![]() |
|
இயற்கைப் பெண் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: இயற்கைப் பெண் (/showthread.php?tid=6871) |
இயற்கைப் பெண் - Mayuran - 07-27-2004 பச்சை நிற ஆடை கட்டி பருவப் பெண் போல் செழித்து நின்ற பூமி மகள் மஞ்சள் நிற ஆடைகட்டி மகிழ்வான சுமங்கலியாய் வாழ்ந்த காலம் போய் வெள்ளை நிற ஆடை கட்டி அமங்கலியாய் அரற்றும் காலம் பனிக்காலம். - kuruvikal - 07-27-2004 மயூரன் நல்லாத்தான் இருக்கு கவிதை... ஆனா அமங்கலியாப் பெண்ணுக்கு மட்டும் எப்பவும் வெள்ளை ஆடை உடுத்துப் பாக்கிறது மட்டும் மனசுக்கு சரியாப்படேல்ல.... வேணும் என்றால் இயறகையை ஆணுக்கும் உவமைப்படுத்தி தவுதாரனாக்கி வெள்ளை கட்டிப்பார்த்திருந்தா கொஞ்சம் நவீனத்துவமா இருந்திருக்கும்....! ஆனா எங்களட்டக் கேட்டா உலகில் யாரும் அமங்கலியாகவோ தவுதாரனோ ஆகக் கூடாது...அது உவமைக்காக இருந்தால் கூட.... நேசமுள்ள அன்பான உறவுகளை ஏன் பிரித்துப் பார்த்து வேற்றுமைப்படுத்தி உவமை சொல்ல வேண்டும்....அப்படி என்று ஒரு எண்ணம் தோன்றிச்சு சொல்லுறம்...! ஆனா இயற்கையில் இவை நிகழ்வுகளாக உள்ளன என்பதும் சகிக்கமுடியாத உண்மைதான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ...!
- tamilini - 07-27-2004 Quote:பச்சை நிற ஆடை கட்டிபாவம் அமங்கலிப்பெண்கள் படும் பாடு...! பூமியையும் அமங்கலியாக பார்க்க உங்களுக்கு அப்படி என்ன ஆசை மயூரன்.......! அல்லது அது தான் உண்மையா? - shanmuhi - 07-27-2004 இயற்கையோடு பெண்ணை ஒப்பிட்டு வார்த்த கவிதை அருமை.... வாழ்த்துக்கள்... ஆனாலும் ஒரு நெருடல் இந்த வரிகளில் Quote:வெள்ளை நிற ஆடை கட்டி |