Yarl Forum
'சந்திரமுகி'-முதல் தகவல் அறிக்கை! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: சினிமா (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=39)
+--- Thread: 'சந்திரமுகி'-முதல் தகவல் அறிக்கை! (/showthread.php?tid=6652)



'சந்திரமுகி'-முதல் தகவ - yarl - 10-04-2004

'சந்திரமுகி'-முதல் தகவல் அறிக்கை!

ரஜினியை போலத்தான் அவரைப் பற்றிய செய்திகளும். ஒரு முறை சொன்னால் நூறு வகையாக அது மாறிவிடும். 'சந்திரமுகி' படத்தை அறிவித்ததிலிருந்து 'ஜக்குபாய்' முதல் 'சந்திரமுகி' கதை வரை நூறு விதமான அபிப்ராயங்கள். ஆனால் உண்மை என்ன? இதோ, 'சந்திரமுகி'யின் முதல் முழுமையான தகவல் அறிக்கை.


* தேர்தல் வேலையில் ரசிகர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவதற்காக கதை ரெடி பண்ணாமலே ரஜினியால் அறிவிக்கப்பட்ட படம் 'ஜக்குபாய்'.



* பிறகு தயாரான கதையின் பிற்பாதி ரஜினிக்கு பிடிக்கவில்லை. ரஜினி சொன்ன கதை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாருக்கு பிடிக்கவில்லை.



* பி. வாசு கன்னடத்தில் இயக்கிய 'ஆப்த மித்ரா' படத்தை பார்த்த ரஜினி அவரை அழைத்து பாராட்டியிருக்கிறார். கிடைத்த சந்தர்ப்பத்தில், உங்களுக்கேத்த ஒரு கதை என்கிட்ட இருக்கு என்று கூறியிருக்கிறார் பி. வாசு.



* சென்னை வந்த பிறகு ரஜினியிடம் பி. வாசு கதையை கூற, ரஜினியிடம் நோ, ரியாக்ஷ்ன்.



* சரி, மேட்டர் அவ்வளவுதான் என குருவாயூருக்கு சாமி கும்பிட பி. வாசு கிளம்பியிருக்கிறார்.



* நடுவில் ராம்குமாரிடம் பேசிய ரஜினி, பி. வாசு என்னிடம் ஒரு கதை சொன்னார். ரொம்ப நல்லா இருக்கு. சிவாஜி பிலிம்ஸ் அந்தப் படத்தை தயாரிக்கலாம்னு நான் ஆசைப்படறேன் என்று கூறியிருக்கிறார்.



* அடுத்த வினாடி குருவாயூரிலிருந்த பி. வாசுவின் செல்போனில் அழைப்பு. எதிர்முனையில் பேசிய பிரபு, வாசு நம்ம சிவாஜி புரொடக்ஷ்னுக்காக ரஜினிசார் நடிச்சுக் கொடுக்கறார். நீங்கதான் டைரக்டர் என இன்ப வெடியை வீசியிருக்கிறார்.



* சிவாஜி புரொடக்ஷ்ன் மலையாளத்தில் வெளியான 'மணிசித்ர தாழ்' படத்தின் ரீ-மேக் உரிமையை வாங்கியிருக்கிறது. வாசு சொன்ன கதையும் இந்தப் படத்தின் கதையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக்குழந்தைகள் போல அத்தனை ஒற்றுமை.



* 'மணிசித்ர தாழ்' மோகன்லால், சுரேஷ்கோபி, ஷோபனா ஆகியோர் நடித்தது. இதற்கு முன்பு மோகன்லால் ஷோபனா நடித்த 'தேன்மாவின் கொம்பத்து' படத்தைத்தான் நிறைய மாற்றங்களுடன் 'முத்து'வாக எடுத்தார்கள்.





* 'தேன்மாவின் கொம்பத்து' ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்துக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது.



* 'மணிசித்ர தாழ்' சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான தேசிய விருதை பெற்றது.



* 'சந்திரமுகி' படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகர். ஒளிப்பதிவு, 'ஒக்கடு' படத்தின் கேமராமேன் சேகர் ஜோசப்.



* விஜயகுமார், வடிவேலு இந்தப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் சிம்ரன் (90% அவர்தான் என முடிவாகியுள்ளது) இன்னொருவர் ரீமாசென்னா அல்லது பாலிவுட் பைங்கிளியா என்பது ரஜினி கையில்!



படத்தின் பூஜை நவம்பர் முதல் வாரம் போடப்பட்டு அப்படியே ஷூட்டிங் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.



* நெடுநாள்களாக படம் தயாரிக்காமலிருந்த ஏ.வி.எம் 12 வருடங்களுக்குப் பிறகு தயாரித்த படம் ரஜினியின் 'முரட்டுக்காளை'. படம் சூப்பர் ஹிட்!



* நெடுநாள்களாக படம் தயாரிக்காமலிருந்த சிவாஜி புரொடக்ஷ்ன் 12 வருடங்களுக்குப் பிறகு தயாரிக்கப் போகும் படம் ரஜினியின் 'சந்திரமுகி'. படம்....?



கோடிட்
ட இடத்தை பட ரிலீசுக்குப் பின் நிரப்பிக் கொள்ளுங்கள்!




http://tamil.cinesouth.com/masala/hotnews/...4102004-5.shtml


- kavithan - 10-04-2004

நன்றி அண்ணா... தகவலுக்கு


- பரஞ்சோதி - 10-04-2004

சந்திரமுகி கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். நல்லவர்களை இறைவன் சோதிப்பார், ஆனால் கை விட மாட்டார்.


- hari - 10-05-2004

பரஞ்சோதி Wrote:சந்திரமுகி கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும். நல்லவர்களை இறைவன் சோதிப்பார், ஆனால் கை விட மாட்டார்.
ரஜனி நல்லவர் என எப்படி கண்டுபிடிச்சிங்க?


- Thusi - 10-05-2004

ஆண்டவன் கைவிடுகிறாரோ இல்லையோ அது ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஆனால் மக்கள் தான் கைவிட்டுவிட்டார்களே - கடந்த தேர்தலில்.

இந்தக் காலத்திலையும் இப்படிக் கதைக்கிறது கவலையாக இருக்கிறது.