![]() |
|
ரேவதியின் ஹிந்திப் படம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39) +--- Thread: ரேவதியின் ஹிந்திப் படம் (/showthread.php?tid=6880) |
ரேவதியின் ஹிந்திப் பட - Mathan - 07-24-2004 ரேவதியின் ஹிந்திப் படம் ரேவதி இயக்கத்தில் இரண்டாவது படமாக ஷாருக் கானின் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ஹிந்திப் படம் 'பிர் மிலேங்கே'. இதில் நாயகன் எய்ட்ஸ் நோயாளி என்பது படத்தின் முக்கிய அம்சம் என்று கூறுகிறார் இயக்குநர் ரேவதி. ரேவதி செவ்வி http://www.bbc.co.uk/tamil/040709_revathi.ram வழக்கமாக திரைப்படங்களில் காதல் கதைகளில் மனிதர்கள் வில்லன்கள். இந்தப் படத்தில் , எய்ட்ஸ் நோய் குறித்து மனிதர்களின் அணுகுமுறைதான் வில்லன் எனக் கொள்ளலாம் என்றார் ரேவதி. காதல் கதையாக இருந்தாலும், ஒரு எய்ட்ஸ் நோயாளி சமுதாயத்தில் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளையும் இப்படம் தொடுவதாக இயக்குநர் ரேவதி கூறினார். எய்ட்ஸ் நோய் குறித்து இந்திய சமூகத்தில் நிலவும் தவறான கண்ணோட்டங்கள் மற்றும் கருத்துக்கள் மீது இப்படம் தாக்கத்தைச் செலுத்தும் என்று ரேவதி நம்புகிறார். தமிழில் தயாரிப்பாள்ர் கிடைத்திருந்தால் தமிழிலேயே இந்தப் படத்தை எடுத்திருப்பேன் என்று அவர் தெரிவித்தார். |