![]() |
|
உள்ளே உள்ளது பால்வெளியே.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: உள்ளே உள்ளது பால்வெளியே.... (/showthread.php?tid=6696) |
உள்ளே உள்ளது பால்வெளி - சுடரோன் - 09-23-2004 எண்ணமோ வைராக்கிய விதை, மனமோ பசுமை நேசவயல்.... எதைக் களைவது? எதை வளரவிடுவது? ஓடும் ஆசைகள் ஓடட்டும் வளரும் அன்பு வளரட்டும் அறிவே என்னறிவே என்னை அறிவிப்பாயா? என்னுள்ளே என்னை ஒளிர்விப்பாயா? நானே இயக்கும் நாடகத்தில் நானே நடிகன் என்னை இயக்கும் அறிவே அறிவி என்னை அறிவி என்னுள்ளே என் குரு என்னுள்ளே என் வைத்தியன் என்னுள்ளே என் தேவன் சுற்றிலும் காதல் தேவதைகள் பற்றிடும் காதல் ஜோதி நான் மனதில் எழும் விநோதம் புத்தம் புது யுகமாய் மலரும் என்னுள்ளே என் ஆவி எழட்டும் எட்டட்டும் எட்டுத் திசையெங்கும் என்னுள்ளே ஜோதி என் வெளியோ வெளிச்சம் மனமே அறி அறிவே மனம் உள்ளே உள்ளது பால்வெளியே....<img src='http://www.tsao5916.com/Milkway.jpg' border='0' alt='user posted image'> - shanmuhi - 09-23-2004 Quote:என்னுள்ளே என் குருஎல்லாமே என்னுள்ளே ஆகி வடித்த கவிதை அருமை. வாழ்த்துக்கள்.... - ஆவி - 09-23-2004 கவிதை அருமை எல்லாமே என்னுள்ளே மனசாட்சிபோல் மௌனமாய் உள்ளதோ...............எம்மில் பலருக்கு?????? - tamilini - 09-23-2004 Quote:நானே இயக்கும்கவிதை அருமை.. மேலும் கவிதை வடிக்க வாழ்த்துக்கள்...! - kavithan - 09-23-2004 கவிதை நன்றாக உள்ளது தொடர்ந்து எழுதுங்கள் சுடரோன் அண்ணா - kuruvikal - 09-24-2004 வாழ்வியல் தத்துவம் விஞ்ஞானம் கடந்து மெஞ்ஞானம் மிளிர சுடராய் தந்து சுடர்விடும் சுடரோனுக்கு.... தான் கொண்ட கவித்திறன் இக்களத்தில் நிலையாய் சுடர்விட வாழ்த்துக்கள்....! |