![]() |
|
தேவைதானா? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4) +--- Forum: புலம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=21) +--- Thread: தேவைதானா? (/showthread.php?tid=6708) |
தேவைதானா? - ganesh - 09-17-2004 கடந்த இருவாரங்களாக ஐரோப்பிய வானொலியொன்றில் சுவிற்ஸ்லாந்தில் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பசண்டை இறுதியில் கணவன் பொலிசாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட செய்தியை யாவரும் அறிந்திருப்பீர்கள் இது நடந்த பல மாதங்களாகி விட்டது கணவனை இழந்தஅப்பெண் தற்போது ஓரளவு மனம்தேறி வரும் நிலையில் இச்சம்பவத்தைபற்றி வானொலியில் ஆராச்சிமணி என்ற பெயரில் அநேகமானோர் தமது கருத்தை அப்பெண்ணுக்கு ஆதரவாகவம் எதிராகவும் தெரிவித்து வருகிறார்கள் இதனால் அப்பெண்ணின் வாழ்ககையில் மீண்டும் துயர் வரலாம் என்பது எனது கருத்து ஆகவே இக்கருத்தை வானொலிக்கு அனுப்பிய ரவி என்பவர் அதனால் அப்பெண் பாதிக்கப்படலாமா அல்லது இல்லையா இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன என்பதை ஓரளவு ஆராய்ந்த பின் வானொலிக்கு னொண்டுவந்திருக்கலாம் என்பது எனது கருத்து அதனைவிட இதனை தொகுத்து வழங்குபவரும் இதனைப்பற்றி சிந்தித்தபின் அல்லது அப்பெண்ணின் அனுமதியுடன் மட்டும் வானொலிக்கு எடுத்துவந்திருக்கலாம் மரத்தால் விழுந்தவனை மாடேறிமிதித்த கதையாக இருக்கக்கூடாது எனது கருத்துமட்டும் இது உங்கள் கருத்து என்ன ? - tamilini - 09-17-2004 மன்னிக்கவும் இது பற்றி விளக்கமாக எழுதுங்கள் எமக்கு எதுவும் தெரியாதே.. என்ன நடந்தது...??? தெரிந்தவர்கள் கு}றுங்கள்...! - ganesh - 09-17-2004 இச்சம்பவத்தை இதில் விரிவாக எழுதுவது விரும்பத்தக்கது அல்ல விரும்பினால் மின்கடிதம் மூலம் தொடர்புகொண்டால் மேலதிக விபரங்கள் தரலாம் - tamilini - 09-17-2004 அப்படியா..?? மற்றவர்களிக்கு தெரிந்திருக்கும் பதில் சொல்வார்கள்... என்று நினைக்கிறேன்...! - ganesh - 09-17-2004 சுவிஸில் இலங்கைத் தமிழர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலி சுவிற்சர்லாந்து நாட்டில் லங்சான் என்ற நகரத்தில் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது:- கணவருக்கும் மனைவிக்கும் இடையில் கடந்த திங்கள் இரவு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி தொலைபேசி அழைப்பின் மூலம் பொலிசுக்கு முறையிட்டு பொலிஸாரை வரவழைத்துள்ளார். பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்ததும் கணவன் சமையலறைக்குள் சென்று கத்தியை எடுத்துச் சென்று பொலிஸாரைக் குத்தியுள்ளார். இதில் ஒரு பொலிஸ்காரர் காயமடைந்தார். அடுத்த பொலிஸாரை நோக்கி கத்தியுடன் செல்கையில் அந்தப் பொலிஸ்காரர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் குறித்த நபர் அந்த இடத்திலேயே பலியானார். இறந்தவர் 8 வயது, 6 வயது, 4 மாதக் குழந்தைகளின் தந்தையாவார். அவரது மனைவி 25 வயதுடைய இளம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. - ganesh - 09-17-2004 பழையசெய்தியை மீண்டும் இணைக்கவேண்டியபடியால் இணைத்துள்ளேன் அன்பான சகோதரியே அந்தபெண்ணின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இவ்முறைப்பாட்டை இடைநிறுத்துவது நல்லது - kuruvikal - 09-18-2004 உதுகளச் சொல்லி மிச்சாக்கள அலேட் பண்ணுறாங்களாக்கும்...என்றாலும் குறிப்பிட்ட நபர்களின் Privacy பாதிக்கப்படாமல் இருப்பதை குறிப்பிட்ட செய்தி தயாரிப்ப்பவர்கள் பக்குவமாக கவனிக்க வேண்டும்...!
- ganesh - 09-18-2004 அந்தபெண் மீது குறைகூறுவதை ஏற்கமுடியாது இந்நிகழ்சியை அந்தபெண் கேட்கமாட்டார் என்று நினைக்கிறேன் கேட்காமல் இருப்பது நல்லது - tamilini - 09-18-2004 நான் கு}ட கண்ணிடிருக்கிறன் சின்ன பிள்ளைகள் கு}ட வெருட்டி அடிக்க போணால் 999 அடிப்பேன் என்று.. கு}றுகpறார்கள் என்று சிலர் கதைத்ததை..[தங்கள் பிள்ளைகள் புத்தி சாலிகள் என்று கு}றியதை] இதை பற்றி மேலும் கதைப்பது மற்றவர்களுக்கும் இப்படி செய்யலாம் என்று விபரம் கு}றுவது போன்றதாகும்... அதற்காக கணவன் கத்தி து}க்கிற அளவிற்கு போறது ஓவர் தான்... பேசி தீக்கிறதிற்கு கத்தி எல்லாம் எடுத்திருக்கிறார்கள்.. அதுவும் 3 குழந்தைகளின் பெற்றோர்... கணவனை பொலீஸ்சில் பிடித்து கொடுக்க மனைவி துணிந்தார் என்றால் புரிந்து உணர்வு அன்பு பாசம் இவை எல்லாம் எங்கே போனது...???? :? hock: hock:
- ganesh - 09-18-2004 இந்த சம்பவம் நடந்துபல மாதங்களாகிவிட்டது அப்பெண் மதுபோதையில் இருந்த கணவனிடம் இருந்து தன்னையும் தமது பிள்ளைகளையும் காப்பாற்றதான் இந்த முடிவை எடுத்திருக்கலாம் ஆனால் கணவனைக்கொலைசெய்ய அல்ல ஆனால் அந்த பொலிஸ்காரர் துப்பாக்கியை எடுத்தது தவறு ஆகவே இனிவரும் காலங்களில் அப்படியான சம்பவங்கள் நடக்ககூடாது ஆகவே வேறு தலைப்புகளில் முறைப்பாட்டை வைத்து கருத்தை பரிமாறுவதுதான் நல்லது மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் உள்ளது இந்த முறைப்பாடு ஆகவே பணிப்பாளரே இந்நிகழ்ச்சியை வானொலிக்கு எடுத்து வரும் சகோதரியே அப்பெண்ணை உங்கள் சகோதரிபோல் எண்ணி இந்முறைப்பாட்டை உடனடியாக நிறுத்துங்கள் குடும்பசண்டையை வானொலிக்கு எடுத்துவராதீர்கள் மதுவினால் ஏற்படும் தீமைகளைப்பற்றி வேறொரு தலைப்பின் மூலம் முறைப்பாடு வையுங்கள் - ganesh - 09-18-2004 தயவுசெய்து இவ்முறைப்பாட்டை சங்கமம் வானொலியின் பணிப்பாளருக்கு தெரிவியுங்கள் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு ஆதரவை வழங்குங்கள் ஆனால் அப்பெண்செய்ததுதவறுதான் என்று இனியும் குறைகூறாதீர்கள் - ganesh - 09-19-2004 எரிகிற வீட்டிற்கு எண்ணை ஊற்றுவதா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதா? எங்கே அந்தபெண்கள் உரிமைக்கு குரல்கொடுப்பவர்கள்? நிறுத்துங்கள் இந்த முறைப்பாட்டை தயவுசெய்து இப்பெண்ணின் உறவினர் யாரினானாவது தகவலைத்தெரிவீர்களா? அவர்கள் மூலம் நிறுத்துவோம்) |