![]() |
|
காதல்... குற்றவாளி....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: காதல்... குற்றவாளி....! (/showthread.php?tid=6825) |
காதல்... குற்றவாளி....! - kuruvikal - 08-06-2004 <img src='http://kuruvikal.yarl.net/archives/lovely%20rose.jpg' border='0' alt='user posted image'> புனித காதல் தேசத்தில் பயங்கரவாதம் தலைகாட்டுகிறது... சுந்தரக்காதல் வீதியெங்கும் தடை முகாம்கள் முட்களால் பாதை விரிப்புக்கள் ஆங்காங்கே கண்ணிவெடிகள் கூடவே சென்றிகள் ஆயுதங்கள் உயிர்குடிக்கக் காத்திருக்க உளவு பாக்குது காமக் கண்கள்...! பாவம் மலர்கள் பாதியிலே பாடை ஏறுதுகள் செய்த பாவம் தான் என்ன...????! உயிரின்றி உடலுக்கு பாடம் கற்பிக்க காதல் பயங்கரவாதி....! மலரும் முட்களோடு பிறந்துவிட்டதால் கண்டபடிதான் இதயங்களை ரணமாக்கி மகிழ்கிறதோ...???! புனித காதல் தேசம் இன்று இரத்த வெள்ளத்தில்...! மீட்பர் யார் இறைவா பதில் சொல்லு....! காதலின் மூலம் நீதானே ஆதாம் ஏவாள் பாடம் சொல்கிறது சாட்சி....! மனித மனங்களை குழப்பி காதல் என்று பித்தராக்கி மகிழும் நீயே குற்றவாளி....! காதல்.... பயங்கரவாதத்தின் தலைவனும் நீயே...! நன்றி.. http://kuruvikal.yarl.net/ - kavithan - 08-06-2004 கவிதைக்கு நன்றி........... நன்றாக இருக்கிறது...பூவை வைத்து.. பூடகமாகவே காதல் கொடூரத்தை சொல்லி இருக்கிறீர்கள்... நன்றி..... எங்கு நன்மை இருக்கோ அங்கு தீமையும் இருக்கு...என்ன செய்ய. - tamilini - 08-06-2004 கவிதை நன்று.. வாழ்த்துக்கள்...! Re: காதல்... குற்றவாளி....! - வெண்ணிலா - 08-06-2004 மனித மனங்களை குழப்பி காதல் என்று பித்தராக்கி மகிழும் நீயே குற்றவாளி....! காதல்.... பயங்கரவாதத்தின் தலைவனும் நீயே...! <b> கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா</b> - vasisutha - 08-07-2004 கவிதை நன்றாக உள்ளது. நன்றி. |