டோரி எழுதணும்னாக்கூட இந்த உணர்வுகள் வேணும்'னு சொல்லிட்டாங்க. நல்லவேளையா, கால் உடைஞ்சு ஆஸ்டியோபொராஸிஸ் வந்து நான் கஷ்டப்பட்டப்போ, அந்த ஓவரீஸ்தான் என்னைக் காப்பாத்துச்சு. அதுலருந்து சுரக்குற ஹார்மோன்களால தான் என் உடம்புக்கு இன்னிக்கு வரைக்கும் கால்சியம் கிடைச்சிட்டிருக்கு.

யூட்ரஸ் எடுத்ததுக்கப்புறமா, நாற்பத்தோரு வயசுல எனக்கும் மெனோபாஸ் வந்தது. திடீர்னு தலைக்குள்ள என்னவோ கொதிக்கிற மாதிரி இருக்கும். சட் சட்னு கோபம் வரும். பிபி|தான் அதிகமாகிடுச்சு போலனு டாக்டர்ட்ட போனா, பிபி நார்மலா இருக்கும். அப்போதான், டாக்டர், 'இது மெனோபாஸ். உங்க விஷயத்துல மாதவிலக்கு இருக்காதே தவிர, மத்த எல்லாக் குழப்பங்களும் இருக்கும்'னாங்க. இப்போ யோசிச்சுப் பாத்தா, 'நான்தானா அப் படி எரிச்சல் பட்டேன்'னு ஆச்சரியமா இருக்கு. அது ஒருமாதிரி, 'நம்மள நாமே இழந்துடற' நிலைமை. மத்தவங்களுக்கு அந்த நேரத்துல ஆறுதல் சொல்ல, வீட்டுக்காரர் இருப்பாங்க. என் விஷயத்துல வீட்டுக்காரனும் நானே. வீட்டுக்காரியும் நானே. என்னை நானேதான் தேத்திக்கணும்.

சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு புத்தி. எதுக்காகவும் ரொம்ப நேரம் அழவோ வருத்தப்படவோ மாட்டேன். கொஞ்ச நேரம் மனசு விட்டு அழுதிட்டு விட்டுடுவேன்.

அப்படிப்பட்ட நானே அந்த நேரத்துல 'நானுறங்கும் நாள் வேண்டும்.. சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்.. என் கண்ணில் நீர் வேண்டும்.. சுகமாக அழ வேண்டும்'னு ஒரு சினிமா பாட்டுல வருமே அது மாதிரி, எனக்குனு யாருமே இல்லையேனு ரொம்பத் தவிச்சுப் போய்ட்டேன். அந்த நேரம் என் தங்கை என்கூடவே ஆறுதலா இருந்தா.

இப்போ பாருங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நேத்து பெய்த மழையில ஒரு பையனும் பொண்ணும் வீட்டுக்குத் தெரியாம வந்திருக்குங்க போல.. ஸ்கூட்டர்ல நனைஞ்சுட்டு, என் வீட்டு வழியா போச்சுங்க. எனக்கு அதுங்கள பாக்க ஆசையா இருந்தது. என்னோட உணர்வுகள நல்லபடியா வெச்சிருக்கிற கடவுளுக்கு நன்றி சொன்னேன்.

என் உடலுக்குத்தான் வயசாச்சே தவிர, மனசு இன்னும் இளமைத்துள்ளலோடதான் இருக்கு"

சந்தோஷத்தை மீட்க


- kuruvikal - 07-11-2004

ஏன் இப்ப மொனோபாஸ் வருவதை பிந்தள்ளி வைக்க செயற்கை ஒமோன் மாத்திரைகள் இருக்கின்றன.... ஆனால் அதை சாதாரணமாக கையாள அனுமதிப்பதில்லை... வைத்தியத் தேவை கருதி அனுமதிப்பார்கள்...! அது தொல்லையோ இல்லையோ என்பது எமக்குத் தெரியாதப்பா....! ஆனால் உயிரியல் உடற்தொழிற்பாட்டின் கீழ் இயற்கைக்குரியதை இயற்கையாக நடக்க அனுமதிப்பதே சிறந்தது....! பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்...!

என்ன... ஆண்களும் பெண்களும் தேவைகள் பாராது மனதால் காலத்துக்குக் காலம் ஒருவரை ஒருவர் அன்பால் நெருங்கி வருதலே இறப்புவரை சந்தோசமான குடும்ப வாழ்வை நோக்கி இட்டுச் செல்லும் என்பது மனித உளவியல் சொல்லும் செய்தி....! Idea


- Paranee - 07-11-2004

தகவலிற்கு நன்றி அஜீவன் அண்ணா


- Paranee - 07-11-2004

[quote=kuruvikal]ஏன் இப்ப மொனோபாஸ் வருவதை பிந்தள்ளி வைக்க செயற்கை ஒமோன் மாத்திரைகள் இருக்கின்றன.... ஆனால் அதை சாதாரணமாக கையாள அனுமதிப்பதில்லை... வைத்தியத் தேவை கருதி அனுமதிப்பார்கள்...! அது தொல்லையோ இல்லையோ என்பது எமக்குத் தெரியாதப்பா....! ஆனால் உயிரியல் உடற்தொழிற்பாட்டின் கீழ் இயற்கைக்குரியதை இயற்கையாக நடக்க அனுமதிப்பதே சிறந்தது....! பக்கவிளைவுகளைத் தவிர்க்கலாம்...!

என்ன... ஆண்களும் பெண்களும் தேவைகள் பாராது மனதால் காலத்துக்குக் காலம் ஒருவரை ஒருவர் அன்பால் நெருங்கி வருதலே இறப்புவரை சந்தோசமான குடும்ப வாழ்வை நோக்கி இட்டுச் செல்லும் என்பது மனித உளவியல் சொல்லும் செய்தி....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ??????????????????


- tamilini - 07-11-2004

ம்.... குருவிகள்.... உண்மையைச்சொல்லியிருக்கிறதுகள்.... :wink: :wink:


- AJeevan - 07-12-2004

[i][b]<span style='font-size:23pt;line-height:100%'>புூப்பென்னும் புனிதம்
நிறைவடையும் திருநாளில்
பைத்தியம் பிடித்துமனம்
பரபரக்கும் ஒருபொழுதில்
சுகமாக அழுவதற்குத்
திருமார்பு தருவாயா?</span>
<img src='http://www.yarl.com/forum/files/thumbs/t_mother-s.jpeg' border='0' alt='user posted image'>
[b]<span style='font-size:30pt;line-height:100%'>இஃதில்லை யான்கேட்பது</span>
-கவிப்பேரரசு வைரமுத்து

காலநேரம் பாராமல்
காமச்சங்கு முழங்கி

நிராயுதபாணியோடு
யுத்தமொன்று தொடங்கி

முத்தமிடத்தெரியாமல்
மோகத்தில் குதறி

மின்விசிறி தலைதட்ட
மேலேற்றிச்சுழற்றி

சிருங்காரபயத்தில் நான்
சில்லிட்டலற
மெத்தைமேல் என்மேனி
விசிறியெறிந்து

உலை கொதிக்குமுன்னே
அவசரத்தில் அரிசியிட்டு

உனக்குள் இருக்கும்
காமக்கொழுப்பை
உருக்கி உருக்கி
எனக்குள் ஊற்றி

தேவை தீர்ந்ததும்
திரும்பிப்படுத்து

குளித்தகூந்தல்
உலர்த்தி வருமுன்னே
குறட்டை விடுமென்
காதற் கணவா
இஃதில்லை யான்கேட்பது

மென்மை வேண்டுமெனக்கு
புல்லிதழில் புறப்பட்ட
பனித்துளியின் யாத்திரைபோல்

சங்கில் நுழைந்து
சத்தமிடும் காற்றைப்போல்

மென்மை வேண்டுமெனக்கு

பிரவாகம் பிறகு
சாரலில் தொடங்கு

ஏது செய்தால்
உயிர் மலரும்
நான் சொல்லமாட்டேன்

நான் அமெரிக்கா
நீ கொலம்பஸ்
கண்டறிதல் உன் பொறுப்பு

பத்துவிரல் அத்தனையும்
மயிலிறகாய் மாற்றி
செல் எல்லாம்
பூப்பூக்கச் செய்

என் அங்கங்களை
ஒன்றுக்கொன்று
அறிமுகம் செய்

அவசரக்காரா
வீணைதடவக்
கோடரி கொண்டுவந்தவனே ! நீ முடித்த இடத்தில்
நான் தொடங்குகிறேன்

யான் கேட்பதெல்லாம்

ஆதிக்கம் முடிந்தபின்னும்
அழுத்தம் குறையாத அதே பிடி

காதுமடல்படும் உனது
சவாசச்சூடு
ஒவ்வொரு நிகழ்வின்
முடிவின்போதும்
உனக்கே நான் என்னும்
உத்தரவாதம்

உன்கூந்தல் கோதும்
உள்ளங்கை வெப்பம்
சிதறிக்கிடக்கு மென்னைச்
சேர்த்தெடுக்கும் அக்கறை

கிடந்தபடி என்னைக்
கிடக்கவிடும் சுதந்திரம்
சிருங்காரக் களைப்பில்
சிறுசிறு சேவை

து}ங்கும் வரைக்கும்
சுகமான தொந்தரவு
மார்பணையும் போது
மனம்பரவும் நம்பிக்கை

இதோ !!!
கம்பளிக்குள் நான் வைக்கும்
காதோரக் கோரிக்கை

மோகம் வழிந்துவிடும்
வாழ்வின் பிற்பகலில்
இதே தீவிரம் இழையுமா?
விருந்தினர் முன்னே
நீ தரும் மதிப்பை
விருந்துகழிந்தும் தருவாயா?

எந்த புடவை நீ
எப்போது தந்ததென்று
தேதி சொல்லித் திகைக்கவைப்பாயா?
என் ஐவிரல் இடுக்கிலும்
ஆலிவ் எண்ணெய்பூசி
ஆர அமர அன்புசெய்வாயா?

மாணிக்கவிரல்கள் மடிமேலிட்டு
நானறியாமல் நகம் களைவாயா?
அழகின் நீர் மட்டம் வடியவடிய
அல்லித்தண்டு மனம்
ஒடியாதிருப்பாயா?

பூப்பென்னும் புனிதம்
நிறைவடையும் திருநாளில்
பைத்தியம் பிடித்துமனம்
பரபரக்கும் ஒருபொழுதில்
சுகமாக அழுவதற்குத்
திருமார்பு தருவாயா?

உறுதி சொல்?
உண்மை சொல்?
நம்பலாமா?

Thanks:
http://www.nilavu.com/content/kavithai/1/kn1.htm


- Eelavan - 07-12-2004

கிட்டத்தட்ட இதே வரிகள்தான் சினேகிதனே சினேகிதனே பாடலிலும் வருகிறது


- Paranee - 07-13-2004

வைரமுத்துவின் கவிதை வாசித்தபோது என் எண்ணம் வரைந்தவை, எப்போதுமே அப்படித்தான் அவரின் வரிகள் கண்டவுடன் எனது கரங்களும் வரையத்தொடங்கிவிடும்.

(எப்போதும் அனுபவக்கவிதைகளும், கதைகளும் அழுத்தம் தருபவையாகவும் அழகுறுபவவையாகவும் அமைந்துகொள்கின்றன. ம் இது எனக்கு கேள்விஞானக்கவிதை )

மென்மை வேண்டுமெனக்கு

மடியேற்றி வைத்த பாதங்கள்
வாஞ்சையுடன் வருடும் கரங்கள்

உச்சந்தலை தொடங்கி
உள்ளங்கால் வரையான உன்
இதழ்வருடல் இறுக்கத்துடன் வேண்டும்

ஆதிக்கம் இல்லாத ஆர்ப்பாட்டம் காட்டாத
அந்தரங்கம் மறைக்காத உன் ஆண்மை மறந்த
பெண்மை வேண்டும்

பூப்பறிக்க நீ படையெடுப்பு எதற்கு ?
புன்னகை ஓன்றே போதும்
என் பெண்ணகை விழிக்கும்

காமத்தீ அணைக்க
நீ எனக்குள் கடல்தேடும் போதும்
காதல் மணம் வீசிக்கொள்ளவேண்டும்

புலரும் பொழுதிலும் நீ எனக்குள்
புதையல் தேடவேண்டும்
தேடிக்களைத்து தேய்நிலவாகவேண்டும்
மார்போடுனையணைத்து எனை மஞ்சமாக்கவேண்டும்

தாரம் என்றென்னை தனித்துவைக்காமல்
உன் தாய்மடிவாசம்
என்னுள்ளேயும் நீ காணவேண்டும்

அழும்போது அணைக்கவேண்டும்
ஆனந்தத்தில் என்னை ஆலவட்டம்போடவேண்டும்
எந்த துளி எங்கே வீழ்ந்ததென்று
சமுத்திரம் ழூழ்கி தேடாமல்
என் மனதில் தேடி
என்னுள்ளம் நிறைக்கவேண்டும்

பிரிவு என்ற வார்த்தையை
நீ மறந்து வாழவேண்டும்
எனை மறக்காத ஓர் நொடிவேண்டும்

தாய்மை நான் கண்டால்
தாயாக நீ மாறவேண்டும்
சேயாக நான் மாறி சே~;டைகள் செய்திடும்போது
சினக்காமல் வாழவேண்டும்

மாதத்தில் ழூன்று நாட்கள்
மரணவேதனை நான் படும்போது
மார்போடு அணைக்கவேண்டும்
மலர் வருடல் தரவேண்டும்
உன் அன்பின் மழையில்
என் அடிவயிற்று தீக்கொழுந்து
அணைந்துபோகவேண்டும்

இருபத்தைந்தில் கமழும் அன்புமணம்
எழுபத்தைந்திலும் நிலைக்கவேண்டும்
வாரிசுகள் எமக்கு வந்தாலும்
வாஞ்சையுடன் எனை தினம் அணைக்கவேண்டும்

செய்வாயா ?
சோந்துகொள்கின்றேன்


- AJeevan - 07-13-2004

kuruvikal Wrote:<span style='color:brown'>ஆண்களும் பெண்களும்
தேவைகள் பாராது
மனதால் காலத்துக்குக் காலம் ஒருவரை ஒருவர் அன்பால் நெருங்கி வருதலே
இறப்புவரை சந்தோசமான
குடும்ப வாழ்வை நோக்கி இட்டுச் செல்லும் என்பது
மனித உளவியல் சொல்லும் செய்தி....!

[b][size=24]மென்மை வேண்டுமெனக்கு......</span>

<img src='http://www.yarl.com/forum/files/ajeevan.jpeg' border='0' alt='user posted image'>
[quote=பரணி] இருபத்தைந்தில் கமழும் அன்புமணம்
எழுபத்தைந்திலும் நிலைக்கவேண்டும்
வாரிசுகள் எமக்கு வந்தாலும்
வாஞ்சையுடன் எனை தினம் அணைக்கவேண்டும்

[size=14]
மனம் விட்டுப் பேசுவதும்
புரிந்துணர்வும்
மன(மண)வாழ்வை
செழுமையாக்கும்..............
..