Yarl Forum
„¡ì - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: „¡ì (/showthread.php?tid=6823)



„¡ì - AJeevan - 08-07-2004

<span style='font-size:21pt;line-height:100%'><img src='http://www.kumudam.com/kumudam/09-08-04/8t.jpg' border='0' alt='user posted image'>
நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு பேய்ப்படம். நிஜமாகவே பயப்படவைக்கும் படம். பல காட்சிகள் தூக்கிவாரிப் போடச் செய்கிறது.

'ஹீரோயிஸம்' வேண்டும் என்பதற்காக தங்களைக் கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொள்ளும் ஹீரோக்கள் மத்தியில் யதார்த்தமாய் ஒரு கேரக்டர் பண்ணியிருக்கும் பிரசாந்த் பாராட்டுக்குரியவர். மனைவிக்கு நேரும் பயங்கரங்களைப் பார்த்துச் செய்வதறியாமல் தவிக்கும் கணவன் பாத்திரத்தை அருமையாகச் செய்திருக்கிறார்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் சப்தம். கதவு திறக்கும் ஓசையிலிருந்து பேய் அலறும் ஓசை வரை ஏதோ நம் வீட்டிலேயே நடப்பது மாதிரி பிரமை. அதுவும் முதன் முதலாக மீனா பேயைப் பார்க்கும் காட்சி எல்லோரையும் திடுக்கிடச் செய்யும்.

புதிதாகக் கல்யாணமான இளம் ஜோடியிடம் இருக்கும் கவர்ச்சிகரமான நெருக்கத்தை பிரசாந்த்_மீனா இருவரும் இளமையாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பேய்ப்படம் என்பதற்காக எல்லா காரெக்டர்களுமே பேய் போல்தான் பேச வேண்டுமா? அதுவும் அந்த வேலைக்காரி கலைராணி டூ மச்சோ மச்.

இன்ஸ்பெக்டர் பரமசிவமாக தியாகராஜன். இழுத்து இழுத்துப் பேசினாலும் 'என் பொண்டாட்டி என்னை மெண்டல்னு சொல்றா' என்று வசனம் பேசும் போது சிரிப்பு.

பாடல்களே இல்லாமல் படத்தை எடுத்திருப்பது துணிச்சல். பின்னணி இசையும், பன்னீர் செல்வத்தின் காமிராவும் பலம்.

சூன்யக்காரியாக (அப்படித்தான் டாக்டர் சரத்பாபு சொல்கிறார்) வரும் சுஹாசினி கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு காண்டாக்ட் லென்ஸ் கண்களால் முறைத்துப் பார்ப்பதும் மாடிப்படி ஏறும்போது செத்துப் போன குழந்தை நின்று அப்படியே பார்ப்பதும் சிலீர்!
<img src='http://www.kumudam.com/kumudam/09-08-04/8p.jpg' border='0' alt='user posted image'>
ஓவராக கிராஃபிக்ஸ், அருவருக்க வைக்கும் மேக்கப், ரத்தம் ஏதுமில்லாமல் ஒரு சிறிய வீட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை மட்டும் வைத்து பயமுறுத்தலாய் ஒரு படம் எடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர்.

மிரட்டல்!</span>
kumudam