Yarl Forum
நிழலாகப் பார்த்த உன்னை - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: நிழலாகப் பார்த்த உன்னை (/showthread.php?tid=6879)



நிழலாகப் பார்த்த உன்ன - Mayuran - 07-25-2004

என்னவளுக்கு!
உன்னவன்
ஊமையாய் வரைந்தவை...

நிழலாகப் பார்த்த உன்னை
நிஜமாகக் கண்டேன் இன்று
நிழலிலும் பார்க்க நிஜத்தில்
நீ தேவதையாய் மிளிர்ந்தாயம்மா...

நிஜமான உன்னோடு
நான் பேசியதே இல்லையெடி
நிழலான உன்னோடு
நான் பேசியதோ
பல காவியங்கள் வரையப் போதுமெடி.
(27.06.2004)


- kavithan - 07-25-2004

நல்லது வரையுங்கோ காவியம்......
எங்கழுக்கும் வாசிக்க பயன்படும்..
அனுபவமோ அல்லது கற்பனையோ........ கவிதை நல்லாய் இருக்கு.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்


Re: நிழலாகப் பார்த்த உன் - வெண்ணிலா - 07-25-2004

Quote:நிழலாகப் பார்த்த உன்னை
நிஜமாகக் கண்டேன் இன்று
நிழலிலும் பார்க்க நிஜத்தில்
நீ தேவதையாய் மிளிர்ந்தாயம்மா...


<img src='http://www.sunmixserver.com/forum/images/avatars/gallery/Girls/5.gif' border='0' alt='user posted image'>

<b>நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுத சுட்டி வெண்ணிலாவின் வாழ்த்துக்கள்.</b>


- shanmuhi - 07-25-2004

நிழலாக பார்தது, நிஜமாக கண்டு... நிழலிலும் நிஜத்திலும் பேசி... காவியங்கள் பல படைக்க வாழ்த்துக்கள்....


- kuruvikal - 07-25-2004

கவிதை அருமை வாழ்த்துக்கள் நண்பரே...!


- Mayuran - 07-25-2004

வாழ்த்துத் தந்த கவிதன், வெண்ணிலா, சண்முகி, குருவிகளுக்கு என் நன்றிகள்.


- tamilini - 07-25-2004

கவிதை நன்று வாழ்த்துக்கள் மயூரன்...!


- Mayuran - 07-27-2004

நன்றி தமிழினி அக்கா