![]() |
|
திருச்சி என்.ஐ.டி.,யில் மாணவி குத்தி படுகொலை * காதல் "கை' ம - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7) +--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34) +--- Thread: திருச்சி என்.ஐ.டி.,யில் மாணவி குத்தி படுகொலை * காதல் "கை' ம (/showthread.php?tid=6830) |
திருச்சி என்.ஐ.டி.,யில் - kavithan - 08-06-2004 <span style='font-size:25pt;line-height:100%'><b> திருச்சி என்.ஐ.டி.,யில் மாணவி குத்தி படுகொலை * காதல் \"கை' மாறியதால் காதலன் வெறிச்செயல் </b></span> http://www.yarl.com/forum/files/imp-07_20a.jpg '' திருவெறும்பூர் : திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள துவாக்குடியில் தேசிய தொழில்நுட்ப கழகம்(என்.ஐ.டி.,) என்ற பொறியியல் கல்லுõரி உள்ளது. கடந்தாண்டு வரை மண்டல பொறியியல் கல்லுõரி(ஆர்.இ.சி.,)யாக இயங்கி வந்தது. என்.ஐ.டி.,யான பின்னர் மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கி வருகிறது. இளங்கலை, முதுகலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளது. இங்கு தேசிய அளவில் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 3 ஆயிரம் மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். உலகளவில் புகழ்பெற்ற இந்த என்.ஐ.டி.,யில் கடந்த மாதம் தான் அகில இந்திய கவுன்சில் மூலம் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். திருச்சி அருகேயுள்ள பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் கோதண்டராமன். இவரது மகள் அகிலா(21). இவர் திருச்சி துவாக்குடி என்.ஐ.டி.,யில் முதலாமாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். பெல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அய்யப்பன். இவரது மகன் பரத்வாஜ்(22). இவர் தஞ்சாவூர் சண்முகா பொறியியல் கல்லாரியில் பி.இ., மெக்கானிக்கல் பிரிவில் இறுதியாண்டு மாணவர். பெல் டவுன்ஷிப் அருகேயுள்ள கணேசபுரத்தில் வசித்து வரும்போது அகிலாவுக்கும், பரத்வாஜூக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. அப்போது அகிலா திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள உள்ள பெண்கள் கல்லுõரியில் படித்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தனர். பெற்றோரும் விஷயமறிந்து இருவரின் படிப்பு முடிந்த பின்னர் திருமணத்தை நடத்தி வைக்கலாம் என முடிவு செய்தனர். கல்லுõரி படிப்பு முடிந்ததும் அகிலாவை என்.ஐ.டி.,யில் சேர்த்தனர் அவரது பெற்றோர். கலகலப்பாக பழக கூடியவர் அகிலா. கடந்த சில மாதங்களாக மோசஸ் என்பவரிடம் ஏற்பட்ட "பழக்கம்' காரணமாக பரத்வாஜை, அகிலா உதாசீனப்படுத்தினார். ஆத்திரமடைந்த பரத்வாஜ் பலமுறை அகிலாவை கண்டித்தார். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு நீடித்தது. தினமும் என்.ஐ.டி., வரை அகிலாவை பின்தொடர்ந்து கண்காணித்து வந்த பரத்வாஜ், நேற்று அகிலா வீட்டருகே மறைந்திருந்த கண்காணித்தார். நேற்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து தந்தையுடன் என்.ஐ.டி.,க்கு சென்ற அகிலாவை பின் தொடர்ந்தார். கல்லுõரி கணிதபிரிவு கட்டிடத்தின் மாடிப்படிகளில் ஏறிச்சென்ற அகிலாவை பின்தொடர்ந்து சென்று மடக்கிய பரத்வாஜ், பேன்ட்டில் மறைத்து வைத்திருந்த பேனா கத்தியால் அகிலாவின் கழுத்தில் வேகமாக குத்தினார். ரத்தம் பீறிட்டு கொட்ட கீழே விழுந்த அகிலா துடிதுடித்து சிறிதுநேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சம்பவத்தை நேரில் பார்த்த மாணவர்கள் அலறி ஓடினர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பரத்வாஜ் கல்லுõரியியில் இருந்து தப்பி வெளியே ஓடினார். அவரை மாணவர்கள், என்.ஐ.டி., செக்யூரிட்டி அதிகாரிகள் மடக்கி பிடித்து துவாக்குடி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், பரத்வாஜை கைது செய்து விசாரிக்கிறார். எஸ்.பி., தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இச்சம்பவம் என்.ஐ.டி., மாணவ, மாணவியரிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. <b>விட்டுவைத்தால் பலரையும் ஏமாற்றுவாள் * பாடம் புகட்டவே கொலை: பரத்வாஜ்</b> பரத்வாஜ் போலீஸாரிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், "நானும், அகிலாவுக்கும் கடந்த மூன்று ஆண்டாக காதலித்து வந்தோம். மோசஸ் என்பவரை அகிலா காதலித்து என்னை ஏமாற்றி வந்தாள். அவளது தந்தையிடம் திருமணம் செய்து வைக்க கடந்த மார்ச் மாதம் கேட்டபோது, படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைப்பதாக கூறினார். ஆனால், அகிலாவை என்.ஐ.டி.,யில் சேர்த்துவிட்டார்.' "கடந்த 4ம் தேதி "நாமே பதிவு திருமணம் செய்து கொள்ளலாம்' என அழைத்தபோது அகிலா மறுத்தாள். நேற்று காலை கூட திருமணம் பற்றி பேசியபோதும் மறுத்தாள். பல்வேறு நபர்களுடன் தொடர்பு வைத்துள்ளதோடு என்னையும் ஏமாற்றியதால் அவளுக்கு பாடம் புகட்டவே அவளை குத்தி கொன்றேன்.' "இவளை விட்டு வைத்தால் மேலும் பலரை காதலித்து ஏமாற்றுவாள். எனவே தான் கொலை செய்தேன்' என கூறியுள்ளார். <img src='http://www.yarl.com/forum/files/imp-07_20b.jpg' border='0' alt='user posted image'> <b>பரத்வாஜ்</b> '' பெண்ணின் படம் இணைப்பாக மாற்றப்பட்டள்ளது - மோகன் - tamilini - 08-06-2004 பரத்வாஜ் பாடம் புகுட்ட வெளிக்கிட்டு கம்பி எண்ண போறார்....! - kuruvikal - 08-06-2004 <b>இது சுத்த காதல் பயங்கரவாதம்....! </b> பூண்டோடழிக்க மானிடர் நீவீர் உறுதி கொள்ளுங்கள்...! காரணம்....பயங்கரவாதிகளும் மானிடரே....! அழித்தொளிக்கப்படவேண்டிய காதல் பயங்கரவாதத்தின் வெறியாட்டத்துக்கு இலக்காகி மரணமான மாணவிக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்....! காதல் பயங்கரவாதத்தின் தாக்குதலுக்கு இலக்காகி இதயக்காயம் பட்ட மாணவருக்கு அனுதாபங்கள்...! ஆனால் பதிலுக்கு கொலைவெறி கொண்ட கொடிய காதல் பயங்கரவாதியானதற்கு கடும் கண்டனங்கள்...! - aathipan - 08-06-2004 பாவம் பரத்வாஜ் எதுக்கு இந்த வேலை. ஊரிலை வேறு பெண்ணா இல்லை.... யாரோ ஒரு பெண்ணுக்காக தன் எதிர்காலத்தை பாழக்கிடான். - வெண்ணிலா - 08-06-2004 :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> :oops: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- இராவணன் - 08-07-2004 கருத்து மூடப்பட்டுள்ளது. |