Yarl Forum
உங்கள் கருத்து - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: உங்கள் கருத்து (/showthread.php?tid=6815)



உங்கள் கருத்து - vasisutha - 08-08-2004

உங்கள் வாக்குகளை அளியுங்கள்.


- kavithan - 08-09-2004

vasisutha Wrote:உங்கள் வாக்குகளை அளியுங்கள்.



- vasisutha - 08-09-2004

என்ன ஆச்சு கவி?

edit/////
ஓ விளங்கிட்டுது . முதலில் உங்கள் கருத்துக்களை தாருங்கள் என்று எழுதியிருந்தது தானே?
ஏன் வம்பு வளர்ப்பான் என்று மாத்திவிட்டேன். :roll: :wink: ////


- kavithan - 08-09-2004

என்ன சொல்ல வாறியாள் வசி ?


வரதட்சணை ஒழிந்து விட்டதா..... நான் நினைக்கவில்லை ஒழிந்து விட்டது என்று.... ஒழியும் என்றும்... !.. ஆனால் இன்னும் பலர் வரதட்சணை வேண்டாமலும் திருமணம் செய்கிறார்கள் .... ! எல்லாமே குழபமாக தான் இருக்கிறது... பார்ப்போம் யாழ் கள நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. :roll:


reply - Thiyaham - 08-09-2004

தமிழர்களுடைய கலாச்சாரம், பண்பாடு அழியாமல் இருக்க நம்மில் பலர் பாடுபடுகின்றனர். இவை நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கும் வரை சாதி, வரதட்சணை ஒழியாது.
புலத்தில் நம் இளைய சந்ததியினர் தம் நிறத்தை இழந்து வருகின்றனர். இந்த இளைய சந்ததியினர் மீது அவர்களுடைய மூத்த சந்ததியின் ஆதிக்கம் இல்லாமல் போகும் போது இந்த சாதி வரதட்சணை என்பன செத்த நாயில் இருந்து உண்ணி விழுவது போல் இவையும் இல்லாமல் போகும். ஆனால் அப்போது அவர்கள் தமிழர்களாக இருக்க மாட்டார்கள்.

இந்த சாதி வரதட்சணையும் எமது கலாச்சாரமும் ஒரு நாணயதின் இரு பக்கங்கள் போல. இதில் எந்த பக்கத்தை நாம் பார்க்கிறோமோ மறு பக்கம் எமது கையில் ஒட்டி கொண்டிருக்கும்.

பதிலளித்து உற்சாகப்படுதினால் மீண்டும் தொடர்வேன்


- Eelavan - 08-09-2004

தியாகம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழரின் கலாச்சார பண்பாட்டிற்கும் சாதி வரதட்சணைக்கும் என்ன தொடர்பு
எப்படி இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்று விளக்க முடியுமா

வசி இப்போது வேண்டியது வரதட்சணை வாங்கமாட்டோம் என்ற வாக்குறுதிகளே தவிர வாக்குகள் அல்ல


- tamilini - 08-09-2004

வசி நல்லது உங்கள் வாக்கெடுப்பு இனிதே குழப்பமின்றி முடிய வாழ்த்துக்கள்... இல்லை எலச்சன் என்டாலே... மோசடியாமே அது தான. சொன்னம்....!


- Thiyaham - 08-09-2004

தமிழர்களுடைய மிக கேவலமான பழக்க வழக்கங்களில் இந்த சாதி வரதடச்சணையும் ஒன்று. இவற்றை தொன்று தொட்டு நாம் ஏன் பேணி பாதுகாத்து வருகின்றோம்? இவை தான் எமது கலாச்சாரம். எமது கலாச்சாரம் ஒழியும் வரை இவையும் தொடர் கதை தான்


- tamilini - 08-09-2004

Quote:எமது கலாச்சாரம் ஒழியும் வரை இவையும் தொடர் கதை தான்
_________________
என்ன தியாகம் எங்கள் கலாச்சாரம் ஒழிய வேணுமோ.....?


- vasisutha - 08-09-2004

உண்மையில் இதைப்பற்றி அறியத்தான் இந்த கருத்தினை போட்டேன். வாக்களித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. (எங்கே சோடா?) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- vasisutha - 08-09-2004

Quote:தமிழர்களுடைய மிக கேவலமான பழக்க வழக்கங்களில் இந்த சாதி வரதடச்சணையும் ஒன்று. இவற்றை தொன்று தொட்டு நாம் ஏன் பேணி பாதுகாத்து வருகின்றோம்? இவை தான் எமது கலாச்சாரம். எமது கலாச்சாரம் ஒழியும் வரை இவையும் தொடர் கதை தான்

எமது கலாச்சாரத்தில் இடையில் வந்து புகுந்ததுதான் வரதட்சணை என்று நினைக்கிறேன்.


- kavithan - 08-09-2004

tamilini Wrote:
Quote:எமது கலாச்சாரம் ஒழியும் வரை இவையும் தொடர் கதை தான்
_________________
என்ன தியாகம் எங்கள் கலாச்சாரம் ஒழிய வேணுமோ.....?
அதுதானே..... என்ன சொல்ல வாறியள் ...தியாகம் அண்ணா.... எமது காலாச்சாரம் ஒழிந்த பின் வரதட்சணை இருந்து என்ன ஒழிந்து என்ன....... நீங்கள் சொல்வது போல் கலாச்சாரம் ஒழிந்து கொண்டு தான் போகிறது... ஆனால் எமக்கு தேவை எமது கலாச்சாரம் காப்பாற்றபட வேண்டும், அத்துடன் வரதட்சணை ஒழியவேண்டும்..... நான் நினைக்கிறேன் நீங்கள் என்னவோ தவறாக எழுதிவிட்டீர்கள் என்று.... ஏதோ அவசரத்தில் எழுதினீர்களா... பார்ப்போம் உங்கள் கருத்தை..... Arrow :roll:


- kavithan - 08-09-2004

vasisutha Wrote:உண்மையில் இதைப்பற்றி அறியத்தான் இந்த கருத்தினை போட்டேன். வாக்களித்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி. (எங்கே சோடா?) <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->



இதில் தனித்து அங்கத்தவர்கள் மட்டும் தானே வாக்களிக்க முடியும்..... வாசகர்களையும் வாக்களிக்க கூடியதாக அமைத்திருக்கலாமே....... இங்கு 500 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தாலும் 20/30 உறுப்பினர்கள் தான் கருத்தாடலில் ஈடு படுகிறார்கள்..... எனவே இதனை வைத்து இவ் வாக்கெடுப்பு ஓரளவு கூட சரி என சொல்ல முடியாது ... எனவே வாசகர்களையும் இணைத்தால் நல்லது... இனி உங்கள் விருப்பம்.


- vasisutha - 08-09-2004

அப்படி செய்ய எனக்கு தெரியாதே. மோகன் அண்ணா தான் உதவி செய்யவேணும்.


- tamilini - 08-09-2004

இல்லை தம்பி... வாசகர்கள் என்ட பெயரில் வெளியில் விட்டால் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கையும் அழிக்க முடியும் இல்லை... அது தான் கள்ள ஓட்டு தம்பி.. எங்க இருக்கிறியள்..


- kavithan - 08-09-2004

tamilini Wrote:இல்லை தம்பி... வாசகர்கள் என்ட பெயரில் வெளியில் விட்டால் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கையும் அழிக்க முடியும் இல்லை... அது தான் கள்ள ஓட்டு தம்பி.. எங்க இருக்கிறியள்..
அதுக்கும் வழி செய்யலாம் தானே.... அதெல்லாம் நமக்கும் தெரியாது... அரிவரிதான் நாமும்.... உங்கள் ip ஜ வைத்து தடை செய்யலாம் என்று மட்டும் தெரியும்.. எல்லாம் மோகன் அண்ணாவின் கையில் தான். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- tamilini - 08-09-2004

அப்ப சரி...! தொடரட்டும்....!


- Thiyaham - 08-10-2004

உறுப்பினர்களாகிய நாங்கள் கூட ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிக்கலாம்.... <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :?:
ஏப்படி என்று கேட்டால் சொல்லி தருகிறேன்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


reply - Thiyaham - 08-10-2004

புலதில் நமது இழைய சமுதாயம் குறிப்பாக பாடசாலை மாணவர்களை எடுத்து கொண்டோமானால், பொதுவாக எல்லோரும் ஆளுக்கொரு காதலனையோ காதலியையோ வைத்திருக்கிறார்கள். அத்துடன் தன் காதலனையோ காதலியையோ இலங்கை தமிழர்களாகவே கொண்டிருப்பதை பரவலாக இருப்பதை காண முடிகிறது.
இந்த காதலர்களில் எத்தனை பேர் பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி மணம் முடிப்பர்? அப்படி மணம் முடிக்கும் தம்பதியினரிடம் தான் "வரதட்ச்சணை" என்ற சொல் மங்கி கொண்டு செல்வதை எதிர்பார்க்க முடியும்


- vasisutha - 08-10-2004

Quote:உறுப்பினர்களாகிய நாங்கள் கூட ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிக்கலாம்....
ஏப்படி என்று கேட்டால் சொல்லி தருகிறேன்..

அது எல்லாருக்கும் தெரியும் தானே. கணணி வைச்சிருக்கிறம். இந்த சின்ன விசயம் கூட தெரியாவிட்டால் எப்படி. :mrgreen:

Quote:இந்த காதலர்களில் எத்தனை பேர் பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி மணம் முடிப்பர்? அப்படி மணம் முடிக்கும் தம்பதியினரிடம் தான் "வரதட்ச்சணை" என்ற சொல் மங்கி கொண்டு செல்வதை எதிர்பார்க்க முடியும்
சரிதான் நீங்கள் இப்படி சொல்கிறீர்கள். எனக்கு தெரிந்து எத்தனையோ பேர் காதலித்து சீதனமும் வாங்கி கலியாணம் கட்டி இருக்கிறார்கள்.